01 December 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.


இப்படி எதையாவது அறச்சீற்ற போதையில் உளறிக்கொட்ட வேண்டியது. அப்புறம் எவராவது இதை மறு பிரசுரம் செய்து கண்டித்தால் வன்முறையைத் தூண்டிவிடும் விஷமத்தனம் ஐயையோ எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று கத்த வேண்டியது.

எடுப்பேன் கவிழ்ப்பேன் என்று எழுதுவதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா?

தொப்பி திலகம் போல ச்சும்மா டமாசுக்காக வலையின் ஒரு ஓரத்தில் எழுதியது என்று சொல்லி டபாய்க்க முடியாத விவகாரம் இது. இப்படிப் பெயரெல்லாம் போட்டு ஆதாரம் எதுவும் கொடுக்காமல் கீழ்த்தரமாக எழுதிவிட்டுத் தப்பிக்க இது ஒன்றும் ’இலக்கிய வெங்காயம்’ இல்லை. 

தவறுதலாக போட்டோ மாறினாலும் நூறு கோடி கேட்டு ஜட்ஜுகளே வழக்கு தொடுக்கும் காலம். உச்சநீதி மன்றத்திற்கே போனாலும் ஒப்பேறாது. 

சுய கட்டுப்பாடும் பொறுப்பும் கருத்து சுதந்திர கந்தசாமிகளுக்கு மட்டும் கிடையாதா என்ன?

புத்தகக் கண்காட்சி சமயத்தில் கோடி ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீசு வந்து வழக்கானால் அள்ள அள்ளப் பணம் போல் புத்தகங்கள் அமோகமாய் விற்கும் என்று நிதியாதார நிபுணத்துவ அறிவுரை ஏதேனும் வழங்கப்பட்டதோ?

வழக்கு நடத்தும் செலவுக்கு ஏதோ என்னால் ஆனது என்று விற்காமல் அலமாரியில் கிடப்பதிலிருந்து இரண்டை அனுப்பி வைப்பதைத்தவிர வேறு எப்படி என்னால் உதவமுடியும் என்றும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

<இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.>

வழக்கு என்று வந்துவிட்டால் இவற்றைத் தனித்தனி வரிகள் என்றெல்லாம் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆகவே குறைந்தது <பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.> என்கிற இதையேனும் நீக்கிவிடுங்கள். மன்னிக்கவும் இதற்குப்பெயர் கருத்துச் சுதந்திரம் இல்லை.

குழந்தைகள் சாரி சொல்ல மறுத்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டாவது சிரித்து ரசிக்கிற உலகம், துரதிருஷ்டவசமாக வளர்ந்தவர்களுக்கு இந்த சலுகையை அளிப்பதில்லை.

பிரச்சனையாகிற பட்சத்தில் இதற்கு இலக்கிய சாயம் பூசி கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கதறவோ அல்லது அதைக் கண்டித்து இணையத்தில் ஊர்வலம் பேரணியெல்லாம் நடத்தி நாகர்கோவில் மொட்டைமாடி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்துப் போடச்சொல்லி தயவுசெய்து யாரையும் கேட்காதீர்கள்.

மத்தகத்தின் மண்ணுக்கு யார் பொறுப்பு?