15 November 2011

இன்னா செய்தாரை...

கவிஞர் தேவதேவன் இன்னார் என்கிற கவிதையில் தன்னைத்தான் திட்டுகிறார் என்று, எழுத்தாளர் ஜெயமோகன் உறுதியாக நம்பியதால்தான் திற்பரப்பில் 29.05.2011ல் தேவதேவன் கவிதை அரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்றுகூட இந்தக் கவிதையைப் படித்ததும் தோன்றியது.


தமிழ் பண்டிதர் எழுதிய கட்டுரை போன்ற மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறிய மாற்றம் மட்டுமே.

அதாவது, இன்னார் என்று வரும் இடத்தில் எல்லாம் லார்டு லபக்குதாஸ் என்று மாற்றி படித்துப் பாருங்கள். நான் சொல்வது எத்துனை சத்தியம் என்பது புரியும்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
- தாயுமானவர்

Saturday, March 26, 2011

இன்னார்

என்று காணப் போகிறானோ,
தான் இன்னாரென்று கருதிக் கொள்வான்
ஆகப் பெரிய கொலைக் கருவியைத் தான்
தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளான் என்பதை?

தான் இன்னாரென்பதை ஏற்காதவனன்றோ
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்
அன்பு தன்னுள் சுரக்கக் காண்கிறான்

தான் இன்னாரென்று காட்டிக் கொள்வதற்குத்தான்
எத்தனை பாடு இந்த முட்டாள் மனிதர்களுக்கு!
இன்னார் என்றில்லாதிருப்பதுவோ
எத்தனை சுலபமென்னும் எத்தனை ஆபத்து
இம் மூடர் மத்தியில்!
அதனால்தானோ அவர்கள் மறைந்து வாழ்கிறார்கள்?
இல்லை, அப்படித் தெரிகிறார்கள்,
இன்னார்கள் கண்களுக்கு மிகுதியும்
இன்னார்கள் மட்டுமே தென்படுவர் ஆதலால்

- தேவதேவன்