27 February 2011

இதுதாண்டா அறம்!

Ramachandran Mahadevan & Ramachandra Sarma இருவரும் எவ்வளவு நல்லவிதமாக நாகரீகமாக எடுத்துச் சொல்லி முறையிட்டும் மூர்க்கமாகப் பொய் கிசுகிசுக்களை புனித புத்தர்கள் எப்படி அறிவுஜீவித்தனமாய் அலசுகிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட இருவரும் கர்நாடக இசை விமர்சகர்கள் - இருவரின் சுத்த பத்தமான (சீ தூ என்கிற அளவில் கூட கெட்ட வார்த்தைகள் இல்லாத) குரல்கள் எப்படி செவிடன் காதில் ஊதிய சங்காய்த் திரும்பத்திரும்ப புறக்கணிக்கப் படுகின்றன எனப்தையும் அவதானியுங்கள். Ramachandra Sarma ஜெயமோகனின் நெருங்கிய நண்பரும் கூட.

நாகேஷ் அரண்மனைக் காவலராக வரும் படம் ஒன்றில் ”நேத்து எம் பொண்டாட்டி...” என ஆரம்பிப்பார், உடனே சுற்றி நிற்கும் சக காவலர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அதைப் பார்த்து அவர், உக்காந்து பெசலாமா! ஏண்டா அடுத்தவன் பொண்டாட்டி பத்தின கதைனா அவ்ளவு சுவாரஸியமா” என்பார்.

அறம் எப்போது யாரிடம் எப்படி இருக்கிறது அது வெளிப்படுகையில் எவ்வளவு இயல்பாகவும் தீர்க்கமாகவும் மூர்க்கமாகவும் எந்த வீச்சில் வெளிப்படுகிறது என்பதற்கு இந்த பஸ் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

ஸ்ரீதர் நாராயணன் இந்த பஸ்ஸின் தொடக்கத்தில் இசை விமர்சகர்கள் இருவரின் ஆரோக்கியமான குரல்களைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மறுக்கிறார். ஆனால் இவரேதான் உரையாடலின் பிற்பகுதியில், ஜெயமோகன் கும்பலின் ஐபி அஜால்குஜாலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். அவருக்கு எந்த முன்முடிவும் இல்லை. ஆனால் இந்த மோசடி தெரிய வந்ததும் அவர் அப்படியேத் 180 பாகை திரும்பி சுட்டிக் காட்டும் வார்த்தைகள் இவை

அடுத்த முறை ஜெயமோகனுக்கு வாசகர் கடிதம் எழுதும்போது அவர் கதையைப் படித்து கண்ணீர் விட்டு அழுததை மட்டும் குறிப்பிடாதீர்கள். இந்த விக்கிபக்கங்களைப் பார்த்து கண் சிவந்து கோபித்து சாபமிட்டதையும் சேர்த்து குறிப்பிடுங்கள்*.Feb 23 (edited Feb 23) 

இதற்கு அடுத்த கமெண்ட்டியும் படித்து நீங்களே முடிவிற்கு வாருங்கள். அடுத்து மிக நாகரீகமான எனது கமெண்டையும் பாருங்கள்.

ஸ்ரீதர் நாராயணன், என்னைப் போன்ற ஜெமோ ஃபோபியா காழ்ப்பு வசவு மனம் கொண்டவர் அல்ல. அதற்கு இந்த பஸ்ஸின் ஆரம்பமே சாட்சி. ஆனால் ஒரு அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது எனத் தெரிய வந்த மறுகணமே அவர் அதை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு என் நன்றி.

ஸ்ரீதர் நாராயணன் எனக்கு நண்பர் கூட அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து சோனா கஞ்சின் சந்து என்கிற  பதிவில் என் மொழி ஆபாசமாக இருக்கிறது. என என்னிடம் வருத்தப்பட்டுக்கொண்டு என்னைத் தாண்டிச் சென்றவர். அவர் தளத்தில் கொஞ்சம் படித்து இருக்கிறேன். என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அதே போல என் காரியங்கள் அவரைக் கவராமல் இருப்பதிலும் ஆச்சரியமில்லை.அதைப் பற்றிப் பெரிய கவலையும் இல்லை.

ஆனால் தனக்கு ஒன்று தவறு என்று பட்டதும் அடுத்த கணம் அதற்கு முந்தைய கணத்தில் என்ன சொன்னோம் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஒரு நிலை எடுக்கிறாரே! அதுதான் அவர் மீது என்னைப் பெரு மதிப்பு கொள்ள வைத்தது. 

அவர் என்மீதான கோபத்தில் என்னை நிராகரித்தாலும் நான் அதை அவமானமாக நினைக்க மாட்டேன். ஏன் எனில் அவர் செய்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. சுய லாபத்திற்காய் வரலாற்றைத் திரிக்கும் கயவர்களை அடையாளம் காட்டிய வரலாற்று நிகழ்வு.

கெட்டவார்த்தை கெட்டவார்த்தை என ஜபித்தபடி அலேக்காக நழுவிச் செல்லும் நியாயஸ்த நாயகர்கள் தயவு செய்து இந்த பஸ்ஸை வரிக்கு வரி படியுங்கள் அப்புறமும் தவறு என் மேல்தான் எனில் எனது வார்த்தைகளிலேயே தேவடியாள் பையன், தாய் ஓளி என்று என்னைத் திட்டுங்கள் அல்லது என்னைப் புறக்கணியுங்கள். 

திட்டுக்கு எதிர் திட்டாய் பெருங்கூட்டமாய் நீங்கள் என்னைத் திட்டக்கூடும் என்றோ அல்லது புறக்கணிக்ககூடும் என்றோ நெல் முனை அளவும் என் நிலையில் இருந்து  நான் அகல மாட்டேன்.

ஸ்ரீதர் நாராயணனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த பஸ்ஸை வருங்கால ’அயோக்கியத்தன அகழ்வாராய்ச்சியாள’னுக்காக இங்கே மீள் பதிவு செய்கிறேன். 

தகவல்: இந்த பஸ்ஸில் இருந்த Arangasamy K.V அவர்கள் போட்ட கமெண்டான “இதில் என்ன சந்தேகம் அது மணி அய்யரேதான்.” நீக்கப் பட்டு விட்டது.

**************************

சுரேஷ் கண்ணன் - Google Reader – Public                                                     Feb 21
மரப்பசு வாசிக்கும் போது எனக்கு சுமார் 20 வயதிருக்கும். இருபது பக்கங்களை
தாண்டிவுடனே உடம்பு நெருப்பு பற்றிக் கொண்டாற் போல் அவஸ்தையாயிருக்கும்.
வயிற்றைப் பிசைகிறாற் போல். மூடி வைத்து விடுவேன். அப்படி வைத்து விட்டும்
போயிட முடியாது. கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் வாசிப்பேன். மீண்டும்
அவஸ்தை. பிறகு வாசிப்பு. இப்படியேதான் அதை வாசிச்சேன். அஞ்சாறு வருஷம்
கழிச்சுதான் அந்த அவஸ்தைக்கான சரியான காரணம் ஒரு மாதிரியா புரிஞ்சது. உலகத்தை
தொடர்ந்து சுத்த வைக்கற தீ, எரிபொருள். காகிதங்களைத் தாண்டி அதை எழுதினவரோட
அவரோட உணர்வுகளை எனக்கும் கொஞ்சம் ஊட்டி விட்டுட்டார்னு தோணிச்சு.

அவர் வெளிப்படுத்தினல எத்தனை சதவீதம் வெளியெ வந்ததோ தெரியல்ல. அதப்படிச்ச
எனக்கே அப்படின்னா... எழுதினவர் என்ன பாடு பட்டிருப்பார்னு இதைப்
படிச்சப்புறம்தான் நெருக்கமா புரியுது.

ரொம்ப சப்ஜெக்டிவ்வான விஷயம்லாம் இந்தச் சிறுகதைல அனாயசமா வெளியே வந்திருக்கு.

மயில்கழுத்து [சிறுகதை]-1 - jeyamohan.in

 1 person publicly reshared this - Yaro Oruvann
ஸ்ரீதர் நாராயணன் - சுரேஷ்! உங்க விவரணை பிரமாதம்.Feb 21
Suresh Babu - காலிச் சிப்பியா இருந்தாகூட இந்த விவரணைலே முத்தின் ஜாடை தெரியுதே..Feb 21
ramji yahoo - rom ramji yahoo <yahooramji@gmail.com>
to jeyamohan_ B <jeyamohan.writer@gmail.com>
date Mon, Feb 21, 2011 at 9:24 AM
subject mayilakaluthu- small corrections - Brahmin slangs
mailed-by gmail.com
hide details 9:24 AM (0 minutes ago)
அன்பு ஜெயமோகன்

மயில் கழுத்து சிறுகதையில் எனக்கு உடனடியாகத் தோன்றிய சில வட்டார (சாதிய) மொழிப் பிரயோக பிழைகள் சில:

காபி ஸ்ட்றாங்க இல்லைன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள் = வச்சுப்பெள் (பே நெடில்)

மனுசனோட தீமைக்கு= மனுஷாளோட தீமைக்கு

நம்மூர்ல என்னென பண்ணிருக்காங்க= என்னென்ன பண்ணிருக்கா
சாமிநாதன், எங்க இருக்காரு= எங்க இருக்கார்

உங்கள் வாசகன் என்ற முறையில் ஒரு சின்ன தகவல்- பிராமண மொழிப் பிரயோகம் நன்றாக வர ஒரு சின்ன vali - தினமும் தவறாமல் விஜய் டீ வி ஐர்தேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்தாலே போதும்

அன்புடன்

ராம்ஜி யாகூ
Feb 21 (edited Feb 21)
சென்ஷி senshe - ராம்ஜி - இந்த பஸ்ஸுக்கு தேவையில்லாத ஒரு சின்ன சந்தேகம்... நீங்க யாஹூவா இல்ல யாகூவா?Feb 21
சுரேஷ் கண்ணன் - ராம்ஜி, உங்களத் தாங்க முடியாம ஜெ இன்னொரு மொழியில எழுதறதுக்கு ஓடிப் போகவும் வாய்ப்பிருக்கு. ஏன் இப்படி அவரை ஓட ஓடத் துரத்தறீங்க? அதுவுமில்லாம, என்ன இருந்தாலும் மாமல்லன் ப்ரூப் பார்க்கற ரேஞ்ச் அளவிற்கான 'நுட்பமான' திறமை உங்களுக்கு இன்னும் வரலை. அதை அடைய வாழ்த்துகள். :)Feb 21
Ram Prasath - சென்ஷி: :))))))Feb 21
வடகரை வேலன் - சென்ஷி,
சூப்பர்.
Feb 21
சென்ஷி senshe - ராம் , வேலன் - கிளிஞ்சது. என்னை ராம்ஜி தப்பா நினைக்கப்போறாரு...

ராம்ஜி யாஹூங்கற அவர் பேரை,

//அன்புடன்

ராம்ஜி யாகூ//ன்னு மின்மடல்ல எழுதியிருந்ததால டவுட் கேட்டேன்..
Feb 21
Arangasamy K.V - ராம்ஜி , அடுத்தமுறை ப.சிங்காரத்தை மதுரை தினத்தந்தி ஆபிஸில் பார்க்கப்போகும்போது தகவல் சொன்னால் நானும் , சுரேஷ்கண்ணனும் சேர்ந்துகொள்கிறோம் , சென்ஷிகூட அடுத்தமாதம் வருவதாக சொல்லியிருக்கிறார் , அப்போது போகலாமா ?

பார்க்க : http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_29.html#comments
Feb 21
ramji yahoo - yaahoo thaan not yaakooFeb 21
வடகரை வேலன் - ஒரு வேளை 4 மிஸ்டேக் கண்டுபிடிச்ச சந்தோஷத்துல

யாஆஆஆஆஆஆகூஊஊஊஊஊஊஊஊஊஉன்னு போடுறதுக்குப் பதிலா ஷார்ட்டாப் போட்டிருப்பாரு.
Feb 21
குசும்பன் kusumbu - கலைஞர் உங்க எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்காரு....நீ ஏன்யா தப்பு செஞ்சேன்னா...அவன் செய்யலையா? இவன் செய்யலையன்னு கேள்வி கேட்டவன் செஞ்ச தப்பை பெருசு படுத்தி கேட்ட கேள்வியை மாத்திடுவாரு...Feb 21
வடகரை வேலன் - குசும்பா,

நீ என்னதான் முயன்றாலும், திரு ராம்ஜி மாதிரி காண்டெக்ஸ்ட ஒட்டிப் பேச முடியாது.
Feb 21 (edited Feb 21)
karthick pandian - //சிங்காரம் அவர்களை சந்திக்க நானும் இரண்டு முறை மதுரை தினத் தந்தி அலுவலகம் சென்றேன். நான் போன பொழுது எல்லாம் அவர் வெளியில் சென்று விட்டார்.அடுத்த முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்//

arangasamy.. avvvvvvvvv..
Feb 21
Suresh Babu - ஒட்டியா ஓட்டியா?Feb 21
சென்ஷி senshe - அரங்கண்ணே - நெசம்மாவே ராம்ஜி சார், ப. சிங்காரத்தை நமக்கு அறிமுகப்படுத்தி வைப்பாரா?Feb 21
Arangasamy K.V - ராம்ஜி யாஹூ (நான் சரியாத்தான் பேசறனா சென்ஷி?)

தினத்தந்தி ஆபீஸுல உங்களை ஏமாத்தியிருக்காங்கன்னு நினைக்கிறேன் , அவர் அங்கேயேதான் தங்கியிருக்கார் , 6வது மாடியில் 4 ம் நெம்பர் ரூம் , பாத்ரூம் பக்கத்துல லெப்ட்ல்ல திரும்பனும் , முன்னாடியே ரெட் கலர்ல போர்ட் வச்சிருக்கும் , ப.சிங்காரம் - எழுத்தாளர்னு .
Feb 21
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ராம்ஜி, விடுங்க, இவங்ககூடல்லாம் சேராதீங்க. நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன் ப சிங்காரத்துகிட்ட :)

அரங்சாமி சார், இப்ப அவர் ரூம் மாத்திட்டார். நீங்க அப்டேட் செஞ்சுக்கணும்.
Feb 21
Arangasamy K.V - சென்ஷி , நாம போறோம் , ஒரு நாள் போகாமயா போய்டுவோம் ?Feb 21
வடகரை வேலன் - //நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன் ப சிங்காரத்துகிட்ட :)//

அய்யோ சுந்தர்?
Feb 21
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஏன் அண்ணாச்சி, எல்லாரும் ஒரு நாள் போகத்தானே வேணும். அப்படிப் போகும்போது ராம்ஜி மாதிரி ஒரு இலக்கிய நண்பரோட போனா வசதிதானே!Feb 21
வடகரை வேலன் - எங்க தினத்தந்தி ஆபீசுக்கா? # சந்தேகம் நிவர்த்தல்Feb 21
சென்ஷி senshe - சுந்தர்ஜி - :))))Feb 21
ramji yahoo - அத்துடன் அவரிடம் = அத்துடன் அவர்ட்ட

கேட்டவா சிலர் இருக்காளே என்றார் , இருக்காங்க ஆனா அவர்களும் = இருக்கா ஆனா அவாளும்

கும்பகோனத்திலேயும், பாபனாசத்திலேயும் = கும்போனத்திலேயும்

எதாவது பொம்பளை உவமை சொல்லுவீங்கன்னு = சொல்வேள்ன்னு நினச்சேன்

‘பாலு இதிலே மூணாம் சரணத்திலே மெதுவா எறங்குவான் பாருங்க= பாருங்கோ
பிரம்மராட்சதன். என்ன சொல்றீங்க = என்ன சொல்றேள்

மேலே படிக்க அயர்ச்சியாக இருக்கிறது. கழுகாசல மூர்த்தி காக்க


நானும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கழுகுமலை, கோயில்பட்டி , பட்டி வீரன் பட்டி , கழுகாசல மூர்த்தி கோயில் பகுதிகளை கண் முன்னே கொண்டு வரப் பார்க்கிறேன். முடிய வில்லை. சுத்தி சுத்தி வடசேரி, மீனாட்சிபுரம் பிள்ளை பகுதிகளே கண் முன்னே வருகிறது.

பிராமண கதை பீல் (feel) மொத்தமாக மிஸ்ஸிங்.
Feb 21
bogan R - ராம்ஜி சார் நாங்கல்லாம் பழம் சாப்பிடும்போது பழத்தைச் சாப்பிடுவோம்.கொட்டையைத் தூக்கி எறிஞ்சுடுவோம்.நீங்க அப்படி இல்லை போலிருக்கே..Feb 21
ramji yahoo - நாஞ்சில் நாடனும் சரி, ஜெமோ வும் சரி நாஞ்சில் நாட்டு வட்டார மொழி, அங்குள்ள பிள்ளைமார், நாயர், மீனவர், இஸ்லாமிய சமூக மொழிக்களில் சிறப்பாக எழுதுவர். அதில் நெல் முனை அளவும் சந்தேகமில்லை.
ஆனால் கோயில்பட்டி வட்டாரமும் சரி, பிராமண மொழியும் சரி - முழு அளவில் இல்லை.

கி ரா வின் மின்னல் கதை பாருங்கள்.
அவர் அந்தப் பேருந்து நிலையம் என்று சொன்ன உடனேயே நமக்கு இடைச்செவல் கோயில்பட்டி டவுன் பஸ் , பஸ் இடைசெவல் விலக்கு தாண்டி நாலாட்டின் புதூர் வருகிறது என்ற உணர்வு தானாக வந்து விடுகிறதுஅடுத்த பகுதிகளில் அந்த உணர்வு (feel) வரும் என்ற நம்பிக்கையுடன்
Feb 21
ramji yahoo - போகன்- ஜெமோ செய்து பார்க்கும் இந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
குறை கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நன் சொல்ல வில்லை. இந்தக் குறைகளை தவிர்க்க வேண்டும் , (நாளை அச்சில் புத்தகமாக வரும் பொழுது இந்தப் பிழைகளை நீக்கலாம்)
என்ற எண்ணத்தில் தான் இதை எழுதுவது.

அடுத்து ஜெமோ, காரைக்குடி செட்டியார் வட்டார மொழி, கொங்கு மண்டல கௌண்டர் மொழி யிலும் கதை எழுத வேண்டும் என்பதே என் ஆசை.
Feb 21
சென்ஷி senshe - //அடுத்து ஜெமோ, காரைக்குடி செட்டியார் வட்டார மொழி, கொங்கு மண்டல கௌண்டர் மொழி யிலும் கதை எழுத வேண்டும் என்பதே என் ஆசை.//

இன்னும்ம்ம்ம்ம்மா......! :))
Feb 21
வடகரை வேலன் - சென்ஷி,

அப்பத்தானே ராம்ஜி சார் அந்த வட்டாரவழக்குலயும் ராஜான்னு நிரூபிக்க, குறைகளைக் கண்டு சொல்வார்.

பாட்டெழுதிப் பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்............
Feb 21
ramji yahoo - வண்ண நிலவன் பிள்ளைமார்கள் அருகேயே இருந்து வாழ்ந்தவர்.
ஆனால் ரெயினீஸ் அய்யர் தெரு வில் , சி எஸ் அய் கிறித்துவ நாடார் மொழி நீக்கமற நிறைந்து இருக்கும். (not even a word/slang of Roman Catholic christians)
அதனால் தான் அதைப் படித்த வாசகர்/வாசகிக்கு ரெயினீஸ் அய்யர் தெருவை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

அந்த ஒரு அடிப்படை எதிர்பார்ப்பை ஜெயமோகன் எழுத்து மீதும் வைப்பது தவறா
Feb 21 (edited Feb 21)
வடகரை வேலன் - அவரை ஒரு புடம்போட்ட தங்கமாக மற்ற முயற்சிக்கும் உங்கள் உழைப்பிற்கு வணக்கம் ராம்ஜி சார்.Feb 21
ramji yahoo - வேலன் அண்ணாச்சி
உண்மையிலேயே ஜெமோ நாஞ்சில் வட்டாரம் தாண்டி பிற வட்டாரங்கள், பிற சாதீய தமிழ் எழுதுவது ஒரு நல்ல மாற்றம், வரவேற்கத் தக்க முயற்சி.

சிறு தவறுகள்/பிழைகள் இல்லது இருந்தால் படைப்புக்கள் இன்னும் சிறப்பாக irukkum என்ற ஆசையே.
Feb 21 (edited Feb 21)
bogan R - இந்தக் கதையில் வட்டார மொழி தாண்டி வேறு எதுவும் தெரியவில்லையா உங்களுக்கு என்றுதான் யோசித்தேன்.அந்த மொழி ஊடாக அவர் வேறு ஒரு உன்னதமான விஷயம் சொல்லவருகிறார் ...அது ஏன் உங்களுக்குப் போய்ச சேரவில்லை எனப் புரியவில்லைFeb 21
வடகரை வேலன் - ராம்ஜி,

உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதே.

ஆனால் உங்கள் பிழை என்னவென்றால், இதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன், உணர்வு சார்ர்ந்த ஒரு விஷ்யத்தை நீங்கள் அறிவு சார்ந்த விஷயமாக அணுகுவதுதான்.

அது உங்களைப் படைப்பிலிருந்து விலக்கி வைத்துவிடும்.
Feb 21
Arangasamy K.V - *&^%$# &^%&%$#%#$*&(*& (*&(**)((^%$#$@$@#@&( ((&(&*^*%^%$$%#%#$%

&&(*&*^*^%&%&^&*^*&^^((*))*(*)(

%$%#$%#^&**((*))(I_)_)

முடியலங்க .
Feb 21
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ராம்ஜி, வண்ண நிலவன் கொஞ்ச நாட்கள் கிறித்துவராக இருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம்.Feb 21
சென்ஷி senshe - ஆனாலும் ராம்ஜி, கும்மோணம்ங்கற்தை, கும்போணமா இப்படித்தான் எழுதனும்னு சொல்லுபோது கும்மோணத்துக்காரனா இருக்கற எனக்கு கொஞ்சம் ஓவராவே புல்லரிக்குது.Feb 21 (edited Feb 21)
சென்ஷி senshe - ராம்ஜி - ஒரு சிறு விண்ணப்பம். எழுத்தாளர் கோணங்கியும் தமிழ்லதான் எழுதறாருன்னு ஒரு பேச்சு இருக்குது. கோணங்கித்தமிழையும் வாசிச்சு நீங்க திருத்த ஏதும் வழி சொல்லமுடியுமா?Feb 21
வடகரை வேலன் - சென்ஷி,

:-)))))))))))
Feb 21
Siddharth Venkatesan - சென்ஷி... இனிக்க இனிக்க பேசி புதைகுழில தள்றீங்களே.. நியாயமா? கோணங்கி எழுதறது அரூப வட்டாரத்துல பேசப்படற வழக்கு... தர்கத்த இத்தனை கெட்டியா பிடிச்சிட்டிருக்கற ராம்ஜிக்கு அதுல பரிச்சயம் இருக்குமான்னு தெரியல ;)Feb 21
கேவிஆர் . - ராம்ஜிக்குப் பரிச்சயம் இல்லாத எழுத்து எத்தியோஃபியாவில் கூட இல்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன் சித்து ;-)Feb 21
வடகரை வேலன் - ராம்ஜிக்கு ஹீப்ரு மொழியில்கூட நல்ல புலமை உள்ளது.

ஆனால் பாவம் ஜெயமோகனுக்குத்தான் தெரியாது அம்மொழி.
Feb 21
Siddharth Venkatesan - ஏங்க இப்படி ஓட்றீங்க? jokes apart. அவர் இப்ப தனக்கு சிறுகதை வாசிக்கும் மனநிலை இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டார். கட்டுரை மாதிரியான மண்ல ரெண்டு காலையும் அழுந்தி நிக்கற படைப்புகள படிக்கற அதே விதமா தான் சிறுகதையையும் படிக்கறார்... தகவல்களின் தொகையா. ஆனா அந்த வாசிப்புல அவர் முன்வெக்கற குறைகள பொதுவுல போடறதும் சரி தான். அத தாண்டி போய் நாம வாசிக்கலாமே... இல்ல, இது சும்மா ஜாலியான விளையாட்டுன்னா ஓக்கே... :)Feb 21
ramji yahoo - போகன்

இந்தக் கதையில் மொழி, வட்டாரம் தாண்டி வேறு விஷயங்கள் சொல்லி உள்ளார் (ரஷ்யா, பெண் நுனி சிரிப்பு...)
ஜே மோ வே வரிக்கு வரி அய்யர், வோய் என்று முக்கியத்துவம் தருகிறார். அந்த வட்டார சமூக மொழி இயல்பாக இல்லாத பொழுது, அதை தாண்டிய விஷயங்கள் ஈர்ப்பதில்லை.

இதே விஷயங்களை ஜெமோ வடசேரி பிள்ளைமாரும், குளச்சல் மீனவரும், திற்பரப்பு போத்தியும் இருப்பதாகக் கூறி இருந்தால், கதை தாண்டிய விஷயங்கள் எளிதில் எம்மை ஈர்த்து இருக்கும்.

காரைக்குடி செட்டியார், உடுமலை கௌண்டர் மொழிகளில் கதை எழுதினால், மற்ற பல வாசகர்கள் கருத்து கூறுவார்கள்.
Feb 21
சுரேஷ் கண்ணன் - (தேவையில்லையெனினும்) இந்தப் புனைவில் சித்தரிக்கப்பட்டிருக்கும் உண்மையான நபர்கள் அனைவரையும் யூகிக்க முடிகிறதா?Feb 21 (edited Feb 21)
ramji yahoo - சுந்தர் ஜி

ஆனால் வண்ண நிலவன் ரெய்னீஸ் அய்யர் தெருவில், சி எஸ் அய்ய கிறித்துவ நாடார் மொழி அவ்வளவு தத்ரூபமாக எழுதி இருப்பார்.

குமரி அனந்தன், வலம்புரி ஜான் போன்றவர்களால் கூட இந்த அளவு இயல்பாக எழுதி இருக்க முடியுமா என்று தெரிய வில்லை
Feb 21
ramji yahoo - வேலன்

காலையில் வாசித்த கி ரா வின் மின்னல், செகாவின் குதிரை வண்டி காரர் கதை எல்லாம் அந்த இயல்பு மொழி நடையில் உள்ளது
எனவே அவற்றை உணர்வு அறிவு என்ன எல்லா வழிகளிலும் தொடர்பு கொள்ள முடிகிறது
Feb 21
வடகரை வேலன் - //உடுமலை கௌண்டர் //

அப்படியா? நான் உடுமலைக்கு வாக்கப்பட்ட ஆளுதான். இப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே?

நாயக்கர்களும் நாயுடுக்களும்தானே அதிகம்?. தெலுங்கு மொழிதான் அதிகம் பேரால் பேசப்படுகிறது.

நல்ல கூர்ந்த அப்சர்வேசன் ராம்ஜி.
Feb 21
bogan R - ராம்ஜி சார் மரத்தில் மறைந்தது மாமத யானை என்ற மொழிதான் நினைவுக்கு வருகிறது நீங்கள் எதைக் காண விரும்புகிறீர்களோ அதையே இங்கு காண்கிறீர்கள்Feb 21
ramji yahoo - Bogan I dont say Jeyamohan is Zero in brahmin slang in this short story. He is 80% ok , I am stressing for that remaining 20%, especially vaira jaar neklace..Feb 21 (edited Feb 21)
வடகரை வேலன் - ராம்ஜி,

என்ன முயன்றாலும் ஜெமோவால் கி.ரா போல எழுத முடியாது. கி ராவால் சு ரா போல எழுத முடியாது, சு ரா வால் எஸ்ராபோல எழுத முடியாது
Feb 21
bogan R - பாஸ் எல்லா கதையையும் ஒரே மொழியில் எழுதும் பாலகுமாரனைப் படித்து நாம் மாய்ந்து போகவில்லையாFeb 21
ramji yahoo - வேலன்,

நான் சொல்ல வந்தது அது அல்ல

சுஜாதா, தி ஜா, பாலகுமாரன் போன்றவர்கள் தஞ்சை திருச்சி சென்னை வட்டராம், பிராமண சமூகம் தாண்டி எழுதியது இல்லை

அதே போல வண்ண நிலவன், வண்ணதாசன், கலா ப்ரியா போன்றோர் நெல்லை, மதுரை வட்டாரம் தாண்டி எழுதியது அரிது

கி ரா கோயில்பட்டி, பிரபஞ்சன் பாண்டி வட்டாரம் , நாடன் நாஞ்சில் தாண்டியது இல்லை.
அந்த ஒப்பீட்டில் பார்க்கும் பொழுது ஜெயமோகனின் இந்த பரப்பு எழுத்து முயற்சி, எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது.
அவருக்கு இந்தப் புரிதலும் உள்ளது
Feb 21
வடகரை வேலன் - விளக்கத்திற்கு நன்றி ராம்ஜி.


ஆனால் உடுமலைக்கவுண்டர்?
Feb 21
ramji yahoo - வேலன்
ஓகே பொள்ளாச்சி, ஈரோடு மொடக்குறிச்சி எழுமாத்தூர் எல்லக்கடை, வெள்ளக் கோயில் காரமடை, அவினாசி
Feb 21
வடகரை வேலன் - ராம்ஜி எப்ப இருந்து பஸ் செர்வீஸ் ஓட்ட ஆரம்பிச்சீங்க?

உங்களுக்குப் பிடிச்ச கிரா கதை ஒண்ணுல வரும்,

கொக்கு 2, குருவி 3, வானரம் 5, கழுகு 7 என்று . படித்திருக்கிறீர்களா?
Feb 21
bogan R - தகவல் பிழைகளைச் சுட்டுவதில் ஒரு தவறுமில்லை ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு ஒட்டு மொத்த படைப்பையும் நிராகரிக்கும்போதுதான் உதைக்கிறதுFeb 21
ramji yahoo - போகன்
படைப்பை நிராகரிக்க வில்லை.
இந்த மொழி பிரயோகத் தவறுகள் படைப்பின் முழு உணர்வை அளிப்பதில் தடையாக இருக்கின்றன.
ஜெமோ தமிழில் சிறந்த எழுத்தாளர். நாளை பல புதிய எழுத்தாளர்கள் இந்த தவறையும் சேர்த்து கையாளக் கூடாது.

He has did lot of efforts for this story. as I said he is 80% ok. I doubt whether Sujatha or Thi ja was able to write a story on Nagerkoil pillaimar slang or Naanguneri naadar slang. that way Jemo is far better than them
Feb 21
வடகரை வேலன் - அப்பா,

வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.
Feb 21
ramji yahoo - Aarnaga samy- I am not master in Karaikudi chettiyar slang or Erode kounder slang. Other bloggers readers will point out on those slangs, if not I have friends in yahoo chat who could also help us.Feb 21
ramji yahoo - போவோம், ஆள் இருக்கிறார் தானே or மறைந்து விட்டாராFeb 21
bogan R - சு கா ஒரு கேள்வி கேட்டார் யாரும் பதில் சொல்லவில்லை அந்த இசைக் கலைஞர் யார்Feb 21
சென்ஷி senshe - ராம்ஜி - மறைந்துவிட்டால் மாத்திரம் விட்டுடறதா.. எங்க ஒளிஞ்சு இருக்கார்ன்னு தேடிப்பிடிச்சு பார்த்திடலாம். டோண்ட் ஒர்ரி..Feb 21
ramji yahoo - no arangasamy i went long backFeb 21
வடகரை வேலன் - அரங்கு,

விடுங்க.
Feb 21
ramji yahoo - around 10 yrs back, read after es ra's writing abt himFeb 21
சுரேஷ் கண்ணன் - (தேவையில்லையெனினும்) இந்தப் புனைவில் சித்தரிக்கப்பட்டிருக்கும் உண்மையான நபர்கள் அனைவரையும் யூகிக்க முடிகிறதா? #மீண்டும்.Feb 21
Siddharth Venkatesan - சுரேஷ்... ராமன், பாலசுப்ரமணியத்த பாலுன்னு கூப்பிடும் போது அது எத்தனை பொருத்தமான பேர்ன்னு தோணிச்சு. :)Feb 21
சுரேஷ் கண்ணன் - சித்தார்த்: அது சரி, தி.ஜா. சு.ரா.

மத்தவங்க?
Feb 21
Siddharth Venkatesan - சந்திரலேகாவோட பழைய நடன காணொளி கிடைக்குமா? யூட்யூப்ல எத்தனை தேடினாலும் திரும்ப திரும்ப வெள்ளை முடியோட இருக்கற சந்திரலேகா தான் வர்ராங்க.Feb 21
சுரேஷ் கண்ணன் - //மதுரை மணி ஐயர் , // ஓ... இதத்தான் கேட்டேன்.Feb 21
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஒன்னு எது யார்னு வெறும் கிசுகிசு கதைன்னு சொல்லலாம். இல்லாட்டி, புதிர்ப்பாதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பெயர்களையும் அது சார்ந்த ஆளுமைகளையும் மீட்டெடுக்கும் முயற்சின்னு சொல்லலாம்.

வேறென்ன செய்யலாம்?
Feb 21
Siddharth Venkatesan - சுந்தர்... இந்த கதைய பத்தின விவாதம் வெறும் கிசுகிசுவா நிக்கல. இதையொட்டி மரப்பசு பத்தி நிறையவே பேசப்படும்னு நினைக்கறேன்.Feb 21
Siddharth Venkatesan - நன்றி அரங்கன்.Feb 21
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - சித்து, தப்பா சொல்லலை. ப்ளீஸ் கண்டின்யூ!Feb 21
சுரேஷ் கண்ணன் - சாமிநாதன்?Feb 21
Arangasamy K.V - அது யாரோ ஒரு வாசகர்ன்னு நினைக்கிறேன்Feb 21
சுரேஷ் கண்ணன் - தஞ்சை பிரகாஷ்?Feb 21
Ramachandran Mahadevan - மதுரை மணி ஐயராக இருக்க வாய்ப்பேயில்லை. மகாராஜபுரம் விஸ்வநாத ஐயராக இருக்கலாமா என்று தோன்றினாலும், நிறைய இடங்களில் ஸ்ருதி விலகல். மரப்பசு கோபாலியின் கூறுகள் கொண்டு ஜெமோ-வின் புனைவே இந்தப் பாடகர் என்பது என் யூகம்.Feb 21
ஸ்ரீதர் நாராயணன் - // கோபாலியின் கூறுகள் // கோபாலியே மதுரை மணி ஐயரின் உருவகமாக இருக்கலாமே.

மணி ஐயரின் முழுப்பெயர் - சுப்பிரமணிய ஐயர். அதையே கதையில் மதுரை சுப்பு ஐயராக குறிப்பிடுகிறா ஜெமோ.

விக்கிபீடியாவில் மதுரை மணி ஐயர் பற்றிய பக்கம் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

விக்கி குறிப்பில் - மதுரை மணி ஐயர் ”ஆங்கிலக் கல்வியில் தீவிர ஈடுபாடு கொண்டவர், சுந்தர ராமசாமி, தி ஜா வோடு நெருக்கமானவர்... பெரு நோய் காரணமாக திருமணம் முடிக்காதவர்...” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது.

இனி யாராவது ஜெமோ வரலாற்றை திரிக்கிறார் என்றால் விக்கிபீடியாவில் Dispute செய்ய வேண்டியதுதான் போல. சொல்ல மாட்டாங்களா என்ன? It is getting interesting now :)
Feb 21 (edited Feb 21)
Ramachandran Mahadevan - விக்கிபீடியா செய்திகளின் நம்பகத்தன்மைதான் கோல்டு ஸ்டாண்டர்டெனில் ஈஸ்வரோ ரக்ஷது.

மணி ஐயரின் குரு ராஜம் பாகவதரை, ராகம் பாகவதர் என்று குறிப்பதில் தொடங்கி, விக்கி கட்டுரையில் சொன்னதை விட சொல்லாமல் விட்டவை ஏராளம்.

மதுரை மணி நெருங்கிப் பழகிய எழுத்தாளர் என்றால், அவர் சிட்டிதான். அவர் பெயரே விக்கியில் இல்லை. மணி ஐயரை விட மிகவும் இளையவரான சு.ரா-வுடன் மணி ஐயர் நெருங்கிப் பழகி இருப்பாரா என்பது சந்தேகமே.

மணி ஐயர் உயர்தர மதுவில் ஈடுபாடுள்ளவர் என்று எதை வைத்து, யார் எழுதினார்?

மணி ஐயரின் தெய்வம் மகாத்மா காந்தி. இளம் வயதில் இருந்து காதி உடுத்தியவர். காங்கிரசில் அதீத ஈடுபாடு கொண்டவர். நிதிக்காக நிறைய கச்சேரிகள் செய்தவர். "Unlike many of his contemporaries he was a man of most abstemious habits.", என்று வி.ஸ்ரீராம் கர்நாடிக் சம்மர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

விக்கி சரியா, ஸ்ரீராம் சரியா?

>>>>>>விழாக்கச்சேரிகளில் அவருக்கு சம்பிரதாயம் என ஏதும் கிடையாது. எந்த வரிசையிலும் எப்படியும் பாடுவார்.<<<<<

இதை விட நேர்மாறாய் மணி ஐயரின் இசையைப் பற்றி எழுத முடியாது.

இன்னும் நிறைய உண்டு. அக்குவேறு ஆணி வேறாக்க அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

வேண்டுமானால் பெயரை மட்டும் மதுரை மணி ஐயரிடமிருந்து ஜெ.மோ எடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். மற்ற படி, அந்தக் கதையில் வரும் சங்கீத வித்வானின் சம்பாஷணைகள், மற்றும் அதில் வரும் சங்கீதத்துக்கும் மதுரை மணி ஐயருக்கும் சம்பந்தமே இல்லை.
Feb 21
Ramachandra Sarma - Request you to stop talking about who the character is. Try to see what the story is about. I think you guys are missing the whole point. You need to clearly delineate between History & Fiction. Please refrain from discussing what is "really not the point driven".Feb 21
ஸ்ரீதர் நாராயணன் - @ராமசந்திர ஷர்மா // Try to see what the story is // ’மரப்பசு’வின் பின்னணி இல்லாது இந்தக் கதையை புரிந்து கொள்வது முழுமையில்லாத அனுபவமாக இருக்கும் என்பது என் புரிதல். நாம் படித்த நாவலை விட ஓரிரு படிகள் முன் சென்று அது உருவான விதத்தை புரிந்து கொள்வது இன்னோர் அனுபவம். ‘இதைச் செய்யாதே... அதைச் செய்யாதே’ என்றெல்லாம் விதிகள் வைத்துக் கொண்டா விவாதம் செய்ய முடியும்? ஆபாசம் இல்லாதவரை எந்த வித கோணங்களும் விவாதிக்க தகுந்தவைதானே. :)Feb 22
Ramachandra Sarma - எழுதப்பட்டது ஒரு புனைவு. இதில் பல தருணங்கள் கற்பனையானவை என்று பலமுறை சொன்னபிறகும் அது யார் என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தால் என்ன சொல்ல? இந்த புனைவை அனுகுவதற்கு மரப்பசு தேவையில்லாதது. யாராக இருந்தால் என்ன? என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று நாம் பார்க்கலாமே? ஏனென்றால் நீங்கள் சொல்வதைப்பார்த்தால், மரப்பசு இல்லாவிட்டால் இதில் ஒரு மிக முக்கியமான கோணம் கிடைக்காமல் போய்விடும் என்பதுபோல இருக்கிறது. இந்த அனுகுமுறை அதிகமும் செய்தித்தாள் படிப்பதனால் வருகிறது குறிப்பாக ஆ.வி.ஜு.வி போன்றவை என்றே நினைக்கிறேன். இந்தக்கதையை விவாதிக்க மரப்பசு தேவையில்லை என்பதே என் அபிப்ராயம். இது யார் என்று விவாதிப்பது, நமக்கு ஆபாசமில்லாமல் போகலாம். ஆனால் அது நிச்சயம் தவிர்க்க முடிந்தால் தவிர்கலாம் என்பது என் நிலைப்பாடு.Feb 22
சுரேஷ் கண்ணன் - ராமசந்திர ஷர்மா: நீங்கள் சொல்வது சரிதான். 'சிறுகதை' என்ற லேபிளில் வந்திருப்பதால் இதை புனைவு என்கிற ரீதியில்தான் அணுக வேண்டும். (அதனால்தான் 'தேவையில்லையெனினும்' என்கிற குறிப்புடன் இதில் வரும் உண்மையான நபர்களைப் பற்றி யூகிக்க முயன்றிருந்தேன்.) ஆனால் சமயங்களில் அதையும் தாண்டியும் சில விவரங்களைப் பெறுவது படைப்பை இன்னும் நெருக்கமாக அவதானிக்க உதவும். படைப்பிற்கும் படைப்பாளிக்கும் தொடர்பிலலை என்கிற கருத்தை எல்லாம் நானும் நீண்ட ஆண்டுகள் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு படைப்பாளியின் அகம் வெளிப்படாமல் ஒரு படைப்பு சாத்தியப்படாது.

மேலும் இந்தச் சிறுகதை இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான படைப்பாளிகள் தொடர்பான நிகழ்வை மையப்படுத்தி அமைந்திருக்கிறது . புனைவிலேயே மற்ற எழுத்தாளர்களின் உண்மையான பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் புனைவு மொழியில் எழுதப்பட்ட எழுத்தாளர் யார் என்கிற ஆர்வம் வாசகனுக்கு ஏற்படுவது இயல்பே.

மேலும் மரப்பசு என்கிற புதினமே சந்திரலேகா என்கிற நடன மங்கையை மையப்படுத்தி எழுதப்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம். இந்தச் சிறுகதையிலும் அந்த 'அம்மிணி'வெளிப்படுவதால் இந்தச் சிறுகதையின் கூடவே மரப்பசுவைப் பற்றிய உரையாடலும் தவிர்க்க முடியாதது. அதே சமயத்தில் அது தேவையில்லை என்கிற உங்கள் அபிப்ராயத்தையும் நான் மதிக்கிறேன்.
Feb 22 (edited Feb 22)
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - சு.க, என்ன எழுதியிருக்கீங்கன்னு இன்னொருக்கா படிச்சுப் பாருங்க. எனக்கு ஒன்னும் விளங்கலை :)Feb 22
சுரேஷ் கண்ணன் - சுந்தர்: நான் வளர்கிறேனே மம்மி. :-))Feb 22
ஸ்ரீதர் நாராயணன் - // இந்தக்கதையை விவாதிக்க மரப்பசு தேவையில்லை என்பதே என் அபிப்ராயம் // @ராமசந்திர ஷர்மா - ஒத்துக் கொள்கிறேன். அது உங்கள் பார்வை என்ற அளவில்.

இதேக் கதையை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு ஆசிரியர் எப்படி அந்த பாத்திரங்களின் நிஜ உரு பற்றி குறிப்புகள் கொண்டு செல்கிறார் என்பதை என்னால் நீஈஈஈளமாகவே எழுத முடியும். உதாரணமாக ஒரு பகுதியில் ராமன் ‘அவளை நான் அம்மிணி என்றுதான் அழைப்பது வழக்கம்’ என்றே சொல்கிறார். ராமனின் டில்லி பின்புலம், பாலசுப்ரமணியனின் நாகர்கோவில் பின்புலம், மதுரை சுப்பு ஐயர் என்று ஏன் பாத்திரங்கள் படைக்கப்பட வேண்டும்? ஏன் அதே ராமன் மும்பையிலிருந்து வந்திருக்கக் கூடாது... அல்லது பாலு சேலத்தில் இருக்கக் கூடாது? ஏன் ‘அம்மிணி’ என்ற பெயர் அங்கே வலிந்து சொல்லப்பட வேண்டும்? ஏன் திருச்சி ரங்கன் அய்யங்கார் என்ற பாடகர் இடம்பெறவில்லை?

இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இந்தக் கதையை ‘இப்படித்தான் படிக்க வேண்டும்’ என்று நீங்கள் சொல்வது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் லகான் போல. நான் சுதந்திரமாகவே படைப்புகளை அணுக விரும்புகிறேன். எழுத்தாளனின் எல்லா நோக்கங்களையும் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை.

உங்கள் பதற்றம் புரிகிறது. பெருமதிப்புக்குரிய ஆளுமைகளை இந்தவகையில் விவாதிப்பது உங்களுக்கு கவலை தருகிறது. மதுரை மணி ஐயரின் சுருட்டி ஆலாபனையைப் பற்றி சிலாகித்து பேசாமல் அவருக்கு பெருவியாதி இருந்ததைப் பற்றிப் பேசுகிறார்களே என்ற கவலையாகவும் இருக்கலாம். மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதை அவை எல்லாவற்றையும் சுட்டிக் காட்டிக் கொண்டேதான் செல்கிறது. அப்படிப் பார்த்தால் நீங்கள் நிராகரிக்க வேண்டியது இந்த மொத்தக் கதையையும்தான். இந்த விவாதத்தை அல்ல. மற்றபடி யாருடைய கீர்த்தியையும் குலைக்க நான் விரும்பியதில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)
Feb 22 (edited Feb 22)
Ramachandra Sarma - எனக்கு இதில் பதற்றம் எல்லாம் இல்லை சார். இதில் பேசப்படுவதை விட மிக அதிகமாகவே இசைக் கலைஞர் வாழ்க்கைகளை பிரித்து மேய்ந்திருக்கிறோம். இது எல்லாம் சங்கடமே இல்லை. இங்கே குறிப்பிட விரும்புவது, புனைவை புனைவாக அணுகுவதும். அதன் பேசுபொருளை விவாதிப்பதுமே ஆரோக்யமனதாக இருக்கும். இப்போது நடக்கும் உரையாடல், கிசிகிசுக்களில் யார் அது என்று தெரியாமல் மண்டையை பிய்த்துக்கொள்வதுபோல இருக்கிறது. இந்த கதை கிசுகிசு அல்ல. புனைவு. அதில் இருப்பது மணி ஐயர் இல்லை. ஒரு கலைஞனின் பிம்பம் அல்ல. பல கூட்டு மனிதர்களின் சாரம். இந்த கதையை பற்றி இங்கு வேறெந்த விதத்திலும் ஒரு விவாதம் கூட வரவில்லையே? .‘’உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சும்..சனகி என்னும் பெருநஞ்சு ...கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்’’ என்பது போலவோ , ”தாயே சுடரில்லாத ஒரு நெருப்பில் நான் எரிந்தேன் தாயே இரத்தமற்ற ஒரு காயத்தால் நான் துன்புற்றேன்” என்பது போலவோ ஒரு கருத்து வந்திருந்தாலும் பேசாமல் இருக்கலாம். இந்தக்கதையில் நான் விரும்பும் இளம் நண்பர்களுக்கு நான் என்ன சொல்வேனோ அதை ராமன் சொல்கிறார் என்று ஜெ சொன்னார். ராமனின் கருத்துக்களை அலசி இருந்தாலும் பரவாயில்லை. "ராமன் மார்பில் இரு கரங்களையும் கூப்பி கண்களிலிருந்து கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது. " இதைப்பற்றி பேசி இருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு மணி ஐயர் .. பெரு வியாதி என்று பேச இலக்கிய வாசகர்களாக நாம் --------------. அது யார் என்று தெரிந்துகொள்ள நமக்கு ஆர்வம் இருக்கும் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது இதற்க்கு முக்கியம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர் சில குறியீடுகளை கொடுப்பது தி.ஜா போன்ற ஒரு ஆள், சு.ரா. போன்ற ஒருவர் என்ற கோணத்திலேயே நான் எடுத்துக்கொள்வேன். அதுவும் வெளிப்படையாக தெரிந்தால் மட்டுமே.
ஒரு குணச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள. அதற்க்கு மேல் அதன் அவசியம் என்பது இல்லை.
Feb 22 (edited Feb 22)
ஸ்ரீதர் நாராயணன் - உங்கள் பார்வையில் தவறில்லை ராமசந்திர ஷர்மா.

நான் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புவதெல்லாம்... இந்த சிறுகதைத் தொடரில் ஒரு உத்தியாக ஜெயமோகன் தனக்குத் தெரிந்த சம்பவங்கள், மற்றும் ஆளுமைகள் மேல் கட்டமைக்கிறார். அதைத் தெளிவாகவே கதையில் சுட்டிக் காட்டிவிடுகிறார். நீங்கள் ‘இவர் இல்லை, அவர் இல்லை... அவர் சாயல்’ என்றெல்லாம் சொல்லவே வேண்டாம். ஜெமோவின் பாத்திர வார்ப்புகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பது உங்கள் வசதி.

இரண்டாவதாக கதையின் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் சம்பவத்திற்கு ஓர் உச்சம் ஏற்படுத்த அவர் கற்பனையை சேர்க்கிறார். நீங்கள் ‘அதை மட்டும் பார்க்க வேண்டும்’ என்கிறீர்கள். நான் அதுவும் முக்கியம்தான் என்கிறேன். அதன் ஆதாரமான சம்பவங்களும் முக்கியம்தான் என்கிறேன்.

// அதை விட்டு விட்டு மணி ஐயர் .. பெரு வியாதி என்று பேச இலக்கிய வாசகர்களாக நாம் ------------. // அதில் தவறில்லை என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். :) இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் சார்!
Feb 23
Ramachandra Sarma - @ஸ்ரீதர் நாராயணன் - மணி ஐயர் என்று யாரோ சொன்னதை வைத்து அவரைப்பற்றி விக்கியில் படித்துவிட்டு விவாதிக்க வந்திருக்கிறீர்கள். இதற்க்கு முன்னர் மணி ஐயர் குறித்து படித்திருக்கிறீர்களா? நிச்சயம் அவரது சங்கீதமோ அல்லது வாழ்கை குறித்தோ உங்களுக்கு பரிச்சயம் இல்லை என்று நினைக்கிறேன். எதற்கு அவரது பெருவ்யாதி குறித்த குறிப்புகள் இந்த கதைக்கு சம்பந்தமில்லாமல் இங்கே ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறது? விக்கியில் அப்படித்தான் போட்டிருந்தார்களா? (மணி ஐயர் வலது காதில் ஒரு வடு இருந்ததாம் அது அம்மிணி கடித்ததாக இருக்குமோ?- இந்த கதையை நீங்கள் புரிந்துகொள்ள இதுவும் மிக உதவியாக இருக்கும்) சுருட்டி பற்றி நீங்கள் விவாதிக்கவில்லை என்று நான் கவலைப்படவில்லை. உங்களுக்கு புரியாத விஷயங்களை பற்றி நீங்களும் கவலைப்படவேண்டாம். இந்த ஜன்மத்தில் அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே தெரிந்த விஷயத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுவோம்Feb 23
ஸ்ரீதர் நாராயணன் - //எதற்கு அவரது பெருவ்யாதி குறித்த குறிப்புகள் இந்த கதைக்கு சம்பந்தமில்லாமல் இங்கே ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறது? விக்கியில் அப்படித்தான் போட்டிருந்தார்களா?// விக்கியிலும் இருந்தது. கதையிலும் இருந்தது. நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

// இந்த ஜன்மத்தில் அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது // நல்லது ராமசந்திர ஷர்மா. அப்படியே இருக்கட்டும்.
Feb 23
ஸ்ரீதர் நாராயணன் - மதுரை மணி ஐயர் பற்றி விக்கிபீடியாவின் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருந்த தகவல் பற்றி கோபமாக சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். அதன் தொகுக்கப்பட்ட வரலாற்று பக்கத்தை எடுத்து பார்த்தால் யார் அந்த சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிடப் போகிறது.

2011 பிப்ரவரி 2ம் தேதி சர்ச்சைக்குரிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன் IP முகவரியும் அதிலேயே இருக்கிறது. எல்லாம் BSNL இணைப்புதான். பிப்ரவரி 21ம் தேதி மேலும் சில சேர்க்கைகள்.

அதாவது இந்தக் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் தகவல்களை இதே காலகட்டத்தில் விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிசுகிசுக்களை இப்படியும் நிறுவலாமோ?

ஐயா... மேதாவிகளே... நீங்கள் சண்டை போடவேண்டிய ஆளே வேற. தேவையில்லாம என் மேல சாபத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. :)
Feb 23
ஸ்ரீதர் நாராயணன் - ஜெமோவின் இந்தக் கதைத் தொடர் முழுவதும் புனைவே என்று கோபமாக குமுறுகிறார்கள். அப்புறம் எதற்கு விக்கிபீடியா தளங்களில் சென்று தகவல்கள் சேர்க்கிறார்கள்?

ஒரே IP முகவரியிலிருந்து பிப் 2ம் தேதி சேர்க்கப்பட்ட தகவல்கள் (கீழே சுட்டி இருக்கிறது)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/59.96.27.157

(புதிய பக்கம்) கெத்தேல் சாகிப் ‎
தொடர்ந்து அதே நாளில் மூன்று திருத்தங்கள்.
(புதிய பக்கம்) சந்திரலேகா (நடனக்கலைஞர்)

இதிலும் வெகு குறிப்பாக - ” மணி அய்யர், ஜி.என்.பி போன்ற இசை மேதைகளுடனும் தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களுடனும் நெருக்கமான உறவுள்ளவர். தி. ஜானகிராமனின் மரப்பசு நாவலின் அம்மணி என்ற நடனக்கலைஞர் இவரது சாயல் உள்ள கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது”

(திருத்தம்) மதுரை மணி ஐயர் ‎ ‎

இதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் “மட்டும்” சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகச் சொன்னால் சாபம் விழும் என்பதால் தவிர்க்கிறேன்.

இவை வெறும் புனைவுகள் என்றால் ஏன் கனகாரியமாக கதைகள் வெளியாகும் முன்னரே ஒரே நாளில் விக்கி பக்கங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன?

மீண்டும் என் நிலை - எனக்கு இந்தக் கதைகள் பெரும்பாலும் பிடித்திருக்கின்றன. அதற்காக ’உனக்கு என்னய்யா தெரியும்... பேச வந்திட்டே பெருசா’ என்று சண்டைக்கு இழுப்பவர்களிடம்... இந்த தகவல்கள் உருவாக்கி தருபவர்களோடு சண்டை போடுங்கள். உங்கள் புண்ணியத்தில் நாங்களும் தெளிவு பெறுகிறோம்.

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
Feb 23
ஸ்ரீதர் நாராயணன் - இந்த இழையில் எனது இறுதி கமெண்ட் இதுவாகவே இருக்கட்டும்.

ஜெயமோகன் தளத்தில் கேஜே சங்கரன் பிள்ளையைப் பற்றி தான் ஒரு விக்கிபீடியா பக்கம் எழுதியதைப் பற்றி தெரிவிக்கிறார். http://www.jeyamohan.in/?p=12657

அந்த விக்கிபீடியா பக்கம் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/59.92.117.97

மேலே மதுரை மணி ஐயர், சந்திரலேகா பற்றிய விக்கிபீடியா பக்கங்களும் இதே IPயிலிருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆக நீங்கள் போற்றிப் புகழும் புனித பிம்பங்களைப் பற்றிய கிசுகிசு தகவல்களை நான் கண்டறிந்தது ஜெயமோகனின் விக்கிபீடியா ஆக்கங்கள் மூலமாகத்தான். அதிலும் முக்கியமாக ‘மணி ஐயருக்கு உயர்ரக மதுவில் நாட்டம் உண்டு’ என்று எழுதியிருப்பதும் அவரேதான். தற்பொழுது அது நீக்கப்பட்டிருக்கிறது. நான் என்ன செய்வது... மதுரை மணி ஐயர் பற்றி எழுத ஜெயமோகனுக்கே அவ்வளவுதானே விவரங்கள் இருக்கிறது. அப்ப அவருக்கும் இந்த ஜென்மத்துக்கும் மதுரை மணி ஐயர் பற்றிப் பேச வாய்ப்பு கிடையாதோ....

அடுத்த முறை ஜெயமோகனுக்கு வாசகர் கடிதம் எழுதும்போது அவர் கதையைப் படித்து கண்ணீர் விட்டு அழுததை மட்டும் குறிப்பிடாதீர்கள். இந்த விக்கிபக்கங்களைப் பார்த்து கண் சிவந்து கோபித்து சாபமிட்டதையும் சேர்த்து குறிப்பிடுங்கள்.
Feb 23 (edited Feb 23)
சுரேஷ் கண்ணன் - //இந்த ஜன்மத்தில் அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. // இத்தனை கடுமையான வார்த்தைகளை இங்கு பயன்படுத்த வேண்டாம்.

ஸ்ரீதர் நாராயணன்: கூல். தமக்குப் பிடித்த பிரபல ஆளுமைகளை எல்லாக் கசடுகளும் வடிகட்டப்பட்ட எவ்வித அப்பழுகக்ற்ற புனிதப்பசுக்களாக்கவே பெரும்பாலும் பார்க்க விரும்புகிறோம். அந்த ஆளுமைகளிலுள்ள சிறு கீறல்களையும் பிசுறுகளையும் தாங்க முடிவதில்லை. ஆனால் அந்த ஆளுமைகளின் சமகாலத்தில் இவை யதார்த்த உண்மைகளாயிருந்திருக்கும். இப்போது புகழ் பெற்றிருக்கும் பல ஆளுமைகளின் மீதுள்ள குறைகளை இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின்னால் விவாதிக்கும் போது இது போன்ற கசப்புகள் உருவாகலாம். (இளையராஜா போன்றவர்களை இப்போதே பேச முடியாது) ஓர் ஆளுமையை அந்தந்த நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்கும்.
Feb 23
விமலாதித்த மாமல்லன் - ஜெயமோகனே குறிப்பிடாத மதுரை மணி அய்யரை அவர் கதையில் தேடுவது அவதூறு. மேலும் இதை ஜெயமோகனே தொலை பேசியில் அந்தப் பாத்திரம் நிறைய பேரின் கலவை எனவும் தெரிவித்து இருக்கிறார். எனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நலம். ஜெயமோகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பொது நல வழக்கு போடும் முடிவில் இருக்கிறார் என்பதையும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். அநேகமாக அரங்கசாமியேக் கூட இது பற்றித் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

மணி அய்யர் தூய்மையான காந்தியவாதி என்பதற்கு சாட்சிகள் அவரிடம் உள்ளன. எதிரான தரவுகள் கைவசம் இல்லாதோர் முதலில் அதை தேடவும். முடியாதோர் தயவு செய்து அமைதி காப்பது நலம்.
EditFeb 23
Giridharan Rajagopalan - //
அடுத்த முறை ஜெயமோகனுக்கு வாசகர் கடிதம் எழுதும்போது அவர் கதையைப் படித்து கண்ணீர் விட்டு அழுததை மட்டும் குறிப்பிடாதீர்கள். இந்த விக்கிபக்கங்களைப் பார்த்து கண் சிவந்து கோபித்து சாபமிட்டதையும் சேர்த்து குறிப்பிடுங்கள்//

:))) @ஸ்ரீதர் - குட் ஸ்பாட். புனைவும், அபுனைவும் ஒன்றை ஒன்று நிரப்பி வழிந்துகொண்டிருக்கிறதே ;)
Feb 23
சுரேஷ் கண்ணன் - no net access right from morning. viewing this from friend's system. will view all the mails leisurely at today night.Feb 23
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஸ்ரீதர், நீங்கள் சொல்லும் விக்கிபீடியா திருத்தங்கள் போன்ற விஷயங்கள் தெளிவாகப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக (அதைப் பற்றி மட்டும்) சொல்ல முடியுமா? (தனி பஸ்ஸிலென்றாலும் சரி).Feb 24
Manikandan Viswanathan - சுந்தர், ரொம்ப உலக முக்கிய செய்தி பாரு :-) இதுக்கு தனி Buzz வேற ஒரு கேடு. விக்கிபீடியாவும் கவிதை மாதிரி. விளக்கம் எல்லாம் சொல்லமுடியாது :-)Feb 24