20 February 2011

மேரியாத்தாளா உங்க மேல வந்து ஆடறா? மிஸ்டர் ஆண்டன் செகாவ்?


அன்பான நண்பர்களே!

இந்தக் கதையை செகாவ் எழுதிய ஆண்டு 1886. உலக இலக்கியத்தை, எழுதப்பட்ட மூல மொழி தெரிந்து, அவற்றை மூலத்திலேயே படிப்போர் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஆங்கில வாசிப்பில் தேர்ந்தவர்கள் கடைக்கண் பார்வைக்கேனும் கொடுத்து வைத்தவர்கள். இந்த இரு சாராராரும், தயவு செய்து கீழே தமிழில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க வேண்டாம்.நேரே செகாவிற்குச் செல்லுங்கள். பிறகு வரலாமிங்கே மெதுவாக.

இப்போது நான் எழுதுவது, என் போன்ற நகராட்சி மாநகராட்சிக் கெட்ட வார்த்தைக் கீழ்க்குலங்களுக்கு. என்னைப் போன்றோருக்கு ஆங்கிலத்தில் படிப்பது என்பதே கஷ்டமான காரியம். வேலியை எம்பிக் குதிப்பதுதான் எளிய வழி. புரிந்த வார்த்தைகளைப் படியுங்கள். புரியாத வார்த்தைகளைத் தாண்டிச் செல்லுங்கள். முடியும்போது கதை ஒருவாறு புரிந்திருக்கும். திரும்ப ஒரு முறை முதலில் இருந்து படியுங்கள். இபோது புரியாத வார்த்தைகள் குறைவாக இருப்பதை உணர்வீர்கள். உதாரணமாக ’கேலோஷூ’ என்பது ஏதோ ஒரு வகை ஷூ என மட்டுமேப் புரிந்திருக்கும். பொறுமையுடன் கூகுளில் தேடுங்கள். அது பூட்ஸு எனத் தெரியும். பூட்ஸு ஏன் அங்கு குறிப்பிடப்படுகிறது என்பதும் தெளிவு படலாம். பையன்கள் ஏன் கால்களை நடைபதையில் சத்தமெழ உதைத்தபடி வருவதாய் எழுதுகிறார்?. பிறகு அவர்கள் வண்டியில் ஏறி அமர்கையில் நடத்தும் ஆர்பாட்டம், கூன நண்பனை நிற்க வைத்தல்,அமர்ந்தபின் பேசும் உரையாடல் என அவர்கள் குறித்த அனைத்தும் தர்க்க ரீதியில் ஒத்து இசைவது தெரிகிறதா? அடங்கொக்காமக்கா அந்தப் பயல்கள் நுண்ணுண்ர்வற்ற கவலையற்ற வசதியான சுயசொறிகள் என்பதற்காகத்தான் இந்த விவரணையா? ஆமா இப்பதான் பிடிபடுது அந்த ரானுவ ஆபீசர், கதையின் ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தப் படுகையிலேயேப் பனியை சிலுப்பிக்கிறான். பசங்களோட பூட்ஸு பனி பூட்ஸா? வண்டிக்காரனும் குதிரையும் மட்டும் ஏன் சும்மா இருக்காங்க. 

குதிரை வண்டிக்காரன் மேல் பனி பொழிய அவன் ஏன் தன்னைக் குலுக்கி பனியை உதறிக் கொள்ளாமல் ”இரண்டாக மடிந்தவனைப் போல் உட்கார்ந்திருக்கிறான்.” கதையின் முதல் வரி ”என் துக்கத்தை யாரிடம் பகிர்வேன்” ஏன் எழுதப்பட்டது? அப்படி எனில் அந்த வரியைத் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறானா வண்டிக்காரன்? பனி விழுந்தும், குதிரையும்கூட ஏன் சும்மா இருக்கிறது? "அநேகமாக அது ஏதோ யோசனையில் இருக்கிறது போலும்” அடங்கொய்யால மனுஷனுக்கு சொல்றதைக் குதிரைக்கு சொல்றான். ”உழவின் அமைதியிலிருந்து பறிக்கப்பட்டு பரபரப்பிற்கு ஆட்படுத்தப்படும் எவரும் இப்படி ஆகிவிடுவது சாத்தியம்தான்.” இதை இன்னாத்துக்குக் குதிரைக்கு சொல்றான் இந்த ஆளு? 

எல்லாருக்கும் பெய்யற பனியை எத்தனி தினுசா எழுதுறான்யா? அதெல்லாம் சரி அந்த ஒரு தினத்தில் அந்த வண்டிக்காரன் சந்திக்கும் நபர்களெல்லாம் யார் யார்? 

யப்பா தங்கங்களா! குறியீடு குறியீடுன்னு கிரிக்கெட்டு மாதிரிக் குறிக் கட்டையைத் தூக்கிகிட்டுக் கெளம்பிடாதீங்கையா!

சே, மொழிபெயர்ப்புலக் கரைஞ்சி மிஞ்சின பனியே இவ்ளோ இருக்குன்னா, அவன் சொந்த பாஷைல எப்படி எழுதி இருப்பான். 

மெல்ல மெல்ல பார்வையின் துல்லியத்தில் மூட்டம் அகலக் கூடும். ஒரு முறை தலைகீழாக அதாவது கடைசி பத்தியில் இருந்து படிப்பது போல் பாவனை செய்து படித்ததை மறு முறை எண்ணிப் பாருங்கள். எழுத்தாளன் எந்த முடிவை நோக்கிய பயணத்தில் எந்தெந்தக் கண்ணிகளை எங்கெங்கே பதித்து வைத்திருக்கிறான் என்பது புலப்படக் கூடும். 

ஒரு கதையைப் படிக்க இவ்ளோ கஷ்டப்படணூமா? ஓ உனக்கு ஜிலேபி மாதிரி கரையணுமா? அப்ப ஆனந்த விகடன் குமுதம் படி. என் எழவ ஏண்டா எடுக்கறே!

இந்தப் பயிற்சியில் உண்மையில் ஈடுபட்டால் எவன் கண்டான், நீங்களே கூட இணையத்து மூர்த்தியை விட நல்ல படைப்பைத் தரக்கூடும், உங்களின் அநுபவ விஸ்தரிப்பிற்காய்க் கற்பனையை ஊதும் போது அது கனிந்து ஒளிரவும் கூடும்.

இந்த உள் நோக்கும் பயணம், இருமுனைக் கத்தி. உள்ளீடற்ற கதை அல்லது செய்திறனற்ற படைப்பு எனில் கூர்த்த அவதானிப்பில், பப்பரப்பே எனப் பல்லிளித்துவிடும். ஜோடனைக்காகவே பூசப்பட்ட சொல்லாட்டங்களும் அதிர்ச்சி மதிபீட்டிற்காய் மிகை-நாடகீயத் தூண்டலுக்கான உடுக்கடித் தாளத் தவறுகளும், சம்மட்டி அடியில் மாட்டிய கொட்டை போல் தெறித்துவிடும். கலை என்பது சரஸ்வதி கடாக்ஷமெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. செகாவுக்கு என்ன மேரியாத்தாளா மேலே வந்து ஆடுகிறாள்? 

வண்டிக்காரனைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் மேட்டுக் குடியினர் மட்டுமேவாக இருந்தால் இது ஒற்றைப் பரிமான சிறந்த முற்போக்கு மொண்ணையாகியிருக்கும். சக தொழிலாளி உட்பட இவனைக் கேட்கக் காதுகளில்லை. எனில் அவர்கள் எல்லோரும் வில்லன்களா. இல்லவே இல்லை. அவனவனுக்கு அவனவன் கவலை. காது கொடுக்க நேரம் லேது.

படைப்பு என்பது, செப்படி வித்தையோ ஜேப்படி வித்தையோ அல்ல. அது அனுபவச் செழிப்பில் மனத்தின் குவிப்பு. 

”தர்கம் தகவல் எல்லாம் சரியா இருந்து கதை மொக்கையாய்ப் போய்விட வாய்ப்பிருக்கு.” ஒரு காலிச் சிப்பி, இப்படியொரு இலக்கிய முத்து உதிர்க்கிறது . ஏழைப் பிள்ளையார் கோயிலின் பிச்சைப்பாத்திரம் வித்தியாசமாகவா ஏப்பம் விடும். வித்தியாசமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ள விடும் ஏப்பம்.

மாரியாத்தாளுக்கு நேர்ந்துகிட்டோம்னு மண்சோறைப் பிரசாதம்னு திங்கறவங்களை என்ன செய்ய முடியும்? என்னமோ போவட்டும் அவங்க நேர்த்திக்கடன் அப்பிடின்னு விட்டுவிடலாம். அதையேத் தெருவுல நிண்ணு ஆஹாஹா ஓஹோஹோன்னு ஆவேசம் வந்தாப்புல ஆடிக்காட்டினா? ஓ அப்படியா, இதையும் தின்னுன்னு செங்காமுட்டிக் கல்லைத்தான் சாமியாடிக்குக் கொடுக்கணும்.

மனசுக் கெடந்து கொமஞ்சுதுன்னா, ஒருத்தன் சொல்லணும் ஒருத்தன் கேக்கணும் இல்லையா? அந்த ரெண்டு பேருக்குள்ள அலைவரிசை ஓரளவாச்சியும் ஒத்து போகணும் இல்லையா? சும்மா படிச்சிகிட்டுப் போங்க விடை கடைசிலத் தெரியும்.

முதல் வரியிலேயே கதையச் சொல்லிவிட்டுக் கடைசி வார்த்தை வரையில் படிக்க வைக்கிற, கூவாமல் நெகிழ வைக்கிற, இவனை என்னவென்று அழைக்கலாம் தெய்வம்? ப்ச. அதனிலும் பெரியவன். கலைஞன்.

MISERY - Anton Chekhov

"To whom shall I tell my grief?"

THE twilight of evening. Big flakes of wet snow are whirling lazily about the street lamps, which have just been lighted, and lying in a thin soft layer on roofs, horses' backs, shoulders, caps. Iona Potapov, the sledge-driver, is all white like a ghost. He sits on the box without stirring, bent as double as the living body can be bent. If a regular snowdrift fell on him it seems as though even then he would not think it necessary to shake it off.... His little mare is white and motionless too. Her stillness, the angularity of her lines, and the stick-like straightness of her legs make her look like a halfpenny gingerbread horse. She is probably lost in thought. Anyone who has been torn away from the plough, from the familiar gray landscapes, and cast into this slough, full of monstrous lights, of unceasing uproar and hurrying people, is bound to think.

It is a long time since Iona and his nag have budged. They came out of the yard before dinnertime and not a single fare yet. But now the shades of evening are falling on the town. The pale light of the street lamps changes to a vivid color, and the bustle of the street grows noisier.

"Sledge to Vyborgskaya!" Iona hears. "Sledge!"

Iona starts, and through his snow-plastered eyelashes sees an officer in a military overcoat with a hood over his head.

"To Vyborgskaya," repeats the officer. "Are you asleep? To Vyborgskaya!"

In token of assent Iona gives a tug at the reins which sends cakes of snow flying from the horse's back and shoulders. The officer gets into the sledge. The sledge-driver clicks to the horse, cranes his neck like a swan, rises in his seat, and more from habit than necessity brandishes his whip. The mare cranes her neck, too, crooks her stick-like legs, and hesitatingly sets of....

"Where are you shoving, you devil?" Iona immediately hears shouts from the dark mass shifting to and fro before him. "Where the devil are you going? Keep to the r-right!" 

"You don't know how to drive! Keep to the right," says the officer angrily.

A coachman driving a carriage swears at him; a pedestrian crossing the road and brushing the horse's nose with his shoulder looks at him angrily and shakes the snow off his sleeve. Iona fidgets on the box as though he were sitting on thorns, jerks his elbows, and turns his eyes about like one possessed as though he did not know where he was or why he was there.

"What rascals they all are!" says the officer jocosely. "They are simply doing their best to run up against you or fall under the horse's feet. They must be doing it on purpose."

Iona looks as his fare and moves his lips.... Apparently he means to say something, but nothing comes but a sniff.

"What?" inquires the officer.

Iona gives a wry smile, and straining his throat, brings out huskily:

"My son... er... my son died this week, sir."

"H'm! What did he die of?"

Iona turns his whole body round to his fare, and says: "Who can tell! It must have been from fever.... He lay three days in the hospital and then he died.... God's will."

"Turn round, you devil!" comes out of the darkness. "Have you gone cracked, you old dog? Look where you are going!"

"Drive on! drive on!..." says the officer. "We shan't get there till to-morrow going on like this. Hurry up!"

The sledge-driver cranes his neck again, rises in his seat, and with heavy grace swings his whip. Several times he looks round at the officer, but the latter keeps his eyes shut and is apparently disinclined to listen. Putting his fare down at Vyborgskaya, Iona stops by a restaurant, and again sits huddled up on the box.... Again
the wet snow paints him and his horse white. One hour passes, and then another....

Three young men, two tall and thin, one short and hunchbacked, come up, railing at each other and loudly stamping on the pavement with their galoshes.

"Cabby, to the Police Bridge!" the hunchback cries in a cracked voice. "The three of us,... twenty kopecks!"

Iona tugs at the reins and clicks to his horse. Twenty kopecks is not a fair price, but he has no thoughts for that. Whether it is a rouble or whether it is five kopecks does not matter to him now so long as he has a fare.... The three young men, shoving each other and using bad language, go up to the sledge, and all three try to sit down at once. The question remains to be settled: Which are to sit down and which one is to stand? After a long altercation, ill-temper, and abuse, they come to the conclusion that the hunchback must stand because he is the shortest.

"Well, drive on," says the hunchback in his cracked voice, settling himself and breathing down Iona's neck. "Cut along! What a cap you've got, my friend! You wouldn't find a worse one in all Petersburg...."

"He-he!... he-he!..." laughs Iona. "It's nothing to boast of!"

"Well, then, nothing to boast of, drive on! Are you going to drive like this all the way? Eh? Shall I give you one in the neck?"

"My head aches," says one of the tall ones. "At the Dukmasovs' yesterday Vaska and I drank four bottles of brandy between us."

"I can't make out why you talk such stuff," says the other tall one angrily. "You lie like a brute."

"Strike me dead, it's the truth!..."

"It's about as true as that a louse coughs."

"He-he!" grins Iona. "Me-er-ry gentlemen!"

"Tfoo! the devil take you!" cries the hunchback indignantly. "Will you get on, you old plague, or won't you? Is that the way to drive? Give her one with the whip. Hang it all, give it her well."

Iona feels behind his back the jolting person and quivering voice of the hunchback. He hears abuse addressed to him, he sees people, and the feeling of loneliness begins little by little to be less heavy on his heart. The hunchback swears at him, till he chokes over some elaborately whimsical string of epithets and is overpowered by his cough. His tall companions begin talking of a certain Nadyezhda Petrovna. Iona looks round at them. Waiting till there is a brief pause, he looks round once more and says:

"This week... er... my... er... son died!"

"We shall all die,..." says the hunchback with a sigh, wiping his lips after coughing. "Come, drive on! drive on! My friends, I simply cannot stand crawling like this! When will he get us there?"

"Well, you give him a little encouragement... one in the neck!"

"Do you hear, you old plague? I'll make you smart. If one stands on ceremony with fellows like you one may as well walk. Do you hear, you old dragon? Or don't you care a hang what we say?"

And Iona hears rather than feels a slap on the back of his neck.

"He-he!..." he laughs. "Merry gentlemen.... God give you health!"

"Cabman, are you married?" asks one of the tall ones.

"I? He he! Me-er-ry gentlemen. The only wife for me now is the damp earth.... He-ho-ho!.... The grave that is!... Here my son's dead and I am alive.... It's a strange thing, death has come in at the wrong door.... Instead of coming for me it went for my son...."

And Iona turns round to tell them how his son died, but at that point the hunchback gives a faint sigh and announces that, thank God! they have arrived at last. After taking his twenty kopecks, Iona gazes for a long while after the revelers, who disappear into a dark entry. Again he is alone and again there is silence for him.... The misery which has been for a brief space eased comes back again and tears his heart more cruelly than ever. With a look of anxiety and suffering Iona's eyes stray restlessly among the crowds moving to and fro on both sides of the street: can he not find among those thousands someone who will listen to him? But the crowds flit by heedless of him and his misery.... His misery is immense, beyond all bounds. If Iona's heart were to burst and his misery to flow out, it would flood the whole world, it seems, but yet it is not seen. It has found a hiding-place in such an insignificant shell that one would not have found it with a candle by daylight....

Iona sees a house-porter with a parcel and makes up his mind to address him.

"What time will it be, friend?" he asks.

"Going on for ten.... Why have you stopped here? Drive on!"

Iona drives a few paces away, bends himself double, and gives himself up to his misery. He feels it is no good to appeal to people. But before five minutes have passed he draws himself up, shakes his head as though he feels a sharp pain, and tugs at the reins.... He can bear it no longer.

"Back to the yard!" he thinks. "To the yard!"

And his little mare, as though she knew his thoughts, falls to trotting. An hour and a half later Iona is sitting by a big dirty stove. On the stove, on the floor, and on the benches are people snoring. The air is full of smells and stuffiness. Iona looks at the sleeping figures, scratches himself, and regrets that he has come home so early....

"I have not earned enough to pay for the oats, even," he thinks. "That's why I am so miserable. A man who knows how to do his work,... who has had enough to eat, and whose horse has had enough to eat, is always at ease...."

In one of the corners a young cabman gets up, clears his throat sleepily, and makes for the water-bucket. 

"Want a drink?" Iona asks him.

"Seems so."

"May it do you good.... But my son is dead, mate.... Do you hear? This week in the hospital.... It's a queer business...."

Iona looks to see the effect produced by his words, but he sees nothing. The young man has covered his head over and is already asleep. The old man sighs and scratches himself.... Just as the young man had been thirsty for water, he thirsts for speech. His son will soon have been dead a week, and he has not really talked to anybody yet.... He wants to talk of it properly, with deliberation.... He wants to tell how his son was taken ill, how he suffered, what he said before he died, how he died.... He wants to describe the funeral, and how he went to the hospital to get his son's clothes. He still has his daughter Anisya in the country.... And he wants to talk about her too.... Yes, he has plenty to talk about now. His listener ought to sigh and exclaim and lament.... It would be even better to talk to women. Though they are silly creatures, they blubber at the first word.

"Let's go out and have a look at the mare," Iona thinks. "There is always time for sleep.... You'll have sleep enough, no fear...."

He puts on his coat and goes into the stables where his mare is standing. He thinks about oats, about hay, about the weather.... He cannot think about his son when he is alone.... To talk about him with someone is possible, but to think of him and picture him is insufferable anguish....

"Are you munching?" Iona asks his mare, seeing her shining eyes. "There, munch away, munch away.... Since we have not earned enough for oats, we will eat hay.... Yes,... I have grown too old to drive.... My son ought to be driving, not I.... He was a real cab-man.... He ought to have lived...." 

Iona is silent for a while, and then he goes on: 

"That's how it is, old girl.... Kuzma Ionitch is gone.... He said good-by to me.... He went and died for no reason.... Now, suppose you had a little colt, and you were own mother to that little colt.... And all at once that same little colt went and died.... You'd be sorry, wouldn't you?..."

The little mare munches, listens, and breathes on her master's hands. Iona is carried away and tells her all about it.

இந்தக் கதையை நான் படிக்கக் காரணமாயிருந்த இருவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். 

முதலாமவர் ஜெயகாந்தன், மடத்தில் பெரும் அரட்டைப் பேச்சிற்கு இடையில், ”புள்ள செத்த துக்கத்தை சொல்லியழ ஆளில்லாம குதிரைகிட்ட சொல்லுவான் குதிரை வண்டிக்காரன். செகாவ் என்கிற இலக்கியச் சிகரம்”.

விக்ரமாதித்யனின் கவிதையில் வரும் ஒரு பகுதி.

குதிரையிடம் 
துக்கத்தைச் சொல்லி 
அழும்படியாகத்தான் 
வைத்திருக்கிறது வாழ்க்கை. 

(விக்ரமாதித்யன் புத்தகம் கிடைக்கவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன். தவறிருப்பின் தயவுசெய்து சுட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்)

Misery by Anton Chekhov PDFஆகப் பெற http://www.mediafire.com/?kft6w1m4au1okxg