21 December 2011

சாமானியர்களின் சாமானும் அறிவுஜீவிகளின் சாமானும்

சாமான் என்று எழுதினால் அறிவுஜீவி அக்ரகாரத்தில் ஆச்சாரம் கெட்டு, பொறுக்கி மொழியாகிவிடும். ஆனால் அயல்நாட்டானின் அம்மண சாமானத்தை அட்டையில் படமாய்க் போட்டுக்கொண்டு, கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என புடுக்கும் கூடசேர்ந்து ஆட அட்டைக்கத்தியைச் சுழற்றுவதுதான் அதிதீவிர அறிவுப் புரட்சி.

சாமானியனுக்கும் புரியும்படி இருக்கும் வெகுஜன கலாச்சாரத்தை விமர்சித்துப் புரிந்துகொள்ள, புரியவைக்க அலசி ஆராயும் புத்தகத்தைப் பிரித்துப் படிக்க முனைந்தால், படிப்பவனின் சாமானம் மரத்துப்போய்விடும். குழூஉக்குறியாய் சங்கேத மொழியில் எழுதிக்கொள்வதில்தான் இருக்கிறது, அறிவுஜீவி என்கிற இறுமாப்பு.
இப்படிக் கேட்டதும், இதென்ன நான் எழுதியதா என்கிற கேள்விவரும். 

இறக்குமதி செய்து நட்ட கன்றுகளில் மண்ணுக்கு சம்பந்தமில்லாத காரனத்தால் பட்டுப்போனது எவ்வளவு என்று கேட்கப்போனால், உனக்கு வந்த கொஞ்சநஞ்ச அந்நிய இலக்கிய வாசிப்பும் நாங்கள் போட்ட பிச்சையல்லவா என்கிற, சூட்சுமக்குரல் எழும்.

ஏற்கெனவே இருந்துகொண்டு இருப்பவை, தாமே நிரந்தம் என்கிற நினைப்பில் நித்திரைக்கே போய்விடுவது இயல்பு. சாரத்தை இழந்து உறக்கத்தில் இருப்பதை உசுப்பிவிடக் கேள்விகேட்டுக் கலைப்பதுதான், எந்த நாட்டிலும் காலாகாலமாய், ’கலை’ ஆற்றும் முக்கியமான காரியம்.

மூச்சுத் திணறி இறந்துவிடாதிருக்க, அந்தந்த காலகட்டங்களில், உலகம் எப்படியெல்லாம் இயங்குகிறது என்று பார் விழித்துக்கொள் என பள்ளியெழுப்பியவர்கள் பாரதி புதுமைப்பித்தன் க.நா.சு என வழிவழியாய் புதிய வாயில்களைத் திறந்து வைத்தபடியே வந்துகொண்டிருப்பது வரலாறு. அவர்களே தம்மளவில் தனித்துவம்மிக்கக் கலைஞர்களாக இருந்ததால் சுட்டிக்காட்டியவைமட்டுமின்றி சுயமாகப் படைத்தவையும் கலையாய் மிளிர்ந்தன. அவர்களின் கொடையாய் வீசப்பட்ட விதைகளில் இருந்துதான் ’இந்த மண்ணின்’ விருட்சங்கள் எழுந்தன.

ஆனால் ஆங்கிலப்படிப்பை மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு, படைப்பா? வீசம் என்னவிலை என்று கேட்ட அறிவுஜீவிகள் இறக்குமதி செய்த கலைகளைப் பார்த்துப் பரவசப்பட்டு உருவான கலைஞர்கள் படைப்புகள் எத்துனை? மார்க்கேசையும் போர்ஹேவையும் ’சைசுக்கு’ சம்பந்தமே இல்லாத புதிய பிராண்டு இரவல் சட்டைகளாய் குடுகுடுப்பாண்டிபோல அணிந்து நல்லகாலத்தைப் பிரசவித்துவிட்டதாக நெஞ்சுநிமிர்த்திக்கொண்டதுதான் நடந்த சாதனை.மனதில் விதைக்காமல் ’போல’ நட்டால் போலிகளே உருவாகும்.

சாகித்திய அகாதெமி 79ல் வெளியிட்ட சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் என்கிற புத்தகத்தில் இருந்த ஸக்கரியாவின் ‘இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு’ என்கிற கதையைப் படித்த அனுபவமே, எழுதத் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே ’சுயசரித குடும்பக் கதைகளில்’ இருந்து வெளியேற வைத்தது.கடுப்பேற்றிக் கொண்டிருந்த அலுவலகச் சூழலின் அவலத்திலிருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைய, நடைமுறை யதார்த்தத்துடன் செய்துகொண்ட கட்டாய சமரசத்தின் புழுக்கமே தாஸில்தாரின் நாற்காலியாய் வெளிப்பட்டது. பால் ஸக்கரியாவுக்கு பட்டகடன் லேசில் தீர்க்கக்கூடியதா என்ன? அவர் பட்டகடன் எங்கெங்கு இருக்கிறதோ.

மேலே புரியாத உதடுகள் கீழே கூட்டிப்படிக்கும் முன்பாகவே ஓடிவிடும் எழுத்துமொழி என்று மேலும் கீழுமாய்ப் பார்த்துப்பார்த்து படம் பாதி கதை பாதி என்று புரிந்துகொள்ள முயன்ற உலக சினிமாக்கள் ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் படிக்க இயலாமையின் குறையை ஈடுசெய்யும்விதமாய், லத்தீன் அமெரிக்கப் படைப்புகளைப் பற்றி, சுகுமாரன் சொல்லக் ‘கேட்டு’ சிலிர்த்த கணங்கள் எருவாகிக்கொண்டிருந்தன. 

பல்லாண்டுகள் முன்னால் பாண்டிச்சேரியில் இருந்து சென்னையில் ஓடும் குதிரையின் குண்டிக்குப்பின்னால் வாராவாரம் போய் குடும்பத்தை வட்டிக்கடை சேட்டுகளிடமும் பட்டாணிக்காரனிடமும் மூழ்கடித்த ’குடும்ப’ப் பின்னணியில் இருந்து உருவாயிற்று சிறுமி கொண்டுவந்த மலர்.  

அதை சுந்தர ராமசாமியிடம் 84கில் படித்துக்காட்டிய கையோடு ’கூறிய’ இன்னொரு கதைதான் ‘பந்தாட்டம்’. 

இத எழுதிட்டீங்களா?. 

இன்னும் இல்லை. ஐடியா லெவல்லதான் இருக்கு.

அந்தக் கதைய எழுதினதுலையும் இதை எழுதாததுலையும்கூட விஷயம் இருக்கு.

வார்த்தைகளில் விளக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை.

இடையில் பத்துவருடங்கள் கழிந்துவிட்டன. அலுவலகத்தின் நெருக்கடிகளில் குமாஸ்தாவும் படைப்பாளியும் மோதிமோதி அது அப்படித்தான் இது இப்படித்தான் என்று ஒருவருக்கொருவர் மனமொவ்வா தம்பதியராய் வாழ நேர்ந்ததன் சலிப்பும் சிநேகித நிராகரிப்பின் வலியுண்டாக்கிய அழுத்தத்தின் அலைபாய்தலில் சங்கிலி மஸ்தான் என்கிற கருப்புடை சாமியாரை சந்தித்து தஞ்சமடைய நேர்ந்ததும் அதற்குபின் எழுதத் தொடங்கியபோது ’கதைக்குள்’சூனியம் வந்து சேர்ந்துகொள்ளக் காரணமாயின. 94கில் ’பந்தாட்டம்’ முழுமையானது.

தசரா அறக்கட்டளையின் வாயிலாக கணையாழி திரும்ப வரத்தொடங்கியிருந்த நேரம். ராஜேந்திரனைப் பார்த்து, கதையைக் கொடுக்கையில் எதிரிலிருந்த கஸ்தூரி ரங்கன் வாங்கிப்படித்தார். 

மேஜிக்கல் ரியலிஸமா? நன்னா வந்துருக்கு, ஆனா மொதல் ஒரு பக்கத்துக்கு நீளமா சூனியம் கீனியம்னு என்னல்லாமோ எழுதியிருக்கேளே அதெல்லாம் எதுக்கு? அது இல்லாமையே கத நன்னாதான இருக்கு, அதை எடுத்துடுங்கோ.

இல்லை அது பின்னாடி வரப்போற விஷயத்துக்கு ரொம்ப முக்கியம். 

’அதை’ எடுத்துட்டா, இந்தக் இஷ்யூலையேப் போட்டுடலாம்.

திரும்ப கைக்கு வந்த கதைக் கற்றையுடன் மனம் கனத்தது. அச்சேறத் தடையாய் இருக்கும் உண்மையான சூனியம், முஸ்லீம் சாமியார் பற்றிய குறிப்புகள்தாம் என்பதும் கஸ்தூரி ரங்கனின் அப்போதைய இந்துத்துவா சார்புக்கு அவை கரிக்கின்றன என்றும் தெளிவாகப் புரிந்தது. ஏற்கெனவே தமிழ் இண்டியா டுடே அதே காரணத்திற்காகத்தானே நிராகரித்திருந்தது. கஸ்தூரி ரங்கன் கீழே இறங்கிப்போவதற்காய்க் காத்திருந்து, ராஜேந்திரனிடம் கவலையைத் தெரிவித்தபோது,

கதையக் குடுத்துட்டீங்கல்ல கவலைபடாம போங்க. நீங்க எழுதினமாதிரியே வரும் என தேற்றிஅனுப்பி வைத்தார்.

(குல்லாவுடன் சுஜாதாவை குமுதத்தில் சந்தித்தது பின்னொரு சமயத்தில்).

எதையாவது படித்து முடித்ததும் அதை அப்படியே வாந்தியெடுப்பதல்ல படைப்பு என்பது. படைப்பாளியின் வாழ்வில் இருந்து முளைக்காத எதுவும் அல்லது கருத்தாய் உதித்த கற்பனை என்றாலும்கூட ’வாழ்ந்து’படைக்காத எதுவும் அற்பாயுளாய் பட்டுத்தான் போகும். 

படைப்பின் உள்இயக்கம் என்ன அதன் உட்கூறு எப்படியானது என்பதை அப்பித்தப்பியும்கூட அறியாத அறிவுஜீவிகள், ஊக்கப்படுத்தலாய் ’ஏற்றி’ விட்டதன் விளைவாகத்தான் சொந்த மண்ணுக்கும் சுய வாழ்வுக்கும் பூர்வஜென்ம தொடர்புகூட இல்லாத ’எலிகளின்’, எச்சங்களாய் பரிசோதனைப் படைப்புகள் மலிந்தன. மார்க்கேஸ்-போர்ஹேவுக்கும் அவர்களது மண்ணின் கலாச்சாரத்திற்குமான பிணைப்பை அடையாளம் காணவியலாத அறிவுக் கபோதம். 

இரட்டை நாக்கு எப்படியும் பேசும்.
maamallan விமலாதித்த மாமல்லன் 

@mdmuthu நட்டுவைத்த கன்று வளர்ந்து முள்ளுச்செடியானால் அதற்குச் செடியே பொறுப்பு # நல்ல லாஜிக்
17 Dec  12.14 AM
in reply to @maamallan ↑
@mdmuthuM.D.Muthukumaraswamy
@maamallan எது முள் செடி? விக்கிரமாதித்யன், வித்யாஷங்கர் வளர்த்த நக்கீரன் பத்திரிக்கை பாணியிலுள்ள உங்கள் கட்டுரைத் தலைப்புகளை என்ன சொல்வது?

7.10 AM 17 Dec 2011

maamallan விமலாதித்த மாமல்லன் 

@mdmuthu கருத்துகளை கோட்பாடுகளை செரிக்காமல் எடுத்த ’அறிவுஜீவி வாந்திகளை’ப் படைப்பெனக் கொண்டாடிக்கொண்ட கோமாளித்தனங்கள் வரலாறு.
11,54 PM 16 Dec 2011
in reply to @maamallan ↑
@mdmuthuM.D.Muthukumaraswamy
@maamallan தமிழ் உரை நடையின் lumpenizationஇக்கு உங்கள் நண்பர் குழாம் போலவே நீங்களும் பங்களித்து வருவது ஆச்சரியமில்லை

7.55 AM 17 Dec 2011

<மாமல்லனோடு டிவிட்டர், ஃபேஸ்புக் கர்புர் உரையாடலின்போது நம்பியின் பேருரை ஞாபகம் வந்து இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். எழுத்தின் போக்கில் எங்கேயோ போய்விட்டது கட்டுரை.>

ட்விட்டரில் நம்பியை இழிவுபடுத்தியாயிற்று. ’சேதி’ அவரை எட்டும்முன் முட்டுக்கொடுத்து முன்தீர்மானத்துடன் எழுதப்பட்டதே விக்ரமாதித்த நம்பிராஜ புராணம்.

நம்பி ஆற்றியதாக சொல்லப்படும் பேருரை என்ன சொல்கிறது என்று சற்றே கூர்ந்து பார்ப்போமா?

<அன்றைக்கு நம்பி ஆற்றிய பேருரை நான் வாழ்நாளிலேயே மறக்க முடியாத உரையாகும். பின்னாட்களில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் சரி, வெளியிடங்களிலும் சரி எத்தனையோ புகழ் வாய்ந்த கவிஞர்கள், தத்துவவாதிகள், இலக்கியவாதிகளின் உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் நம்பியின் உரைக்கு நிகரான ஒன்றினை இன்று வரை கேட்டதில்லை>

<தான் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியே பத்திரிக்கை செய்திகளை உருவாக்க, எழுத நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.>

அப்புறம் அண்ணாத்தை ஆடுகிற ப்ளாப்ளாவையெல்லாம் இந்த சுட்டியில் படித்துக்கொள்ளுங்கள் http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/12/blog-post_17.html

பேரறிஞர் பிள்ளைவாள், அடுத்தவனை அடிப்பதற்காக, முதலில் அடித்துச் சொன்னது என்ன?

<விக்கிரமாதித்யன், வித்யாஷங்கர் வளர்த்த நக்கீரன் பத்திரிக்கை பாணியிலுள்ள உங்கள் கட்டுரைத் தலைப்புகளை என்ன சொல்வது?>

அடுத்து எழுதிய அழுக்காச்சி பதிவில் சொல்வது என்ன?

<தான் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியே பத்திரிக்கை செய்திகளை உருவாக்க, எழுத நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.>

சரி அடுத்ததைப் பாருங்கள்.

<தமிழ் உரை நடையின் lumpenizationஇக்கு உங்கள் நண்பர் குழாம் போலவே நீங்களும் பங்களித்து வருவது ஆச்சரியமில்லை>

1989ல் நக்கீரனில் ‘லும்பன்’தனமாக எழுத நிர்பந்திக்கப்பட்டிருப்பதாய் சொல்லிய உண்மை ஒளிர்ந்த உரையைக் கேட்டு பிள்ளைவாள் பெருமகனார் சிந்திய கண்ணீர் உண்மை என்றால் 

<விதிவசம் என்று இந்த மாதிரியான பத்திரிக்கைகளில் வேலை செய்வது தனக்கு ஏற்படுத்தும் தாங்கவியலா மன உளைச்சலே தன்னைக் குடியை நோக்கித் தள்ளுவதாகவும் சொன்ன நம்பி>

என்று விக்ரமாதித்யன் நம்பி பேசியது கேட்டு உலுங்கியதும் குலுங்கியதும் நடிப்பில்லை உண்மை என்றால் 23 வருடங்கள் கழித்து 2011 டிசம்பர் 17 7.10AMக்குப் போடும் ட்விட்டில் 

<விக்கிரமாதித்யன், வித்யாஷங்கர் வளர்த்த நக்கீரன் பத்திரிக்கை பாணி> 

என்றும் 2011 டிசம்பர் 17 7.55AMக்குப் போடும் ட்விட்டில் 

< தமிழ் உரை நடையின் lumpenizationஇக்கு உங்கள் நண்பர் குழாம் போலவே நீங்களும் பங்களித்து வருவது ஆச்சரியமில்லை >

என்று எழுதுவதும்தான் பின் நவீனத்துவ நேர்மையா?

ஏன்யா தெரியாமல்தான் கேட்கிறேன், அந்தாளுதான் லும்பன் மொழியில் எழுத நிர்பந்திக்கப்பட்டேன்னு சொல்லி மாப்பு கேட்டூட்டாரு. அந்தப் பாவத்தை அறுநூறு பேரு கேட்டு உலுங்கிக் குலுங்கி அழுது அதுக்குப் பாவ மன்னிப்பும் 1989லையே குடுத்துட்டாங்கன்னு வேற எளுதிட்டீகளே.அது உண்மைனா இப்ப 2011லையும் விக்ரமாதித்யன் நம்பியைக் குற்றவாளியாவே குறிப்பிடறீங்களே. பிள்ளைமார் இலக்கியத்தின் குலம் தழைக்க பிறவியெடுத்து வந்திருப்பவருக்கு நம்பிராஜப்பிள்ளைவாள் முத்தில் அல்லவா மோதிரம் செய்து போடவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவனைக் கோர்ட்டு குற்றவாளியில்லை என்று கூறி விடுதலை செய்தபின்னும் அவனைக் குற்றவாளி என்றே குறிப்பிடும் வெகுஜன் வன்மத்தைப்போலல்லவா இருக்கிறது இது. 

நம்பியும் அவரது தேவமார் தம்பியும் எதிரியை நோக்கி எறிய உபயோகப்படுத்திக்கொண்ட அம்புகள் மட்டுமே என்கிற பிள்ளைவாளின் பெருஞ்சூது புரியாத இணைய மடத்தலைவருக்கு அவரது ’சொந்த வன்மத்தின் புளகத்தில்’ அருமையான கட்டுரையாகத் தோன்றுவதில் ஆச்சரியமென்ன?

முத்துக்குமுத்தாக சொத்துக்கு சொத்தாக மூணு பிள்ள  சேந்துவந்தோம் கண்ணுக்குக் கண்ணாக

<ஷங்கர் ராம சுப்பிரமணியன் என் தளத்திலுள்ள கவிதைகள் சிலவற்றை நம்பியிடம் வாசித்துக்காட்டியதாக என்னிடம் சொன்னார். சமீபத்தில் என்னிடம் ஃபோனில் பேசிய நம்பியும் மோதிரம் போட ஒப்புக்கொண்டுவிட்டார்.>

நா.பார்த்தசாரதி சுந்தர ராமசாமியின் கதையில் இருந்த முலைகளை வெட்டினார். பின்நவீனத்துவப் பிள்ளைவாள் உரைநடையில் சாமானத்தை வெட்டச்சொல்கிறார். 

ஃபோர்ட் ஃபெளண்டேஷனில் நிதியெல்லாம் பெற்று ஆராய்ச்சியெல்லாம் செய்வது என்றால் சாமானியர்கள் செய்யும் காரியமா என்ன? வாழ்க்கையைப் பதிவு செய்வது வரலாற்றைப் பதிவுசெய்வது டாக்குமெண்டரிகள் எல்லாம் எடுப்பது என்றால் எவ்வளவு உழைப்பைக் கோரி நிற்கிற காரியம். இது என்ன எஸ்.ராமகிருஷ்ணன் அவசரமாய் அள்ளித்தெளித்து எழுதி ஆண்டுக்குப் பத்தாய் இறக்கும் புத்தகங்கள் போன்ற காரியமா? 

ஆகவே ஆராய்ச்சியாளர் எதைசொன்னாலும் உண்மையாகவே இருக்கும்  என்றும் அறிவார்த்த ஆய்வுக்குப் பிறகே சொல்லப்படும் என்றுமல்லவா சாமானிய அப்பாவிகள் நம்பவேண்டி இருக்கிறது.

1989ல் (1985க்குப் பின் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறைக்கு அடுத்து நிகழ்ந்த சம்பவம் என்றால் 1988-ஆனால் பிரமிள் கலந்துகொண்டது என்பதால் மூன்றாவது கவிதைப் பட்டறை எனவே வருடம் 1989)  கல்லூரியில் ஆற்றியப் பேருரையில் விக்ரமாதித்யன் நம்பி கூறுகிறார்.

<அரசியல் தலைவி ஒருவரின் செயல்பாட்டினைக்குறிக்க ‘சண்டி ராணியின் திக்குமுக்கு தக்குத்தாளம்’ என்ற செய்தித் தலைப்பாய் வைத்தது>

கம்ப்யூட்டர் ஜி இந்த டாக்குமெண்டேஷன் சரியா? நம்பிராஜன் இதை சொல்லியிருக்க வேண்டும் என்றால், அப்போது ஜோசியம்கூடக் தெரிந்திராத அவருக்கு தீர்க்க தரிசனம் இருந்திருந்தால்தான் சாத்தியம். 

<திரைப்பட பாடல்களை செய்தித்தலைப்புகளாய் வைப்பது>

சண்டி ராணியே எனக்குக் கப்பம்கட்டு நீ என்கிற பாடல் இடம்பெற்ற படம் மன்னன். படம் வெளியான ஆண்டு 1992. மன்னன் படத்தைப் பற்றி 1989ல் ரஜினியோ P.வாசுவோ கூட கற்பனை செய்திருப்பார்களா என்பதே சந்தேகம். அப்படி இருக்கையில் நம்பிராஜன் இதை 1989ல் நடந்த கூட்டத்தில் கூறினார் என்பது எவ்வளவு எத்தத்தனம். நம்பிராஜன் நக்கீரனில் உருவாக்கிய லும்பன் என்பதை நம்பியின் வாய்மொழியாகவே சொல்வதாக என்ன ஒரு ஜோடனை. எவனையோ லும்பன் மொழி உபயோகிக்கிறான் என்று இழித்துரைத்ததை உண்மையென நிறுவ, ஜெயமோகன் பாணியிலான விக்கிபீடியா திரிசன திணிப்பாக ஒரு பதிவு.

அதுவும் ஆட்லரி தகவல் பிழையால் ஷோபா சக்தியின் கப்டன் கதையே நம்பகத்தன்மை இழந்துவிட்டது என்று கனமான மொழியில் கட்டுடைத்து தீர்ப்பளித்த ஆராய்ச்சியாளர், இணையவெளியில் தன் இருப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது என்கிற வன்மத்தில் கண்மண் தெரியாமல் கழி சுற்றினால் கவட்டைக்குதான் ஆபத்து.

<எம் எல் ஏ ஒருவரின் ஊழலைச் சொல்ல ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ பாடல் வரியினைப் பயன்படுத்தியது என பல உதாரணங்களைக் கொடுத்து பத்திரிக்கை உரை நடையின் உருவாக்கத்தினை விவரித்தார்>

ஆராய்ச்சிப் பெருந்தகை, முதல்கை தகவல் நேர்மையில் எஸ்.ராமகிருஷ்ணனையே மண்ணைக்கவ்வ வைத்துவிடுவார் போல அல்லவா இருக்கிறது.

1989ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் இந்தப்பாடல் தாமரைக்கனி எம்எல்ஏவுக்காக 90களில் நக்கீரனில் டைட்டிலாக வைக்கப்பட்டது - தகவல் உபயம் வித்யா ஷங்கர்.

அப்போதைய வித்யா ஷங்கரும் இப்போதைய துரை பாரதியும் எப்போதும் வெள்ளைத் துரையுமான துரை சொன்னான்.

“அதை நானும் படிச்சேன் சினிமாப் பாட்டையெல்லாம் நாங்க டைட்டில்ல வெச்சது 90களுக்கு அப்புறம்தான். அவுரா எழுதிகிட்டு இருக்காரு. ஜாங்குசக்குல்லாம் நாங்க வைக்கவே இல்லை”

உண்மை இப்படி இருக்க்கிறது. ஆனால் கவிஞர் நம்பிராஜனோ எழுத்தாளருடைய ஆவியாய் கல்லூரியில் 1989ல் எப்படிப் ’பேருரை’ ஆற்றியிருக்கிறார் பாருங்கள்.

1989ல் நம்பிராஜன் பேராசிறிய பிள்ளைவாளின் கல்லூரியில் பேசியிருக்கிறார் என்பதுவரை உண்மை. மீதியெல்லாம் அடுத்தவனை அடிக்க 22 வருடம் கழித்து,  யதார்த்த உலகுடன் எந்த ஒட்டுறவுமற்ற புத்தக ரோபோவின் ஒட்டவைப்பு.

<ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா>

சண்டைக்கு இறங்கும் முன்னால் யாருடன் மோதப்போகிறோம் என்பதைத் கவனத்தில் கொண்டு, கோமணத்தை சரியாக இறுக்கிக்கட்டிக்கொண்டு இறங்குவது நல்லது.

தெரிதாவைத் தெரியும் என்பதால் சரிதாவை மேற்கோள் காட்ட முற்பட்டால் சரியாய் வருமா? 

எலேய்! அது ஜாங்கு|சக்கு சசக்கு|சக்கு ஜாங்கு|சக்குச்சா(ன்)  1.06ல ஆரம்பிக்கிறதைக் கிண்டலடிக்கிறியே 6.08ல வரது தென்படலையா? லும்பன் கலாச்சாரத்தை, ஐயராத்துப் பொண்ணு ஹம்மிங்குலக் கிராஸ் பண்ணி தேவாரப் பாடலாகிப் படியிறங்கி குளத்து நீரில் விளக்குகள் நகரத்தொடங்கியபின் லும்பனின் ஆவேசக்கூச்சல் அடங்கி வெறும் ஹம்மிங் இழையத்தொடங்கி பார்வை நிரந்தரமாய் நாயகியின் மேல் பதிவது காட்சியாகவும் இசையாகவும் கதையாகவும் எப்படி ஃப்யூஸ் ஆவுதுன்னு பாத்தியாவே. பாக் பீத்தோவன் மோஸார்ட்டுன்னு பேசறதோட சரியா. இந்த வயலின் வெளையாட்டை இன்னொருக்காக் கேளுவே.


அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ - நீ
காட்டோரம் மேயும் குறும்பாடு - உன்னப்
போட்டாத்தான் எனக்கு சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

ஃபோர்ட் ஃபெளண்டேஷன் டாலர்களை எவனெவனோ திங்கிறான் நம்ம ஆராய்ச்சி அமுலுப்பிள்ளை தின்னா என்னவாம் ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

mdmuthu M.D.Muthukumaraswamy 

@mdmuthu @maamallan இல்லை ஜேனு குருபரின் ஆதிவாசி மொழிக்கு அகராதி பதிப்பித்தவன் பிராமணீய பிள்ளைவாளாயிட்டானா?

mdmuthu M.D.Muthukumaraswamy 

@maamallan நரிக்குறவர் தமிழுக்கு அகராதி பதிப்பித்தவன் பிராமணீய பிள்ளைவாளா?

பின்ன என்னலே நம்பிராஜப் பிள்ளைவாள் கவிதைல ’நாக்கு’ எப்படி உபயோகிக்கப் பட்டிருக்குங்கறதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு புராஜெக்ட் குடுத்தா எந்த புண்ணாக்கு ஃபெளண்டேஷனாவுது அப்ரூவ் பண்ணி துட்டு குடுப்பானா? டாலரைப் பார்த்தா எவனுக்குதான் சமூக உணர்வு சிலிர்க்காது ஓய்! 

லும்பன் கல்சர் சூப்பர்ஹிட் படமான ரிஜினி படமான திலுமுல்லுவில் நேர்காணலுக்கு வந்தவனை தேங்காய் சீனிவாசன் கேட்பார்.

சட்டைல என்ன பொம்மை?

அது பூனை சார் - பூரித்தபடி சொல்லுவான்

 “அதுல என்ன அப்படியொரு பெருமை? ”

இப்புடித்தான் வித்தியாச வித்தியாசமா வெள்ளைக்காரனுக்குப் பிராஜெக்டுகளைப் புரொஜெக்ட் பண்ணிப் படம் காட்டிகினே இருந்தாத்தான் நம்ம வண்டி ஸ்மூத்தா ஓடும். 

விக்ரமாதித்யன் நம்பிக்கு பிள்ளைமார் அம்பி கொடுத்த சான்றிதழ் என்ன?

<நம்பி தன்னுடைய எந்த இலக்கிய கட்டுரையிலும் சரி, கதையிலும் சரி, கவிதைகளிலும் சரி எனக்குத் தெரிந்தவரை ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளின் நடையைப் பயன்படுத்தியதில்லை.>

இப்ப நம்பியோட அரணாக்கயித்த வேற அத்து உட்டுட்ட. ஏதோ நம்மால முடிஞ்ச நல்ல காரியம்.

எது குறித்தும் 
எனக்கொன்றும் வெட்கமில்லை
வெட்கப்பட
நானொன்றும் குழந்தையில்லை
வெட்கப்பட வேண்டியதும் 
நானில்லை

நான்
பெய்யும் மழை
வீசும் காற்று
எரியும் தீ 
வழங்கும் பூமி
கவியும் வானம்

இங்கே 
இடங்கெட்டுக் கிடக்கலாம் 
சூழல் நாறித் தொலைக்கலாம் 
இயல்பு அழிந்திருக்கலாம்
தன்மை மாறியிருக்கலாம்
முறைமை திரிந்திருக்கலாம்

முட்டாள்களுக்கும்
முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும்
மனத்தையும் 
முழுசாகக் காப்பாற்ற முடியாமல் போகலாம்

சுட்டு விரல் நீட்டி
கொட்டி முழக்கி
எத்தைக் காட்டி
வித்தகம் பேசுகிறீர்கள்
செத்தபிறகு
சிவனென்றும்
சுயம்புலிங்கமென்றும்
சொல்லிக்கொண்டிராதீர்கள்

எரிகிறபோதே 
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு 
நாலும் பேசும்தான்
நல்லது 
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்...

- விக்ரமாதித்யன்

kalyanasc Kalyan Raman 
@mdmuthu @maamallan does not belong in written discourse, even w/o profanities. 'Motherfucker' is okay in speech, not in descriptive prose

மரியாதைக்குறிய பிரக்ஞை சிவசங்கரா சொல்வது போல பேச்சுவழக்கில் மதர் ஃபக்கர் சொன்னால் பரவாயில்லை எழுத்தில் தப்பு என்பது போல நம்பியின் நாக்கு மேட்டர், ஏற்கக்கூடியதுதானா?

நீர்த்துப்போன கவிதைகள் என்று கண்டமேனிக்கு நம்பியுடன் சண்டை போடப்பட்டிருகிறது ஆனால் இப்படியான லும்பன் கலகத்திற்காகவே அவரைப் பிடிக்கும். இது யாரைக் குறித்து எழுதப்பட்டது என்பதும் 1982-83ல் அவர் எவ்வளவு இழிவாக அந்த நபரால் முதுகிற்குப்பின் இடப்பக்க பேச்சாய் தூஷிக்கப்பட்டார் என்பதும் அதற்கு எதிர்வினையாய் எழுதப்பட்டதே இது என்பதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரேஸ்வரருக்குத் எப்படித் தெரியாமல்போனதோ.

சும்மா சும்மா சீண்டினால் சூத்தாம்பட்டையில் உதைக்காமல் வேறென்ன செய்வதாம்? இதற்கு என்ன செய்வது என ஃபோர்டு ஃபெளண்டேஷன் செலவில்,செக்ரெட்டரி மூலம் ஜெனிவாவுக்கா கால் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? காசில்லாத கவிஞன் லும்பன்தனமாய் கவிதை என்றுதான் கிறுக்கிவிட்டுப்போவான்.

’தெளிவாக’ இருக்க நேரும் சமயத்தில், விக்ரமாதித்யன் நம்பி எழுதிய சில கவிதைகள் கீழே:

அவர்கள்
பேசுவது பகவத் கீதை

பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை...

***

ஆலமர நிழலில்
காளான்கள் தோன்றலாம்

கறிவேப்பிலைக் கன்று வளர்ந்ததாகக்
கண்டதுமில்லை கேட்டதுமில்லை...

***

தமிழை
பண்டிதர்களிடமிருந்து மீட்டாயிற்று

இலக்கியத்தை
விமர்சகர்களிடமிருந்து மீட்டாயிற்று

நவீன கருத்துலகை
நகர அறிவுஜீவிகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும்...

அண்ணாவுக்குப் பின் அனைவராலும் பேரரிஞர் என ஏகோபித்த பாராட்டுக்கு உள்ளாகிருக்கும் பெரும் பண்டித சிகாமணியின் பதிவில் நம்பிராஜன் 1989ல் கல்லூரியில் ஆற்றிய பேருரையில் கூறியதாய்க் குறிப்பிட்ட இன்னொரு முத்து.

<‘ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா‘ போன்ற ஒலிகள் ஆகியற்றை மட்டுமே பயன்படுத்தி உருவாகிற பொது வெளியின் பத்திரிக்கைத் தமிழ் உரை நடை சிந்தனையை எப்படி மழுங்கடிக்கிறது, மொழி நுட்பம் அறியாத பயனாளர்களின் மொழி உபயோகத்தை எப்படிக் குறுக்குகிறது என்றும் நம்பி விளக்கிச் சொன்னார்.>

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங் 

- ஜ்யோவ்ராம் சுந்தர்

இவர் இப்படியும் ’கவிதை’ என்று எழுதிக்கொள்ளுவார். பிள்ளைப் பெருந்தகை <‘ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா‘ போன்ற ஒலிகள்> <சிந்தனையை எப்படி மழுங்கடிக்கிறது> என்று எழுதினால் தாமும் இதே வேலையை செய்திருக்கிறோம் என்கிற சுரணையோ லஜ்ஜையோ கொஞ்சமும் இல்லாமல் சுந்தர ராமசாமி சொன்னது போல்,

”முரண்பட்ட எண்ணங்கள் சுய கவனிப்புக்கு இலக்காகாமல், சடையில் பேன் மாதிரி சகஜமாகவும் சந்தோஷமாகவும் நம் தமிழ்ச் சிந்தனையளர்களிடம் குடிகொண்டிருக்கும் நிலைமையை மீண்டும் ஒரு தடவை உணர முடிந்தது.”

லும்பன் மொழியிலும் எழுதிக்கொள்வோம். லும்பன் மொழி வெளிப்பாட்டைக் கண்டிக்கும் எதிர்க்கும் பதிவிற்கும் ‘அருமையான கட்டுரை’ என்று சுட்டி கொடுத்து இணையமகா ராஜ்ஜியத்தின் இலக்கியக்கொழுந்தாய்க் காட்டியும் கொள்வோம்.

இந்த  ஜிகுஜிக்காங் ’கவிதைக்கு’, பிள்ளைப் பெருமானார் எழுதும் பின் நவீனத்துவ கட்டுடைப்பு மொழியிலேயே சுயமகுடமாய், நேர்காணல் வேறு.

<17. உங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?

முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்தச் சண்டையில
கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(>

யாராவது தன் கவிதையில் ஒரு ஆச்சரியக் குறியை எக்ஸ்ட்ராவாகப்போட்டாலே கடுப்பாகிவிடுவேன் என்று கர்ஜிக்கும் இணையப் பெருங்கவிக்கோ அவர்களின் கவிதையில் எக்கச்சக்க ஜிகுஜிக்காங் எக்ஸ்ட்ராவாக ரயில்வண்டித்தொடராய்ப் போய்க்கொண்டிருப்பதை கவிபோதையில் கவனிக்கவில்லைபோலும். போதாக்குறைக்கு சிவ்மணி ட்ரம்ஸ் விளையாட்டாய் பீட் மாறி ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங் என்றெல்லாம் வேறு எழுதப்பட்டிருக்கிறதே.

<இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன்>

கேட்ட பாட்டை தம்முடைய கவிதை என்று போட்டுக்கொண்டுவிட்டார். ஃபோர்டு பெளண்டேஷனில் அடுத்து ஏதேனும் சேகரிப்பு வேலை இருந்தால் இந்த அம்பி சிறப்பாகச் செய்வார் என இதன் மூலம் சிபாரிசு செய்யப்படுகிறது.

<திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது.>

விதிமுறைகளுக்குள்ளேயே இந்த அளவிற்கு மொழி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர், விதிகளை மீறும் சந்தர்பம் கிடைத்தால் காமலோகம்.காம் தளத்தைக் காலி பண்ணிவிடுவார் போலிருக்கிறதே.

<நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம்.>

அடடா ஆறாவது ஏழாவது மாணவர்களின் ஆழ்மனதிற்குள் புகுந்து என்னவொரு அறிவுஜீவித்தனமான ஆராய்ச்சி. இப்படியும் வாசிக்கலாம் அப்படியும் வாசிக்கலாம். வாசிக்கலாம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தை லும்பன் கலாச்சார அர்த்தம் வரும்படியாக மட்டும் தயவுசெய்து வாசித்துவிடாதீர்கள்.

அது சரி லும்பன் மொழி மஞ்சள் பத்திரிகை என்றால் இவ்வளவு பெரிய இலக்கியப் பீறிடலுக்கான நிறம் என்ன?

அயல்நாட்டு சாமானத்தை அப்படியே தமிழில் இறக்கி பாருங்கையா ஒரிஜினல் சாமானம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஏற்கெனவே இங்கே இருப்பதெல்லாம் சாமானமே இல்லை சட்டுபுட்டுன்னு எடுத்து மாட்டிக்குங்க என்று அடித்த லூட்டிகள் கொஞ்சமாநஞ்சமா?

வெகுஜன கலாச்சாரத்தை ஒதுக்குவது குறுங்குழு மனப்பாண்மை. ஐயராத்து அம்பிகளால் ஆனதே சிறுபத்திரிகைகளின் மேட்டிமைவாதம் என முழங்கி எதிர்ப்பாய்க் கிளம்பியெழுந்த அ-கலாச்சார எதிர்-கலாச்சாரக் கலகக்காரர்கள், வெகுஜன கலாச்சாரத்தைப் புறந்தள்ளலாகாது, புரிந்துகொள்ள வேண்டும் என்று புரியாத மொழியில் போட்ட கூச்சலெல்லாம் எங்கே போயின? வெகுஜன பத்திரிகைகளின் விளம்பர ஈர்ப்புத் தலைப்புகளெல்லாம் இப்போது லும்பன் கலாச்சாரப் பிரதிபலிப்பாய் அறிவுஜீவிக் கேந்திரத்தின் அதிகார பீடத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ஒவ்வொரு பத்துவருடங்களுக்கும் இப்போ அதெல்லாம் இல்லை இனி இதெல்லாம்தான் இலக்கியக் கோட்பாடு என்று எடுத்த வாந்தியைத் திரும்பக் குடித்து திரும்ப வாந்தியெடுத்து பல்டி அடிப்பதே அறிஞர்களின் முழுநேரத் தொழில். எதைப் படித்துக்கொண்டிருக்கிறார்களோ அந்த கோட்பாடே அசலான கோட்பாடு என்கிற கோமாளிக்கூப்பாடுகள் குண்டுசட்டிக்குள் எத்துனைமுறை எதிரொலிக்கக் கேட்டிருக்கிறோம்.

இணையத்தில் இருப்பவர்கள் இருபத்துநாலுமணிநேர தீவிர இலக்கியவாதிகள் இல்லை என்றாலும் எட்டுமணிநேர அலுவலக இணையத்தொடர்பிலேனும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாய் இருப்பவர்கள்தானே? கொஞ்சமாவது கொஞ்சபேராவது புரிந்துகொள்ள முயற்சிக்கக்கூடியவர்கள்தானே? 

கடின மொழியில் எழுதி கைக்கெட்டா தொலைவில் வைத்துக்கொள்ள்வதில் இருக்கும் சவுகரியம் எளியமொழியில் எழுதினால் கிட்டாதே. குண்டானில் வேகவைத்து,பார்க்க குண்டாக இருப்பதெல்லாம் கொழுக்கைட்டையா? உள்ளே பூரணம் இருக்கவேண்டாமோ? பூரணம் பூரணம்.

மேற்கத்திய வாழ்வு நிற வர்க்க பேதம் சார்ந்தது. அங்கே இருக்கும் லும்பனை அப்படியே இங்கே இருப்பவன் மேல் வார்த்து தன் கை வார்ப்பிற்குத்தக உள்ளே போய் அடங்கிக்கொள் என்பதுதான் அறிவார்த்தமா?

சமகால வாழ்வை அசலாகப் பிரதிபலிக்கும் வடிவேலு நகைச்சுவையை தனியறைக்குள் பார்த்து வாய்விட்டு ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். வெளியுலகில் அறிவுஜீவி அவதாரம் எடுத்து எழுதும்போது ‘ஆராயப்புகுந்தால்’ தினமலர் வாரமலர் நக்கீரன் வகையறாவில் வந்துசேர்ந்து வடிவேலு காமெடியும் லும்பன் கலாச்சாரமாகி அடிபட்டுப்போகாதா? கண்காணா சுவரெழுப்பிக்கொண்ட பகுப்பு வாழ்க்கையில் இருக்கும் பாதுகாப்புக்கு ஈடு இணை உண்டா?

பாரதிராஜாவின் என் உயிர் தோழனில் வரும் சேரி நாயகன், விளிம்பு நிலை மனிதனா? பொறுக்கியா? 

இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் அனுமாருக்கு வடைமாலையாக ஏண்ட்டி-இண்டலெக்ச்சுவல் என்கிற பட்டம் சாத்தப்படும். 

ஸூடோ இண்டலெக்ச்சுவல்களுக்கு ஏண்ட்டியாய் இருப்பதிலிருந்து என்றென்றைக்கும் வழுவாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் இருக்கட்டும்.