24 December 2011

ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் அல்லது சோத்துக்கு ஊம்பியும் சொகத்துக்கு ஊம்பியும்


<நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?>

நான் எழுதியதில் ’நரிக்குறவர் அகராதி’ 'ஜேனு குருபரர் அகராதி’ என்று குறிப்பாக எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. அன்னாரின் ட்விட்டைப்போட்டு,  எழுதியதை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதாமா?

<பின்ன என்னலே நம்பிராஜப் பிள்ளைவாள் கவிதைல ’நாக்கு’ எப்படி உபயோகிக்கப் பட்டிருக்குங்கறதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு புராஜெக்ட் குடுத்தா எந்த புண்ணாக்கு ஃபெளண்டேஷனாவுது அப்ரூவ் பண்ணி துட்டு குடுப்பானா? டாலரைப் பார்த்தா எவனுக்குதான் சமூக உணர்வு சிலிர்க்காது ஓய்!>

ஆனால் எதிராளியின் வார்த்தைகள் அச்சு அசலாக அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டு,  அவதூறு செய்வதாய் நிறுவப்படும்.

தெரியாமல்தான் கேட்கிறேன், நரிக்குறவர் அகராதி, ஜேனு குருபர் பழங்குடியினர் அகராதிகள் எல்லாம் அந்தப் பழங்குடி மக்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ எந்த விதத்தில் உபயோகம்? தங்கள் பேச்சுக்கு என்ன பொருள் என்று அவர்கள் புரட்டி அறிவதற்கா? அல்லது அவர்கள் பேசுவது என்ன என்று நாம்தான் அகராதி படித்து தெரிந்துகொள்ளப்போகிறோமா? இவற்றாலெல்லாம் பழங்குடியினரின் வாழ்வு நிலையில் ஒரு அங்குலமாவது உயரப்போகிறதா? உயர்ந்ததெல்லாம் உலகத்தின் யூனிவர்சிடிகளில்  ஆராய்ச்சியாளரின் அந்தஸ்து மட்டுமே அல்லவா? ஆக நரிக்குறவர் என்றென்றைக்கும் ஊஸ்மணி பாஸ்மணி விற்றுக்கொண்டு இருப்பார்கள் அவர்களை உலக பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிஞர்கள் பண்டமாற்றாய் விற்று தம் வசதியான வாழ்வை உயர்த்திக்கொண்டே போவார்கள். கண்டிப்பாக இது கடின உழைப்புதான் இல்லையா பின்னே.

<< நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். >

வேலை பார்க்கும் நிறுவனம் என்றால் ஏதோ லிமிடெட் கம்பெனி என்றுதானே தோன்றக்கூடும்? இது டிரஸ்ட் என்கிற நிறுவனம்? சேர்ர்மன் முதல் மீதி எல்லோரும் டிரஸ்டிகள், அவரவர்க்கென்று தனித்தனியாய் வைத்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சி ‘நிறுவனங்களில்’ அவரவர்கள் டைரக்டர்களாய் இருப்பார்கள். இந்த வீட்டு ஓணர் நண்பர் வீட்டில் கெளரவ விருந்தாளி. அந்த முதலாளி இங்கே விருந்தாளி. ஓணருக்கு ஊழியம் பாஅர்க்க சம்பளம். விருந்தாளிக்கு விமானச்செலவு போக்குவரத்து என சில்லறைகல் தேரும். என இப்படியாக தாங்களே பின்னிக்கொண்ட வலையைத் தூக்கிக்கொண்டு வான்வெளியில் உயர உயர பறந்தபடி இருக்கும் பருந்துகளுக்கு கீழே இருந்து கீச்சு மூச்சு எனக் கத்தினால் பொறுக்கியாகத் தெரிவதில் ஆச்சரியமென்ன? எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் என்பது சர்வ அதிகாரமும் பொருந்திய முதன்மைப் பதவி இல்லையா? அதைப்போய் ஏதோ அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பாலுக்குக் கீழே வரப்போகிற கவர்மெண்ட் ஆபீஸ் பியூன் போல ஒரு நிறுவனத்தில் ’வேலை’ பார்ப்பதாய் என்ன ஒரு அடக்கம்.

வருடம் டைரக்டரின் சம்பளம் பணியாளர் சம்பளம் சதவீதம் ஃபோர்ட் ஃபெளண்டேஷன் அளிக்கும் நிதி டாடா அளிக்கும் நிதி அரசின் சுற்றுலாத்துறையில் இருந்து கருவிகளுக்காக அளிக்கப்பட்ட நிதி அரசின் சுற்றுலாத்துறையில் இருந்து வடகிழக்கு ப்ராஜெக்டுகாக அளிக்கப்பட்ட நிதி
2003 330756 1274364 26 3646862
2004 347304 1171209 30 3678284
2005 1088672 0 4079444 225000 100000
2006 1262016 0 3912891
2007 1521258 0 4178437
2008 1496560 0 4080785
2009 2966104 0 4370438 5547000
2010 2807727 0 4845046 5353000

http://www.wiki.indianfolklore.org/index.php?title=NFSC_Organizational_Details


முதலிரண்டு ஆண்டுகளில் மட்டுமே டைரக்டரின் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற ஆண்டுகளில் அதைக்கூட வெளியில் சொல்லிக்கொள்ளமுடியாமல் அமரருள் வைக்கும் அடக்கம் தடுத்துவிட்டது போலும். சம்பளம் போக மித்த செலவெல்லாம் கம்பெனி பேரில்.

கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட டிரஸ்டுதாண்ணா பெஸ்டு. ஹாயா செட்டிலாகி தொண்டு பண்ணிண்டே போய் சேந்துடலாம்.

பெத்தண்ணாவான முத்தண்ணா நரிக்குறவர் சமூகத்திற்கும் பொதுஜனமான நமக்கும் அத்தியாவசியமாய் உபயோகப்படும்படியாக நரிக்குறவர் அகராதி மட்டுமா போட்டிருக்கிறார். 


This paper presents the historyof Vedic chanting as householder's meditation practice within the Tamil Śaiva Siddhānta tradition. Distinguishing philosphical foundation of Śaiva Siddhānta tradition from the tradition of Vedanta the paper presents how certain Tamil non-Brahmin castes approach Kriṣṇa Yajur Veda for their daily meditation practice. As this tradition emphasizes the importance of mental worship as opposed to external worship carried out in the form of festivals and rituals, and also because the tradition evaluates advancement in the practice as a gradual abandonment of prayer elements and ritual components the paper argues that this

ஷோபா சக்தியின் கப்டன் கதையை நாகார்ஜுண பண்டித பாஷையில் கட்டுடைத்த பிள்ளைவாள் மேலே ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் எளிய நடையில் மொட்டவிழ்ப்பதைப் பார்த்தீர்கள் இல்லையா? ஆராய்ச்சி புரியாமல் போனால் டாலர் பெயருமா? இலக்கியக் கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும்படி இதே போல் எளிமையாய் எழுதிவிட்டால் சரக்கு இவ்வளவுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்து போகாதா? வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியாது என்பதால் உள்ளூர் சரக்கு. உள்ளூர்காரனுக்குத் தெரியாது என்பதால் வெளிநாட்டுப் பெயர் உதிர்ப்பு. சின்ன கல்லு பெத்த லாபம்.

சாம்ராஜ்யக் கனவுகள்

பத்திரமாகத்
தான்
இருக்கிறது
அவரவர் கிரீடத்துக்குள்
அவரவர் தலை

- விக்ரமாதித்யன்

நாட்டுப்புறக் கலைகள் போக எதிர்கால நிதிகளுக்காய் துறைதுறையாய் எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தவேண்டி இருக்கையில், இடையில் இந்த பொறுக்கி நாய் குரைப்பிற்கு வேறு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டி இருக்கிறது.

இன்னுமொரு ஆராய்ச்சி முத்து


The entire epic of Mahābhārata is performed as a set of storytelling, theatrical, and ritual performances in the northern districts of Tamilnadu in honor of Goddess Tiraupati. The month long Paratakūttu performances culminate in rituals where hundreds of men and women devotees walking barefoot on burning coals (Tīmiti) in fulfillment of their ritual vows and enacting the mythologies of Tiraupati being the woman born of fire. This paper analyzes the social constructs leading towards the highly charged trance states in men and women prior to, during, and after the fire walking rituals. Through the case

https://www.indianfolklore.org/nfscblog/

தீமிதிக்கிற பயலுவளுக்குக்
கால்ல கொப்புளம் வரும்
அத
எட்டிப்பாத்து ஆராய்ச்சி பண்றவனுக்கு
துட்டு வரும்.

வெளிநாட்டு புத்தக அலமாரிகளுக்காகவே பிரத்தியேகமாய் ஆர்டரின்பேரில் செய்யப்படும் இவ்வகையான அறிவார்த்த ஆராய்ச்சிகளெல்லாம் என் போன்ற லும்பன் பொறுக்கிகளுக்குக் கனவிலும் புரிய சாத்தியமுண்டா?

<ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் வரவில்லை என்பது மட்டுமல்ல வெவ்வேறு மொழியியலாளர்களோடு சேர்ந்து அகராதிகள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ஒருவனுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, பணம் கொடுத்துவிட்டால் ஒருவனால் செய்துவிட முடியுமா, பணம் கொடுத்துச் செய்யச் சொன்னாலுமே தன் வாழ் நாளின் சிறந்த வருடங்களை எந்தவித எதிர் காலமோ, அங்கீகாரமோ இல்லாத இந்த மாதிரியான பணிகளில் யாரேனும் ஈடுபடுவார்களா என்பதையெல்லாம் ஒருவர் யோசித்துப்பார்க்கவேண்டும்.>


நிலபுலத்தை விற்று இருந்த வீட்டை விற்று பெண்டாட்டி நகைகளை விற்று இலக்கியம் வளர்த்த சி.சு.செல்லப்பாவையும் தாண்டிய, பணமில்லாத அங்கீகாரமில்லாத சிந்தனையுலக சேவையைத்தான் பிள்ளைவாள் ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை பேலஸ் ஷீட்டே பேசுகிறதே.

இப்படி சமூகத்தைத் தொடர்ச்சியாய் அகழ்ந்து, அகலப்படுத்திக்கொண்டே இருந்தால்தானே நீர் வரத்து அதிகமாகும். 2002-03ல்  (Rs.36.46,862/-) 36 லட்சமாய் இருந்த வரத்து 2009-10ல் (ஃபோர்டு Rs.48,45,046/- + டாடா Rs.53,53,000/-) = 1,01,98,046/-ஒரு கோடியைத் தொட்டிருகிறதென்றால் எவ்வளவு கடினமான உழைப்பு இதன் பின்னால் இருக்கிறதென்பதைப் பொறுக்கிகளால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? நிறுவன ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை தம் சம்பளமாய்ப் பெற்றுக்கொள்பவரும் சட்டப்படி ஊழியர்தான் சந்தேகமே இல்லை.

முதலாளி நிறுவனம் என்றால் சகலத்திற்கும் அவரே பொறுப்பு. பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி தொடங்குவதில் இருக்கும் சவுகரியமே சட்டப்படி டைரக்டரும் ஒரு ஊழியர் என்பதும்தான்.

தொண்டு நிறுவனம் என்றால் கொண்டாட்டம்தான். இன்றைய செய்தியைப் பாருங்கள். அன்னா ஹசாரேவின் India Against Corruption ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த  Mumbai Metropolitan Region Development Authority (MMRDA) யிடம் ஆஸாத் மைதானத்தைக் கேட்கிறது. எப்படி? இலவசமாய். சலுகை வாடகைக்கூட இல்லை இலவசமாய்க் கொடு என்று கேட்கிறது. அவர்கள் மறுக்கவே, ஊழல் எதிர்ப்பாளர்கள் உயர்நீதிமன்ற படியேறி வழக்கு தாக்கல் செய்கின்றனர். நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. எந்த அடிப்படியில்? உங்கள் நிறுவனம் தொண்டு நிறுவனம் அல்ல. டிரஸ்ட் என்று பதிவுசெய்துகொண்டு வந்து கேளுங்கள் என்கிறது. ஹசாரே கும்பல் அவ்வளவுதானே என்று அரவிந்த் கேஜர்வாலின் டிரஸ்டான Public Cause Research Foundation, மூலம் தம்பிடி செலவின்றி விண்ணப்பிக்க உள்ளது.


http://www.thehindu.com/news/national/article2741523.ece

டிரஸ்டுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு, மக்களுக்குத் தொண்டாற்றுகிறது என்பதால் வரி விலக்கு உண்டு. தொண்டு நிறுவனங்கள் உண்மையானவை அவற்றை நடத்துவோர் தன்னலமற்ற சமூக சேவகர்கள் என்பதே பரவலான நம்பிக்கை.

<கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி என்ற என்னுடைய பதிவில் சினிமாப்பாடல்களை உதாரணம் காட்டியதில் ஆண்டுகள் தப்புத்தப்பாகிவிட்டதாம். இவர் கண்டுபிடித்துவிட்டராம். தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் நான் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. 

கண்ட்ரோல் எஃப் போட்டு ‘நினை’ என்று தேடினாலே இரண்டுதான் அந்தப்பதிவில் கிடைக்கின்றன.

ஒன்று: <நல்ல வசதியான வாழ்க்கை அமைந்திருந்தால் கம்பீரமும் தேஜஸும் நிறைந்த கவிஞராக அல்லவா விக்கிரமாதித்யன் நம்பி புகழ் பெற்றிருப்பார் என நான் நினைக்காத சந்தர்ப்பங்களே இல்லை.>

இரண்டாவது : <ராம்ஜி_யாஹூDec 18, 2011 02:46 PM
மிக அரிய ருசியான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தமிழ் இலக்கணத்தை முறைப்படி பயின்ற கவிஞர்களுள் நம்பியும் ஒருவர் என எண்ணுகிறேன்.
அவரின் இலக்கணப் புலமை பற்றி சந்தோஷமான நினைவுகள் இருந்தால் பகிரவும்>

உண்மை ஆதாரபூர்வமாய் இப்படி இருக்க, தொண்டு நிறுவன அறிஞரின் பித்தலாட்டம் என்ன?

<இந்த மாதிரியான பாடல்வரிகளை இந்த மாதிரியான செய்திகளுக்கு தலைப்பாக வைப்பது போன்ற, இந்த மாதிரியான ஒலிகளை பயன்படுத்துவது போன்ற உதாரணங்களைக் கொடுத்து விளக்கினார் என்று எழுதினால் அவர் பேசிய வருடத்தில் இந்தப் பாடல்கள் திரைக்கு வரவில்லையே என்று மாமல்லன் எழுதினால் என்ன செய்வது? உதாரணங்கள் கொடுப்பது நான். இந்தமாதிரியான உதாரணங்களைக் கொடுத்து நம்பி பேசினார் என்று எழுதினால் அந்த உதாரணங்களை விக்கிரமாதித்யன் நம்பியே கொடுத்தார் என்று எப்படி பொருள்படும்? யார் வேண்டுமென்றாலும் என் பதிவினைப் படித்துப்பார்க்கலாம்.>


இதுபோன்ற வேறு ’எதை’ நம்பிராஜன் உண்மையில் ’எதைச் சொன்னாரோ’ அதைக் கூறுவதை விட்டுவிட்டு பின்னாளில் நக்கீரனில் எழுதப்பட்டதை, என்னைப் பொறுக்கி என்று நிரூபிக்க ’பொறுக்கி மொழிகளை’ முன்னால் கொண்டுபோய் செருகும் இந்தக் காரியத்திற்குப் பெயர் என்ன? மாமல்லன் மொழி ‘பொறுக்கி மொழி’ என வாய் கிழிகிறதே, இநதத் தலைப்புகளில் இருப்பவை எம்டிஎம் செய்த துளியும் நேர்மையற்ற பொறுக்கித்தனமா இல்லையா? 

நான் ஒரு பொறுக்கி என்பதை நிரூபிக்க ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும். என் தளம் ஒன்றே போதாதா? பொறுக்கிகளுக்கு நான் பெரும் பொறுக்கிதான் இதில் சந்தேகமென்ன?

உண்மையான பிரச்சனை என்னவென்றால், கிளவுஸ் போட்டுக்கொண்டு பல் துலக்கும் மேட்டுக்குடி எம்.டி.எம் கப்டன் கதையைக் கட்டவிழ்த்த மொட்டவிழ்ப்பை இணையத்து வெள்ளாவியில் வைத்து, படிப்பாளிகளும் படிப்பும் கட்டுரையில் வெளுத்து முத்தண்ணா என்கிற ஆராய்ச்சியாள அண்ணாத்தை வெறும் மண்ணாந்தை என்று சொல்லிவிட்டேன் என்பதால் உண்டன கடுப்புதான் இது.

இணையத்தில் படிப்பவர்கள் முழு கேனையர்கள் என்று எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை. நம்பிராஜன் பற்றிய பதிவில் உண்மையில் எழுதியிருப்பவை என்ன?

<அரசியல் தலைவி ஒருவரின் செயல்பாட்டினைக்குறிக்க ‘சண்டி ராணியின் திக்குமுக்கு தக்குத்தாளம்’ என்ற செய்தித் தலைப்பாய் வைத்தது, எம் எல் ஏ ஒருவரின் ஊழலைச் சொல்ல ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ பாடல் வரியினைப் பயன்படுத்தியது என்பது போன்ற பல உதாரணங்களைக் கொடுத்து பத்திரிக்கை உரை நடையின் உருவாக்கத்தினை விவரித்தார். >

என்றால் என்ன பொருள்? இவையும் இவை போன்ற இன்னபிறவும் என்று பொருள்படாதோ? வரலாற்றின்படி இந்நிகழ்ச்சிகளே அப்போது 1989ல் நடநதிருக்காதபோது கால யந்திரத்தில் ஏறிப்போய் நம்பிராஜன் கல்லூரியில் பேசினாரா?

அரசியல் தலைவி அப்போது ஒரு பிளவுக்குதான் தலைவராகி இருந்தார். 91 ராஜீவ படுகொலை அலையில்தான் மூர்க்க பலத்துடன் ஆட்சியையே பிடித்து சண்டியாகிறார் எனும்போது, இந்தத் தலைப்பை அதற்கும் முன்பாகவே வைத்திருக்க வரலாற்று சாத்தியமே இல்லை எனும்போது, நம்பிராஜன் எப்படி அதைப் பேசி இருக்கமுடியும்? அட ’அது போல’க்கூட பேசியிருக்க எப்படி முடியும்? போதாக்குறைக்கு, நக்கீரனின் ஆசிரியராக இருந்தது வித்யா ஷங்கர்தான் அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தவர்தான் நம்பிராஜன். 1987 டிசம்பர் 24ல் எம்ஜிஆர் மறைந்து, 1988ல் அஇஅதிமுக உடைந்து இரு பிளவுகளாய் இருந்தபோது தொடங்கப்பட்டது நக்கீரன் என்கிறான் நக்கீரன் ஆசிரியராக இருந்த வித்யா ஷங்கர். சண்டி ராணி பாட்டும் பின்னால் வந்தது சண்டி ராணியாக ஆனதும் பின்னால் நிகழ்ந்தது அந்தத் தலைப்பு வைக்கும் சம்பவமும் பின்னால் நிகழ்ந்தது இது போக, நக்கீரன் தொடங்கப்பட்டது கூட இருந்த விக்ரமாதித்யன், தம் பெயருக்கேற்ப நாடாறு மாதம் காடாறு மாதம் என மனிவி இருந்த ஊருக்கும் சென்னைக்குமாய் அல்லாடிக்கொண்டிருந்தவர். நக்கீரன் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே அதாவது 1988லேயே நக்கீரனில் இருந்து வெளியில் போய்விடுகிறார். பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே 1989க்குப் பின்னரே திரும்ப உள்ளே வருகிறார் என்பதும் நடந்தது என்று இருக்கையில், இதுபோக நக்கீரனின் ஆசிரியராக இருந்த வித்யா ஷங்கரே 90களுக்குப் பிறகுதான் இப்படியான தலைப்புகளை வைத்தோம் என்று சொல்லுகிறான் எனும்போது, எப்படி ஐயா நம்பிராஜன் உன் கல்லூரியில் உலுங்கக் குலுங்க பேசியிருக்க முடியும் என்று கேட்டால் வரும் பதில் என்ன?

இதையே இல்லை, இதைப்போன்ற தலைப்புகளை வைத்ததாய்ப் பேசினார் என்றல்லவா எழுதினேன். 


தன்னைப் பெரிய ஆளாய்க் காட்டிக்கொள்ள மனிதர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அம்மாடியோவ்.


<குற்றாலம் கவிதைப்பட்டறையில் நான் வாசித்த கட்டுரையைத் தொடர்ந்து பெரியவர் தருமு சிவராமு என்ற பிரமிளுக்கும் அமுல்பேபி எனக்கும் ஏற்பட்ட வாதம் குரல் உயர்த்திய வாய்ச்சண்டையாயிற்று.>

நடந்தது என்ன? பட்டறையில் பிரமிள் வந்து உட்காருகிறார். எம்டிஎம் வாசித்த கட்டுரையில் தருமு சிவராமு என்று குறிப்பிடப்படுவதைக் கேட்டவுன், அது நானில்லை வேறு யாரோ என்கிறார் பிரமிள் (அப்போதைய நட்சத்திர நடமாட்டத்திற்கு ஏற்ப தம் பெயரை நியூமராலஜி படி மாற்றிக்கொண்டே இருக்கும் பழக்கமுடையவர் என்பதால்) எம்டிஎம்மும் பிரம்மராஜனும் இது பற்றி அப்போதைய அவர் பெயர் என்ன்வென அடுத்தவருக்கு தெரிய எப்படி சாத்தியம் என்கிற விதமாகக் கேட்கிறார்கள்.(நான் அங்கு நேரடியாக இருக்கவில்லை என்பதால்  என்கிற விதமாக என்கிறேன்) பிரமிள் கிளம்பிச் சென்று விடுகிறார். பத்து நிமிடங்கள் கூட பிரமிள் அங்கு இருக்கவில்லை. கூச்சல் குழப்பம் ஏதும் நடந்ததா என்று பட்டறை நடத்தியவரிடம் இப்போது விசாரித்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை அவர் சும்மா எழுந்து போய்விட்டார் என்றார் பட்டறை நடத்தியவர்.

எம்டிஎம் என்ன கதையா எழுதுகிறார் கற்பனையைக் கலந்து, 

<பெரியவர் தருமு சிவராமு என்ற பிரமிளுக்கும் அமுல்பேபி எனக்கும் ஏற்பட்ட வாதம் குரல் உயர்த்திய வாய்ச்சண்டையாயிற்று.> 

என்று எழுத வேண்டிய அவசியம் என்ன? இது பிட்டு போட்டு தன் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன?

கேடபவன் கேனையன் என்கிற நினைப்பா? கையும்களவுமாய் பிடிபட்டால் தான் அப்படிச் சொலவே இல்லை என்று சொல்வது எம்டிஎம்முக்குக் கைவந்த கலை என்பதற்கு சிறந்த உதாரணம் வேண்டுமா? வாருங்கள் ஜெயமோகன் தளத்திற்கு.



<அன்பிற்குரிய ஜெயமோகன்:

குற்றாலம் கவிதைப் பட்டறையில் மௌனி-பார்ப்பாரக்குட்டி காமெண்ட் நான் சொல்லவில்லை. கட்டுரை முழுக்க நான் பேசாததையோ, எழுதாதையோ -மற்றவர்கள் சொன்னதை என் மேல் ஏற்றி-’திரண்ட பொருள்’ காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.>

இது ஜெயமோகனுக்கு மேதகு எம்.டி.முத்துகுமாரசாமி அவர்கள் எழுதிய கடிதம். இதற்கு ஜெயமோகன் சொல்வது என்ன?

<அன்புள்ள எம்.டி.எம்,

குற்றாலம் கவிதை அரங்கில் நீங்கள் சொல்லி சிரிக்க நானே கேட்ட வரி அது என்பதே என் நினைவு. ஆனால் நீங்கள் அதைப் பதிவுசெய்யாதபோது அதை மறுப்பீர்கள் என்றால் நான் அதை சொல்ல மாட்டேன். எடுத்துவிடுகிறேன். மன்னிக்கவும்>

அப்ப சொல்றதையும் சொல்லிட்டு எங்கியும் எழுதி பதிவாகலேங்கறதால, தெகிரியமா இப்ப இல்லேன்னு சொல்றியே நீயெல்லாம் படிச்சவனாடா நாயே பொறம்போக்கே நீ நல்லா இருப்பியா என்றால் லும்பன் மொழி பொறுக்கி மொழி

ஜெயமோகன் எழுதியிருப்பதைப்போல் நாசூக்காக, எங்கும் பதிவாகவில்லை என்பதால் என் பாதுகையைக் கழற்றி என்னையே அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, எல்லாம் என் நேரம் என்று எழுதினால் உயர்ந்த இலக்கியமொழி.

<இலக்கியத்துறையில் செயல்படும் மாமல்லன், கேவலப்படுத்தினாரென்றால் அவரை என்னவென்று அழைப்பது? ஒரு எழுத்தாளனுக்கு எல்லா சிந்தனைத்துறைகளைப் பற்றிய அறிவு இருக்கவேண்டியதில்லை; ஆனால் சிந்தனைத்துறைகள் பற்றிய மரியாதை கூடவா இருக்காது?>


சார்வாள் இப்படில்லாம் அபாண்டமா எழுதலாமா? அயல்நாட்டு அறிஞாள்லாம் அபிவாதையே சொல்றாப்ல என்னமான் மரியாதைக்குரிய காரியங்கள் பண்ணிண்ட்ருக்கேள்னு எப்டி விலாவாரியா எழுதிண்ட்ருக்கேன் என்னைப்போயி இப்டி சொல்றேளே நியாயமா?

<விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய நிர்ப்பந்தத்தினால் தன் கவிதை மொழிக்கு சம்பந்தமில்லாத நேரெதிரிடயான வெகுஜன பத்திரிக்கை உரைநடை உருவாக்கத்தில் பங்குபெற்றார். கேள்வி நம்பியைப் பற்றி அல்ல. மேலும் அவர்கள் அந்த உரைநடையை உருவாக்கியதும் பயன்படுத்தியதும் ஊழல் அரசியல்வாதிகளையும், திரை மறைவு செயல்பாடுகளையும் அம்பலமாகுவதற்காக.>

நம்பியாண்டார் நம்பி உருவாக்கின பாஷைல அவர் அரசியல் ஊழலை எழுதினார். என் லெவலுக்கு உங்க அறிவார்த்த லோகத்துல நடக்கற அதே திரை மறைவு செயல்பாடுகளைனா அம்பலபடுத்திண்ட்ருக்கேன்.

விமலாதித்த மாமல்லனின் பொறுக்கி மொழி என்கிற எம்.டி.எம்மின் கட்டுரைக்கு சுட்டி கொடுத்த மண்டை கனத்த புண்டைக் கவிஞருக்கு இந்தப் பித்தலாட்டம் ஏன் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவுத் திராணியில்லை,  அவ்வப்போதைய அம்பி பாலிடிக்ஸில் மட்டுமே தீவிர ஆர்வம்.

<லும்பன் மொழியென்றால் என்ன என்ற உரையாடலில் லும்பன் மொழி என்பது பொறுக்கி மொழி என்று மொழிபெயர்க்கப்படவேண்டும் அது மாமல்லன் குறிப்பிட்டது போல விளிம்பு நிலை மக்களின் மொழி அல்ல, வட்டார வழக்குகளோ ஜாதீய வழக்குகளோ அல்ல என்று விளக்கி பொறுக்கி மொழி வெகுஜன மொழியாக தமிழில் எப்படி தோற்றம்பெற்றது>

நுணிப்புல் ஆடுகள் இதற்கு ஏன் எல்லாம் புரிந்ததுபோல் துள்ளிக் குதித்தன?

<ஆனால் குறிப்பிட்ட வெகுஜனப் பத்திரிக்கை உரை நடையிலிருந்து உருவான பொறுக்கி மொழியை மாமல்லன் எதற்கெடுத்தாலும் பயன்படுத்துவதன் ‘நிர்ப்பந்தம்’ என்ன என்பதுதான் கேள்வி.>

எங்கே வந்து இதைச் சொல்கிறார் எம்டிஎம்? சென்னை வாழ்வின் யதார்த்த வெயில்தான் மேலே பட்டதில்லை என்றால் இணையத்தின் யதார்த்தமும் தெரியாதா? ஆராய்வதற்கு அடிப்படைத் தகுதியே யதார்த்தம் தெரியக்கூடாது  ந்பதுதான். அப்போதுதானே ஏசி அறைக்குள் நிம்மதியாய் பீராய முடியும்? 

ஜமாலன் டமில் நேசமித்திரன் தமிழ் போல் நாகார்ஜுண கோணங்கிகளைப் புறமுதுகிடவைக்கவல்ல திந்தோளர்கள் ஓரிருவரைத் தவிர ஒட்டுமொத்த இணையமே வடிவேலுவின் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுகளையும் ஆணியே புடுங்கவேணாம்களையும் ஆப்புககளையும் தோடாக்களையும் கையப்புடிச்சி இழுத்தியாக்ளையும் ங்கொய்யாலக்களையும் தண்ணி கலக்காத சரக்காய் அடித்து உழலுபவர்களால் ஆனது என்பதே பிள்ளையாருக்குத் தெரியாதா? ஆக நம்பிராஜன் வளர்த்தெடுத்த நக்கீரன் மொழி லும்பன் மொழி பொறுக்கி மொழி என்றால் அதை பயன்படுத்துவோர் லும்பன்கள் பொறுக்கிகள் என்பதுதான் இலக்கிய சின்ராசுவின் உண்மையான கருத்தென்றால் நான் மட்டுமே எப்படி பொறுக்கியாக முடியும்? இல்லை ஒட்டுமொத்த இணையத்தையும் பார்த்து பெதகொஸ்தே பிரச்சாரகராய் ஏ பாவிகளே என்கிறாரா?

இடையூறுக்கும் பேராசிரியர் மன்னிக்கவேண்டும். ஓயாத ஆராய்ச்சி வேலைகளுக்கிடையில் என் ஐயம் தீர்த்து உதவ வேண்டும். 

<‘தமாசு’, ‘செம’, ‘ஆப்பு’, ‘சூப்பர்’, ஆகிய பிரயோகங்கள்,> 

இணையத்தில் இவற்றையும் சகஜமாய் உபயோகித்துக்கொண்டு என்னைப் பொறுக்கி என்று எழுதிய உங்கள் பதிவையும் பாராட்டி சுட்டிகொடுப்போரைப் பார்த்து, ஐயன்மீர் இதற்கு பதில் நீங்கள் சூத்து கொடுப்பதே சாலப் பொறுத்தமாய் இருக்குமே என்று ஒருவேளை நான் சொல்கிற பட்சத்தில் அது பொறுக்கிமொழி ஆகிவிடுமா?

முரண்பாட்டின் சுரணையின்றி, தன்னையும் ஒரு அறிவுஜீவியாய்க் காட்டிக்கொள்ள இலக்கிய கோயிந்தா கோயிந்தோ போட்டு எவனுடையதையாவது பிடித்துத்தொங்கிக்கொண்டே இருக்கவேண்டிய நிபந்தம் இணையத்தில் அப்படி என்ன இருக்கிறது? இது எப்படி உருவாயிற்று? தலீவா அரசியலுக்கு வா என்பது எப்படியான குரல்? வெகுஜன் மொழியா? வட்டார வழக்கா? லும்பனைசேஷனா? பொறுக்கி மொழியா? ஐய்யராத்து அம்பி, தீக்குளிக்கவும் தயங்காத தீவிர திராவிடக் கொழுந்தாய்த் தன்னைக் காட்டிக்கொள்ள, பாப்பாரத் தாயோளிகள் என அவ்வப்போது கூவுவது ஏன்? அப்படி உருவான மனநிலைக்கு ஜாதீய சமூகவியல் காரணங்கள் என்னென்ன என்று நீங்கள் ஏன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதக்கூடாது? டாமில் இணையமும் டரமும் என்று அதையே இங்கிலீஷில் அப்ஸ்ட்ராக்டாக அறிவார்த்த பூந்தி தூவி அனுப்பி வைத்தால் கிடைக்கிற அயல்நாட்டு நிதியில் அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்கு அக்கடாவென குண்டியை அசைக்காமல் வண்டியை ஓட்டலாமே?

<'சிறுமி கொண்டு வந்த மலர்', 'முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள்' ஆகிய கதைகளை எழுதிய மாமல்லனா இது?> 

ஓத்தா ங்கோத்தா கோத்தா என்று வாய்க்குவாய் பேசிக்கொண்டே இருந்தாலும், சப்பி சல்பேட்டா அடித்துவிட்டு சாக்கடையில் மெய்மறந்து கிடந்தாலும் பிறப்பால் தான் ஒரு பிராமணன் என்பதை ஒரு கணமும் மறவாத பியூனைப் பற்றி, நாடகப்பாங்கற்ற ’அசல் மெட்ராஸ் பாஷையில்’ 1986ல் புறப்பாடு எழுதியவனும் மாமல்லனே என்பது வி ஆர் மோர் தேன் பிராமின்ஸ் என அடிமனதில் நினைக்கும் சைவப்பிள்ளைமார் குலத்துதித்த அறிவுக் கொழுந்துக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்.

<இல்லை சுந்தர ராமசாமி இப்போது இருந்திருந்தால் மாமல்லன் வகைதொகையில்லாமல் பயன்படுத்தும் உரைநடையை ஆதரித்துதான் இருப்பாரா?>

அவர் கண்டித்திருப்பாரோ இல்லையோ, நிச்சயம் அதைப்பற்றி நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஒருவரை மதிப்பதற்கும் அடிமையாய் இருப்பதற்குமான வேறுபாடு எங்கள் இருவருக்குமே தெரியும். அவரும் எதிர்பார்த்ததில்லை நானும் இருந்ததில்லை. இந்த ஆராய்ச்சிக்கு ஒரு பயலிடமும் நயாபைசா பேறாது. ஆகவே இதுகுறித்து எம்டிஎம் ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை.

<மாமல்லன் தன் பதிவில் கொடுத்திருக்கும் விக்கிரமாதித்யன் கவிதையில் உள்ள மொழியும், மாமல்லனின் பதிவிலுள்ள பொறுக்கி உரை நடையின் மொழியும் ஒன்றா?> 

மொழி என்றால் வார்த்தை என்பதுதான் மொழியறிஞரின் பேரறிவா? 

நீட்டி மொழக்கிப் பேசறியா? நாக்குப்போட மட்டும் வெச்சிக்கடா உன் நாக்க, லவ்டே கா பால் என்றுதானே அந்தக் கவிதை சொல்கிறது? அந்த வரிகளில் இருப்பதும் தொனிப்பதும் என்ன பூர்ணகும்ப மரியாதையோடு கூட்டிச்செல்கையில் ஓதப்படும் மந்திரமாவே? 

இப்படி எதிரியை அடிக்கப் புரண்டு புரண்டு பேசும் நாக்கைப் பற்றித்தானே ஐயா நம்பின் கவிதையே பேசுகிறது.

எரிகிறபோதே 
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு 
நாலும் பேசும்தான்
நல்லது 
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்...

- விக்ரமாதித்யன்

நரகல் நடை மாமல்லனுக்கு, பதில் சொல்கிறேன் என்று, இந்தக் கவிதை எப்படி பொறுக்கி மொழி அல்ல என்பதை நாகார்ஜுணன் வளர்த்தெடுத்த அசல் அறிவுஜீவி நடையில்  எம்டிஎம் எவ்வாறு எழுதுவார் என்று நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை அல்லவா?

கவிதையில் வரும் நாக்கை ஆவேசக்கூச்சலில் கட்டியெழுப்பப்பட்ட ஹிட்லரின் நாஜி கலாச்சாரமாக கட்டமைத்தும் வாசிக்கலாம். குந்தர் கிராசின் டின் ட்ரம் நாவலில் வரும் சிறுவனின் குரலாகவும் கட்டுடைக்கலாம். பெண்ணியப் பிரதியிடம் தலைகுனிய நேர்வதை அவலமாக எண்ணும் ஆணாதிக்கத்தின் உள் மனமொழியாகவும் தட்டி எழுப்பி வாசிக்கலாம். நக்குவதையும் துழாவுவதையும் கவிதை எழுதியவரின் ஜாதீய சமூகப் பின்புலங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வாசித்தால் பழநி பஞ்சாமிர்தத்தை எப்படி ஒரு சைவப்பிள்ளைமார் தெய்வ பக்தியுடன் அணுகுகிறார் என்பதும் வாசகனுக்குக் கிடைக்ககூடும். பஞ்சாமிர்த டப்பாவின் அடிவரை நாக்கை செலுத்துவதில் பொருளாதார முரணியக்கம் படைப்பாளியின் நோக்கத்தையும் மீறி படைப்பு கொள்ளும் வெற்றியாகவும் பார்க்க வழிய்இருக்கிறது. இதுவே இலக்கியத்தின் வெற்றியாகவும் கொள்ளலாம். பிரதி மட்டுமே முக்கியம் என்று பின் நவீனத்துவம் கூறுவது இதில் உறுதிப்படுவதாக எடுத்தொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதையும் கூறிவிடுவதுதான் முக்கியத்துவத்தை முன்வைக்காமையை வலியுறுத்துவதாகவும் யோசிக்கலாம். இப்படிப் பார்க்கையில் மோதிரம் போடுவதாகக் கூறிய நம்பின் ’கூற்று’ முக்கியமில்லை மோதிரம்தான் முக்கியம் என்பதும் தெளிவாகக்கூடும்.

தப்பித்தவறி இப்படி எழுதிவிடாதீர்கள் எம்டிஎம். அதை சங்கர ராம சுப்பிரணியம் வேறு அவருக்குப் படித்துக் காண்பித்துவிடப்போகிறார். எனக்கு நன்றாகத் தெரியும் நம்பி மோசமான ஆள். 

நாகார்ஜுணன் புத்தகத்து அட்டைப்படத்து ஆலென் கின்ஸ்பர்க் போஸிலேயே, ஃபோர்ட் ஃபெளண்டேஷன் மீட்டிங் நடக்கும் நுங்கம்பாக்க கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்கே வந்து மேஜைமேல் ஏறி கால் அகட்டி நின்றபடி, தமிழை ஏண்டா இப்படிக் கொல்றே பேமானி, இதுல மோதிரப் புண்டைதான் உனக்கு கேக்குதோ எனக் கத்தத்தொடங்கிவிட்டால் எல்லா வெள்ளைக்காரர்களும் ஒரேவிதமாய் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. அடுத்த பேலன்ஸ்ஷீட்டே தயாரிக்க முடியாத அளவிற்கு நிலைமை பேஜாராகிவிடலாம்.

<நாகார்ஜுனனின் புத்தக அட்டையை தன் பதிவில் கொடுத்திருக்கிறாரே மாமல்லன், பொறுக்கி மொழி நாகர்ஜுனன் கடுமையாக விமர்சிக்கும் அ-கலாச்சாரத்தின்பாற்பட்டது, எதிர்கலாச்சாரம் சம்பந்தப்பட்டதல்ல என்பது கூடவா தெரியவில்லை மாமல்லனுக்கு? இல்லை எல்லாருடைய சாமானமும் ஒன்றுதானே என்ற அ-கலாச்சார பதில்தானா அதற்கும்?>

தங்கம் வெள்ளி விலை நிலவரம் போல, பொறுக்கி மொழி பற்றி நாகார்ஜுணனின் இன்றைய நிலவரம் நிலைப்பாடு என்னவென்று எம்டிஎம்முக்கு உறுதியாகத் தெரியுமா? எப்போது வெயில் எப்போது மழை என்று சொல்ல முடியாத ஊட்டியின் தட்பவெப்பம் போன்றதல்லவா அது? ஊட்டியில் உறுதியாக இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் குளிர் என்பதைப்போல நாகார்ஜுணனிடம் மாறாத ஒரே விஷயம் படித்தால் பல்லுடைவது மட்டுமே அல்லவா?

< ‘டேய் பேராசிரியப் புடுங்கி, வெளியே வாடா’ போன்ற வாசகங்களோடு கடுமையான கெட்ட வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து சரமாரியாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. வேட்டி இடுப்பிலிருந்து நழுவிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் நம்பி?’ என்றேன். ‘ஐந்தாவது நபர் யாருடா புண்டே?’ என்றார். >

இப்படிப்பேசும் நம்பிராஜன் பொறுக்கியா இல்லையா? இது பொறுக்கி மொழியா இலையா? நக்கீரனில் நிர்பந்தம் ஆகவே எழுதினார் ஐயா சரி. நேரில் கெட்டவார்த்தை பேச அப்படி என்ன அவசியம்? குடித்துவிட்டார் என்பது சமாதானம் ஆகுமா? அவர் குடிப்பதே அப்ப்டிப்பேசுவதற்காகத் தானே? அப்படிப் பேசுபவர் பொறுக்கியா இல்லையா? ஆம் எனில் எம்டிஎம் ஏன் அந்தக் கட்டுரையிலேயே அதை சொல்லி கண்டிக்கவில்லை? பெரிய பிள்ளை என்கிற பாசமா? அது பொறுக்கி மொழி இல்லை எனில் என் லவடா மீது மட்டும் ஏன் இவ்வளவு காண்டு? பேசினால் பரவாயில்லை எழுதினால்தான் பொறுக்கி மொழி எழுதுபவன் பொறுக்கி என்றால், என் கட்டுரைகளை அப்படியே வாசித்து பதிவில் ஆடியோ கட்டுரையாய் வெளியிட்டால் ஃபெளண்டேஷன் மொழியாய் ஆகிவிடுமா? 

<ஒரு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்திருந்தால் கம்பீரமும் தேஜஸும் நிறைந்த கவிஞராக அல்லவா விக்கிரமாதித்யன் நம்பி புகழ் பெற்றிருப்பார் என நான் நினைக்காத சந்தர்ப்பங்களே இல்லை>

கம்பீரமும் தேஜஸும் புகழும் ஃபோர்டு ஃபெளண்டேஷனின் குத்தகையிலா இருக்கின்றன? நீர்த்துப்போயிருந்தாலும் விக்ரமாதித்யனின் கவிதையில் இருப்பதே உண்மையின் ஜீவன்தான். அதையும் ஃபெளண்டேஷன்காரனிடம் அடகுவைத்துவிட வேண்டுமா?

<விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய எந்த இலக்கிய கட்டுரையிலும் சரி, கதையிலும் சரி, கவிதைகளிலும் சரி எனக்குத் தெரிந்தவரை ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளின் நடையைப் பயன்படுத்தியதில்லை.>

ஜெயமோகனின் அறம் சீரீஸ் போல கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்கிற தலைப்பில் எம்.டி,எம் எழுதிய ’உண்மை மனிதர் கதை’யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ’விக்ரமாதித்யன் என்கிற கவிஞனின் மொழியும் நம்பிராஜன் என்கிற குடிகாரனின் மொழியும்’ என்று ஆராய்ச்சி பேப்பரை சம்ர்ப்பித்து ஃபெளண்டேஷன் எதிலாவது பொற்குவை கிடைத்தால் ஜெயமோகன் போலவே எம்டிஎம் வட்ட விருதென அறிவித்து ஃபிக்ஸட் டெப்பாஸிட்டாய்ப் போட்டுக் கொடுக்கலாமே.

<ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மாமல்லனுக்கும் தகராறு இருந்தால் அதை எதற்கு இந்த விவாதத்தில் கொண்டுவருகிறார் மாமல்லன்?>

லும்பன் சும்பன் வம்பன் விளக்கம் # கொட்டையைக் கசக்கினால் லும்பன் ஜட்டியைக் கசக்கினால் சும்பன் பேண்டோடு கெளரவமாய் தடவினால் வம்பன்

<தமிழ் உரை நடைகளின் வகைகள், அவற்றின் உருவாக்கம், பொருத்தப்பாடு, பயன்பாடு, ஆகியவற்றைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதமும் உரையாடலும் மீண்டுமொருமுறை மாமல்லனின் பொறுக்கி உரை நடையால் திசை திருப்பப்பட்டிருக்கிறது.>

ஐயோ பாவம் இன்னொரு ஃபோர்டு ஃபெளண்டேஷனுக்கான ஜிகினாப் பேப்பர் வீனாகிவிட்டதே என்கிற வருத்தமா?

ஷோபா சக்தியின் கப்டன் கதைக்கு எம்டிஎம் செய்த கட்டுடைப்பைக் காமெடி பண்ணிக் கொட்டையுடைப்பாக்கியதால் என்மேல் உண்டான கோபத்தில் உன் நண்பர்களான நம்பி வித்யா ஷங்கர் நக்கீரனில் வளர்த்த பொறுக்கி மொழி என்று ட்விட்டுப் போட்டாயிற்று. அதை நிறுவுவதற்காகவும் கூடவே நம்பிராஜப்பிள்ளைவாள் கோபித்துக்கொள்ளாதிருக்கவும் அவர் பேசியிருக்கவே முடியாதவற்றை எழுதியது கோட்டு சூட்டு போட்ட கடைந்தெடுத்த பொறுக்கித்தனமா இல்லையா? 

படிப்பாளியின் படிப்பின் லட்சணம், படைப்பாளியும் படிப்பும் என்கிற கட்டுரையின் மூலம்  பகிரங்கமானதும் ஏற்பட்ட பிம்ப சிதைவைத் தாங்கவியலாத கோபத்தால் தன் சிதற்ல்களை மூடி மறைக்க கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்கிற கதைட்டுரை எழுதி தன்னைத் தூக்கி நிறுத்திக்கொள்ள நடந்த முயற்சிதானே.

நக்கீரன் பத்திரிகையின் பொறுக்கி மொழியில் பேசுகிறாய் என்று சும்மா சொல்லிவிட்டுப்போயிருந்தால் இப்படிக் கோமண அவிழ்ப்புக்காவது ஆளாகாமல் இருந்திருக்கலாம் இல்லையா?

என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பிரயோஜனம்? எழுத்தாளர்கள் ஜெயமோகனுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இருக்கும் நாய் வாயில் குச்சியைக் கொடுக்ககூடாது என்கிற ஞானம் ஏன் எம்டிஎம்முக்கு வாய்க்கவில்லை? யானையும் கொசுவும் என்கிற குட்டிக்கதை சொல்லி சாரு நிவேதிதா பட்டறிவை வளர்த்துக்கொண்ட கதை தெரியாதா? 

விளிம்பு நிலை, வட்டார வழக்கு, வெகுஜன மொழியெல்லாம் புரிந்ததோ இல்லையோ ’பொறுக்கி’ யார் என்று தெளிவாகப்புரிந்துவிட்டது.

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், 
போவான் போவான், ஐயோ என்று போவான்

வாழ்க்கையை சூதுவாதில்லாமல் ஆவேசமாய் வாழ்ந்து அற்பாயுசில் போய்ச்சேர்ந்த பாரதி ’ஐயோ’ என்று எழுதியது என்ன மொழி? விளிம்பு நிலையா, வட்டார வழக்கா, வெகுஜன மொழியா, பொறுக்கி மொழியா?