08 November 2011

ஞானியும் மூடனும்


ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால் 
கல்பாக்கத்தால் சென்னைக்கு ஆபத்து 
என்கிற தீம்தரிகிட போஸ்டர் பெட்டிக்கடையில் தொங்கியது 
நினைவுக்கு வருகிறது.

இன்னமும் சென்னையில்தான் இருந்துகொண்டு இருக்கிறீர்கள்.
அப்போது கல்பாக்கத்தை எதிர்த்ததுபோலவே 
இப்போது கூடன்குளத்தையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, 
தினமும் கல்பாக்கத்திற்குப் பக்கதில் இருக்கும் செங்கல்பட்டிற்குப் 
போய்வந்து கொண்டிருப்பவனாக இருந்துகொண்டேதான் இதை எழுதுகிறேன். 
ஒருமுறை அலுவல் நிமித்தமாய் 
கல்பாக்கத்திற்குள்ளும் போய் வந்திருக்கிறேன். 

விமானங்கள் எப்போதேனும் விபத்துக்கு உள்ளாகின்றன என்பதற்காக 
விமானப் பயணமே கூடாது என்பது அறிவார்த்தமா? 

கால்நடைப் பயணத்தில் விபத்திற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான், 
ஆனால் அது இன்று நடைமுறை சாத்தியமா?

முற்போக்காளராய் இருப்பதென்பதே 
இன்னொருவிதமான மூடநம்பிக்கைபோலும்.

ஞானியாய் இருப்பதைவிட 
மூடனாய் இருப்பதில்தான் எத்துனை நிம்மதி.