17 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 16 டிசம்பர் 11

இந்தப்படத்தின் முதல் பத்து நிமிடங்களைப் பாருங்கள். கால்பந்தாட்டக் கலவரம் போலந்து பட்ஜெட்டுக்குள் இவ்வளவு அட்டகாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் போகப்போக ஹாலிவுட்படம்போல் ஆகிவிடுவது துரதிருஷ்டம்.Flying Pigs / Dir: Anna Kazejak-Dawid / Poland / 2010 / 99 Min

அடுத்தது இரண்டு பெண்களைக் காலில் சங்கிலியால் கட்டி வைத்து கொடூரமாய் இம்சிக்கும் The Truth of The Lie என்கிற ஜெர்மன் படம். ஆரம்பத்திருந்து ஒரே இம்சையாய் இருக்கவே வெளியேறிவிட்டேன். ஜெர்மன் படங்கள் சிறப்பாய் இருந்தால் Tin Drum அளவிற்கு மிகச்சிறப்பாய் இருக்கும் இல்லையே சமயத்தில் இப்படி குரூரக்கூத்தாகிவிடவும் வாய்ப்புண்டு.

மியூசிக் அகாதெமியில் பிரமாதமான மதியச் சாப்பாடு 130 ரூபாய். இந்தக்கட்டு கட்டினா படம் பாக்கறது கஷ்டங்க என்றார் கவிராஜன். வயிற்றைக் கட்டலாம் வாயைக்கட்ட முடியுமா?

Tree of Life என்கிற ஆன்மீகப் படம் மனிதன் பிறப்பு கடவுள் என்று கலர்க்கலர் காலண்டர்கள் ஸ்கிரீன்சேவர்களைத் திரையில் காட்டி அசத்திக்கொண்டிருந்தார்கள் ஹாலிவுட் அறிஞர்கள். பத்மநாபனின் நளபாகம் மெல்ல தன் வேலையைக் காட்டத்தொடங்கியதில் ரம்மியமான தூக்கம். திடுக்கிட்டு விழிப்பு வரும்போதெல்லாம் ஆதுரமாய் தலையை வருடிக்கொடுத்து ஒன்றும் குடிமுழுகிப்போகவில்லை நிம்மதியாய்த் தூங்கு என்பது போல கிராபிக்குகள் கண்களைக் கட்டி இழுத்து சொக்க வைத்துக்கொண்டிருந்தன.

ஹாலிவுட்காரர்களின் கோட்டையே சும்மா கதை சொல்லுவதில்தான் இருக்கிறது. ஆத்தும சரீர சுகமளிக்கும் சுவிசேஷ கூட்டங்களாய் இதுபோல், நானும் சிறந்த சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று முயலும்போதெல்லாம் சிரிப்புக்குள்ளாகவே நேர்கிறது.

80களின் தொடக்கத்தில் பீட்டர்ஸ் காலனியில் இருந்த ஞாநி வீட்டில் அக்கினிபுத்திரன் உதிர்த்த ஞானமொழிதான் நினிவுக்கு வருகிறது.

ஐரோப்பியப் படங்களைப் பார்த்துப் புரிந்துகொள்வதைவிட, ஹாலிவுட் படம் பார்ப்பதுதான் கஷ்டம்.

ஐரோப்பிய மொழிகளெல்லாம் நமக்கு வெறும் சத்தம்தானே இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே என்று எல்லோரும் பயங்கர ஆச்சரியமாய்ப் பார்த்தோம்.

ஹாலிவுட் படத்துக்கு சப் டைட்டில் போடறது இல்லை இல்லீங்களா! அதான், என்று அமைதியாகச் சொன்னார் அக்கினி புத்திரன்.

இந்த வருட சென்னை திரைப்பட விழாவின் மிகச்சிறந்த படங்களுக்குள் ஒன்றாக அமையக்கூடிய படமாக THE SNOWS OF KILIMANJARO என்கிற இந்த ஃப்ரென்ஞ்சுப் படத்தைக் கூறலாம். மனதை நெகிழ வைப்பதில் இந்தப் படம் சிலருக்கு சிறந்த அன்மீக அனுபவத்தையும்கூடக் கொடுக்கக்கூடும். இடதுசாரி முற்போக்காளர்களுக்கோ தொழிற்சங்கம் மார்க்ஸ் சந்தைப்பொருளாதாரம் போன்ற மேற்கோள் உரையாடல்கள் ஆன்மீகப் பரவசத்தைக் கொடுக்கக்கூடும்.

சும்மா சினிமா பார்க்கலாம் என்று சென்றவர்களுக்கு என்னென்னவோ கிடைக்கக்கூடும்.

மறு திரையிடலாய் 17.12.11 இரவு 8.15 மணிக்கு தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் திரையிடப்பட உள்ளது தவறவிடவேண்டாம்.

உட்லண்ட்ஸ்ஸில் படம்பார்க்க பால்கனிக்குப்போக இருந்தவன், வழியில் தென்பட்ட நண்பன் சம்பத் சிம்ஃபனிக்குப் போகப்போவதாய்க் கூறவும் மனதை மாற்றிக்கொண்டேன். உள்ளேபோய் உட்கார்ந்ததென்னவோ வெவ்வேறு இடங்களில். படம் முடிந்து வெளியில் வருகையில் பாதி வெளிச்சத்தில் நெகிழ்வின் பிதற்றல் என் முகத்தில் தெரிந்துவிட்டது போலும். நெட்புக்கை ஓப்பன் பண்ணி டைப்படிக்க ஆரம்பிச்சுட வேண்டியதுதானே என்றான் சம்பத். படத்தைப் பற்றி விம்மி விம்மிப் பேசிக்கொண்டிருக்கையில் அதே படத்திலிருந்து வெளியில் வந்தவர்களுக்கிடையில் நண்பர் விசுவைப் பார்த்ததும் பயங்கர குஷியாகிவிட்டது. 

படத்தைப் பற்றியும் அதன் திரைக்கதைக்குள் இருக்கும் இணைப்புக் கண்ணிகளைப் பற்றியும் எழுதுவதென்றால் பக்கம்பக்கமாய் எழுதிக்கொண்டே போகலாம். 

மணிரத்தினத்தின் ஆரம்பகால ‘அற்புதம்’ என்று இன்றைக்கும் ;போற்றப்படும்’ மெளனராகத்தில், இடைவெளிக்கு முன்னால் ‘நீங்க தொட்டா கம்பளிப்பூச்சு ஊறுறாப்புல இருக்கு’ என ரேவதி சொல்வதை, இடைவேளைக்குப் பின் இளகிவரும் ரேவதியிடம், ’நான் தொட்டா உனக்குக் கம்பளிப்பூச்சி ஊறுறாப்புல இருக்கும்’  என்று மோகன் கூறும் அச்சுபிச்சு வசனத்திற்கே டக்கர் டைரக்‌ஷன்மா என்று உச்சு கொட்டும் A கிளாஸ் ரசிகக் குஞ்சுகள் இன்றைக்கும் இருக்கும் சூழலில், கதை நாயகன், கைப்படப் பெயர் எழுதிய காமிக் புத்தகம் ஒன்று படத்தில், கடைசிக் காட்சிவரை வகிக்கும் பங்குபற்றி எப்படி வியப்பது என்றே தெரியவில்லை. 

படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் அவரவர் தரப்பிற்கான, ‘மகாபாரத’ நியாயம் இருக்கிற பன்முகத்தன்மையை என்னவென்று சொல்வது? 

இன்றைய கடைசிப்படமாய் அமைந்தது,  இன்னொரு நல்ல படம். மற்றுமொரு பிரெஞ்சுப்படம்.

முந்தைய படத்தை டால்ஸ்டாயாகவும் இந்தப் படத்தை தாஸ்தாவெஸ்கியாகவும்கூடக் காணலாம்.
MY LITTLE PRINCESS / Dir: Eva Lonesco / France / 2011 /105 Min

வெரைட்டி பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இந்த விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள்.

My Little Princess (France)

A Sophie Dulac Distribution (France) release of a Les Prods. Bagheera production in co-production with Canal Plus, CineCinema, France Televisions with the support of CNC, La Banque Postale. (International sales: Urban Distribution Intl., Montreuil, France.) Produced by Francois Marquis. Co-producer, Directed, written by Eva Ionesco.

With: Isabelle Huppert, Anamaria Vartolomei, Georgetta Leahu, Denis Lavant, Jethro Cave, Louis-Do de Lencquesaing. (French, Romanian, English dialogue)

Even without the wire hangers, Eva Ionesco's semi-autobiographical debut, "My Little Princess," feels an awful lot like other monster-mommy tales, only this time, the director seems to be underplaying, rather than exaggerating, the particulars of her horrific upbringing. The helmer, daughter of Parisian photographer Irina Ionesco, achieved notoriety at an early age after appearing nude in her mother's provocative portraits. "Princess" shows her still quite conflicted on the subject and the casting of Isabelle Huppert, here in ice-queen mode, conveys everything about the odd blend of alluring glamour and twisted psychology. Huppert will be pic's best shot at reaching famously conservative American auds.

"You're so inhibited," Hanah (Huppert) scolds her teenage daughter Violetta (Anamaria Vartolomei) during a typical photo shoot. But rather than ridding Violetta of such petty bourgeois notions through her art, Hanah instead teaches her daughter to feel shame: The poor girl is constantly teased at school and comes home full of odd questions, like wanting to know the definition of the word "incest." But Violetta also displays a fierce pride, regarding Hanah's haughty attitude and sublime fashion sense with awestruck reverence.

Clearly, what Hanah sees as a game is actually wreaking permanent damage on her daughter's development, which becomes the central tension of a film that takes great care never to condemn Hanah's decisions outright. Ionesco was four when Irina began snapping her naked, sprawled in poses that suggest Victorian-era erotica. Though rich in texture -- a quality most evident in the film's costume- and set-decorating decisions -- "My Little Princess" lacks the artistic and compositional strength one might expect from the daughter of a famous photog, feeling a bit like the racy European equivalent of a Lifetime movie.

One expects the film to identify most strongly with the daughter's character, but the helmer assumes a bit too easily that audiences will immediately side with her. Over the course of the film, we watch as Violetta transforms from an average teen into a holy terror. Before long, she's dressing with all the pomp and perverse entitlement of a 1980s New York club kid, coming on to strange boys and screaming at her mom, behaviors that can exist even without such parental exploitation.

Ionesco has the good taste to go easy on the photo-shoot scenes, concentrating instead on memorable showdowns between her mother and the other adults in her life. Hanah's most constant adversary is the conservative Romanian relative who raised her (played by Georgetta Leahu), a simple woman with no appreciation for art but a reasonably clear sense of decency. After years of being minded by this surrogate "grandma" while Hanah was too distracted to care, Violetta is so excited to be spending quality time with her mother that she doesn't recognize how selfish and inappropriate the photo sessions are.

Certainly the fabulous artistic circle to which her mom belongs holds an illicit appeal for such an impressionable young girl, as do the elaborate veils and gowns that make up Hanah's wardrobe. Still, no shortage of films have focused on the corrupting influence of being raised by narcissistic rock/movie stars (Sofia Coppola gave a rather more evocative sense of that frustration in last year's "Somewhere," to name just one recent example), and Ionesco has the usual trouble balancing this environment's toxic mix of the damned and the divine.

Pic's most troubling scene involves a special commission, in which Hanah instructs her daughter to strip and pose in the arms of an androgynous British patron (model Jethro Cave). What nudity "Princess" requires to make its point is limited to older models, though the film still creates the uneasy impression that Ionesco is subjecting someone else to the same discomfort she herself experienced as a child. Sadly, there's no getting around this problem as regards films in the lost-childhood genre, though this no-doubt therapeutic exercise does an admirable job of using music and design elements to suggest the memories too raw to be depicted firsthand.

Camera (color, widescreen), Jeanne Lapoirie; editor, Laurence Briaud; music, Bertrand Burgalat; production designer, Francois-Renaud Labarthe; costume designer, Catherine Baba; sound (Dolby Stereo), Olivier Mauvezin. Reviewed at Cannes Film Festival (Critics' Week), May 17, 2011. Running time: 107 MIN.

Contact Peter Debruge at peter.debruge@variety.com