22 November 2011

பிரதி வாதிப்பதில்லை


***

Siva Sankar ***@yahoo.in 5:02 PM (1 hour ago) to me

மாமல்லன் அவர்களுக்கு
வணக்கம்.

" கட்டுரையில் இருக்கும் தகவல்கள் உண்மை, கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணத்தின் காரணமாய் எழும் எண்ணமாக இருக்கலாம்."

    கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணம் எனக்கு கிடையாது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் சு.ராவின் குடும்ப சூழ்நிலைகள் பற்றி வரும் தகவல்கள் கற்பனை என்று என்னுபவனும் அல்ல அது எப்படி இலக்கியமாக மாறுகிறது என்று விதந்தோதவே செய்கின்றேன். அதற்காக வெறும் தகல்வகள் மட்டுமே ஏராளமாக உள்ள பாலகுமாரன் நாவல்களோ அல்லது வசந்த் தோன்றும் சுஜாதா நாவல்களோ கதைகளாகவும் முடியாது என்ற எண்ணம் எனக்கு உண்டு.

"எழுதும்போது தன்னையும் பாத்திரமாக்க முடிய வேண்டும். ’தன்’ நிறைகுறைகளைத் தள்ளி நின்று, ஒரு பாத்திரம்போல் பார்க்கையில்தான் என் பார்வையில் ஒருவனை எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வேன்."

எனக்கும் அதில் உடன்பாடே. குறிப்பிட்ட இந்த கதையில் அது எங்கே நிகழ்கிறது?

"இலை என்ன 81ல் ஆறு லட்சம் விற்றுக்கொண்டிருந்த குமுதத்திலா வெளியாயிற்று? கணையாழியில்தானே வந்தது. கணையாழியும் அப்போது சிறுபத்திரிகைதானே."

  கணையாழியில் வரும் இலை கதை நிறப்பிரிகையில் வருமா? கிரணத்தில் வரும் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு கதை கணையாழியில் வருமா?  கணையாழி என்றும இடைநிலை பத்திரிக்கையாகவே செயல்பட்டு வந்தது. நான் கேட்க வந்ததை சரியாக எழுதவில்லை. என்னளவில் இலையும் சரி நிழலும் சரி என்றுமே மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்த கதை. எனினும் இலை - தி.ஜா. அ.மி. வண்ணநிலவன். வண்ணதாசன் பள்ளி. நிழல் - வேறு பள்ளி. தாங்கள் ஒவ்வொரு பத்திரிக்கைக்கு ஒவ்வொரு மாதிரி எழுதும் தற்போதைய இணைய பிரம்மாக்கள் அல்ல. அதுபோன்று நான் எழுதியதாக தங்களுக்கு தோன்றினால் மன்னிக்கவும் (அது தங்களது எழுத்தை நான் கொச்சைப்படுத்தியதாகும்). 

"எல்லாத்தையும் ஒரே மாதிரி எழுத முடியுமா, ஒண்ணு நன்னா வரும் ஒண்ணு சுமாரா இருக்கும்."

என் ஒரே மாதிரி எழுதவில்லை என்று கேட்கவில்லை. மாமல்லனை தகவல்சார் அறிவுஜீவியாக என் மனம் ஏற்கவில்லை. காத்திருந்து வரும் டியுலிப் மலர் போல் (நன்றி- அ.முத்துலிங்கம் அ.மியை பற்றிய கட்டுரை) வரவேண்டும் என்பதே. எனது ஆதர்சமாக இருந்த அனைத்து எழுத்தாளர்களும் அதே போன்றே எழுது வேண்டும் என்பதே என் பேராசை.

"கூர்த்த வாசிப்பிலேயே இணைப்புக் கண்ணிகள் பிடிபடக்கூடும்."

எனக்கு ஏன் அந்த கதையில் பிடிபட்டது இதில் பிடிபடவில்லை என்று என் வாசிப்பு போதாமையை வைத்தே நான் எழுதிய அந்த கடிதம்(மெயில்).

" பத்து வருடம் கழித்தாவது அவருக்குப் புரிந்ததும் அதைப் பாசாங்கின்றி தன் தளத்தில் அவர் ஒப்புக்கொண்டார் என்பதும்தான் எனக்கு மகிழ்ச்சி."

 சு.ராவின் மீக தீவிர பக்தன் நான். ஆனால் அவரின் தொகுப்புகளில் உள்ள கால வரிசைகளில் வரும் முதல் சிறுகதைகளை இனி பயில வருபவர்களிடம் அவசியம் படிக்க வேண்டியது என்று பரிந்துரைக்க மாட்டேன். (நான் என்ன இலக்கிய கமிசார் வேலை பார்ப்பது?)

பத்து வருடம் கழித்தும் மாமல்லன் எழுத்தில் இலை. நிழல். முடவன்-போன்ற கதைகளுக்கான இடத்தில் பயம் வருமா? (இலக்கியத்தை தீர்மாணிப்பதில் வாசகர்கள் பங்கும் உண்டு என்ற பின்நவினத்துவ கோஷடியரின் உதவியோடு - எனக்கும் பங்கு உண்டு என்று முந்தைய வரியை எழுதியுள்ளேன். பிழை பொறுக்கவும்.(தவறு இருந்தால்)

Natpudan

<அது எப்படி இலக்கியமாக மாறுகிறது>
 
மொக்கை என்று படுகிறதா? நன்றி. இருந்துவிட்டுப்போகட்டும்.
 
"எழுதும்போது தன்னையும் பாத்திரமாக்க முடிய வேண்டும். ’தன்’ நிறைகுறைகளைத் தள்ளி நின்று, ஒரு பாத்திரம்போல் பார்க்கையில்தான் என் பார்வையில் ஒருவனை எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வேன்."
 
<இந்த கதையில் அது எங்கே நிகழ்கிறது?> 
 
’என்’ என்று வரும் இடமெங்கும்.

<பத்து வருடம் கழித்தும் மாமல்லன் எழுத்தில் இலை. நிழல். முடவன்-போன்ற கதைகளுக்கான இடத்தில் பயம் வருமா?>
 
இன்றும் என்றும் எந்த இடத்தில் எது வரும் வராது என்பதெல்லாம் நிரந்தரமில்லை. பயத்தை விடவும் நல்ல கதை எழுதவேண்டும் அவ்வளவுதானே எழுதிவிட்டால் போயிற்று. காத்திருக்கும் கதைகளின் பட்டியில் மிக நீண்டது.