26 February 2011

லிங்கம் - கதை

நடந்தது என்ன - வீக்கிபீடியா குற்றம் - விழிப்புணர்வு பற்றிய துண்டுப் படம்  டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது.

வல்லரசுகள் மோதிக் கொள்ளுகின்றன. ஆபாச வேத ஜபிப்பு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 

பிட்டு படம் போட்டு மூன்று போகம் கவிதை எழுதுகிறவன் 
கெகியேது சினிமாவில் விமர்சனம் எழுதுகிறதான் கிக்கில் எதற்கும் கருத்து சொல்லும் சுக்கன் 
மின்சார சப்ளையர் டைனமோ அலம்பன்
என்ன நடக்கிறதென்றே அறியாமல் எவனோ விட்ட குசுவுக்கு தார்மீக வருத்தத்தில் ஆழும் திருதிரு ராஷ்டிரன் 

என மூன்றாம் உலக நாடுகள், வல்லரசுகளின் சண்டையின் இடையில் புகுந்து கத்தி சுழற்றி காணாமல் மறைகின்றன.

கருப்புத் திரையில் வெள்ளை எழுத்துக்கள்

வலுத்தது வாழும் - வாழ்ந்து கொண்டு இருப்பவை எல்லாம் வலுத்தவை அல்ல. பொதுநல நோக்கில் வெளியிட்டவர்கள் கிழக்கு - தள்ளிப் படிக்க வேண்டிய புத்தக வெளியீட்டாளர்கள்.

தோக்கா டிவி தலைப்புச் செய்திகள் 

தலைமைக் கழகத்தின் புலம்பல் 

சுக்குக் காப்பி எங்கள் ஆள் இல்லை. அது வெளியாள். அதுவாக வந்து சொந்த வசனம் பேசி ப்ராம்ப்டிங்கையும் சட்டை பண்ணாமல் இஷ்டத்துக்கு ஜால்ரா தட்டி எங்கள் நாடகத்தை நீர்க்கச் செய்கிறது.

தலைமை மன்றச் செயலாளருக்குத் தலைமியிடம் டோஸு

வாங்கிக் கட்டிக் கொண்டது கொஞ்ச நஞ்சமில்லே! அதனால்தான் வரி வரியாய் வரிசையாய்ப் பிலாக்கணம். 

அய்யையோ இப்படி நா கெதியத்துப் போனேனே! அய்யா என்னப் பெத்த ராசா என்னைவிட்டுப் போயிப்புட்டா எப்புடி நா சீவிப்பேன் (ஜீவிப்பேன் - தவறாக யாரும் தலைவாரி விட்டுவிட வேண்டாம். அவிழ்ந்தது முடியாமலேயேக் கிடக்கட்டும் கொஞ்ச நாளைக்கு. பத்து முடிந்தபின் பார்க்கலாம்) 

இந்தப் புலம்பலுக்கும் தம்மைக் குற்றம் சாட்டுதல் ஆதாரமற்ற அவதூறு என்கிறார் எதிர்கட்சித் தலைவர்.

விரிவான செய்திகள்

சரி நான் தெரியாமதான் கேக்கறேன் மணி அய்யர் ‘குடி’ மேட்டர் நான் எழுதவே இல்லேங்கறே! சரிப்பா நம்பறேன். அப்பிடின்னா எழுதாத உனக்கு கலைக்கவோ அல்லது அழிக்கவோ என்ன உரிமை இருக்கு? என்ன முகாந்திரம் இருக்கு? எவன் பெத்த பிள்ளைக்கோ நீ ஏம்ப்பா இனிஷியல் குடுக்கறே!

தேவடியாள் பையன் அல்லது தாய் ஓளி என்கிற எதிரணித் தலைவரின் வயிறெரி சாப வசை அறிக்கைகள் அந்த அயோக்கியத்தனக்களைச் செய்தவன் குறித்ததே! நீ இல்லை எனில் சும்மா லூஸ்ல வுட்டுட்டுப் போ மேன்! செஞ்சவனுக்கு அது சீ தனமாப் போவட்டும். உனக்கு ஏன் குத்துது? 

எனக் கேட்கிறார் எதிரணித் தொண்டர்.

ஒருவர் கேட்டதற்க்காகவே அதை டெலீட் செய்தேன். 
அதுவும் நண்பர் ஒருவர் அதை டெலீட் செய்யச் சொன்னதனாலேயே அதை செய்தேன். 
அதுவும் என் பெயரிலேயே செய்தேன். 
அதுவும் அவருக்கு அதை நீக்குவது எப்படி என்று தெரியாது அதனால்தான் நான் டெலீட் செய்தேன்.
மற்றபடிக்கு நீக்கியது நான், போட்டது யாரெனத் தெரியாது.

அறம் பேசும் ஆலத்தியே! அறைகூவல் விடுக்கிறேன். உன் நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்!

அந்த நன்பருக்கு வீக்கிபீடியாவில் டெலீட் செய்ய உண்மையிலேயே தெரியாதா?

பொய் சொல்கிற வாய்க்கு போஜனம் கெடைக்காது! புரிந்துகொள்! நல்ல ஸ்பான்ஸரரான 

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற - இந்த 
நாட்டிலுள்ள எழுத்துகளின் வாழ்வு முன்னேற!

ஒரு தப்பை செஞ்சா ஒத்துக்கணும். அதை விட்டுவிட்டு மறைக்கப் பாத்தா இப்படித்தான் தப்பு மேலத் தப்பா செஞ்சி தப்பு தப்புன்னு நீ வழிபடற தலைவர்கிட்டையே தப்படி வாங்கணும். பெரிய மனுசன் வேசம் போட்டுருக்கற சின்னப் பையன் நீ மொதல்ல அதைப் புரிஞ்சிக்கோ மிஸ்டர். 

எதிரணித்தலைவர் ஆவேசம். 

நிலைய நிருபருடனான நேர்காணலின் ஒரு பகுதி. 

வீக்கிபீடியாவில் டெலீட் பண்னத் தெரியாத அந்த நண்பர், வேலை பார்க்கும் இடம் எது? - இன்ஃபோஸிஸ்

என்ன வேலை பார்க்கிறார்? - தோட்டம் பெருக்கற தினக்கூலியா? - இல்லை, ஸிஸ்டம் அனலிஸ்ட்.

ஸிஸ்டம் அனலிஸ்டா வேலை பாக்கற ஒருத்தருக்கு வீக்கிபீடியாவுல ஒரு கமெண்டை டெலீட் பண்ணத் தெரியாது. இதை நாங்க நம்பணும். அதனாலதான் நீ செஞ்சே ஏன்னா கம்ப்யூட்டர்தான் உனக்குத் தொழில். அப்ப அவருக்கு?

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் செய்திகள் தொடரும்.

கட்சி மோதல்கள் - வீக்கிப்பீடியா விவகாரம் - சிறப்புப் பார்வை.

வீக்கிப்பீடியா என்றில்லாமல் பொதுவாகவே தொண்டர்கள் யாருக்கும், தம்மைப் போல நாஸூக்காத் திருட்டுத்தனம் செய்ய வரவில்லை என்று ஆளும்கட்சித் தலைவர் கடிந்து கொள்வதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. 

அவர் கதை எழுதி அனுப்புவார். தனியாக வீக்கியில் என்ன ஏறவேண்டும் என்பதையும் டிஸ்கஸ் பண்ணுவார். செயல் வீரர்கள் அவர் வழிநடத்தலுக்கு ஏற்ப உடனுக்குடன் வீக்கிப்பீடியாவில்  சோடாபாட்டில் சோதாப்ராத்தல் என்கிற பெயர்களில் வரலாற்றை எழுதிப் பதிவார்கள். வரலாற்றை தாண்டுவது என்பதன் சராம்சம்,இப்படி தன் செளகரியத்துக்கு எழுதிக்கொண்டு தாண்டுவதுதான். அதுவும் கதை பதிவேறிப் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தை போல வீக்கி பீடியா கதை ஆதாரங்களுடன் விக்கி விக்கி அழும். 

அப்புறம் அந்த வீக்கியில் எம்.வி.வெங்கட்ராம் பற்றி ஜெயமோகன் அறம் என்ற கதையை எழுதி இருக்கிறார் என்கிற சுட்டி சேர்க்கப்படும்.சுட்டி கொடுத்து விட்டு தேமேன்னு இருந்துவிடுவதை ஜெயமோகன் எவ்வளவு ஜெண்டிலாகப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

ஒவ்வொரு கதை வெளியானதும் சுக்கு ட்ராவல்ஸ் பஸ் விடும். அங்கு வந்து
சுக்கு அது திஜா சுரா? 

இன்னொரு பஸ்ஸில் முண்டியடித்து 
இதில் என்ன சந்தேகம் அது மணி அய்யரேதான்.

ஏண்டா என்னையும் சேத்து முச்சந்தில இழுத்து விட்டே என்று, தலைமையிடம் செமை டோஸ் விழுந்ததும் மணி அய்யர் பற்றிய கமெண்ட் ட்ராவல்ஸ் பஸ்ஸில் டெலீட்டப்படும். இதிலும் டெலீட்டியது மட்டும்தான் தன் வேலை, போட்டது தானில்லை போலும்.

ஜெண்டில் ஜெமோவின் சிஷ்யப் புரவலனாய் இருந்தும் இப்படிப் பக்கி போலப் பட்டவர்த்தனமாகவாப் பண்ணுவது? அதுவும் எதிர்க் கட்சிக் கடன்காரன் கண்ணில் விளக்கெண்னெய் விட்டுக் கொண்டு வேலைவெட்டி இன்றி இதுவே தொழிலாகக் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்கிறான். இப்படியான ஆர்வக் கோளாரு, கொணஷ்டைகள் செய்து வைத்தால், வேறு வினையே வேண்டாம். ஏறி அடித்தான் எதிர் கட்சித்தலைவன்.

அடிபட்டவனுக்கு எழுந்தது அனுதாப அலை, கடல்களைத் தாண்டி. ஊர்பேர் அறியா அநாமதேயம் எதிர்கட்சிக் காரனிடம் அடிபட்டிருந்தால் இத்துனைக் கண்கள் ரத்தம் வடிக்குமா? தானாடாவிட்டலும் பணமாடும். பத்து பைசா தரவேண்டாம் பெறவேண்டாம். பணமிருப்பவனைப் பார்த்தாலே ஒரு ஜிம்பல்தான். ஜிம்பலில் மறைந்து இருக்கிறது ஜம்பத்தின் லஜ்ஜையற்ற இளிப்பு.

தலைமையே நேரடியாக ஃபோனிலும் சொல்லியாயிற்று. அது ஒரு தனிமனித முகமல்ல. 25 வருடங்களாகக் கேள்விப்படும் பல ஆளுமைகளின் கலவை. இசை பற்றித் தான் ஒன்றும் அறியாததால் கேள்விப்பட்ட தகவல்களையேக் கயிறாகத் திரிக்க வேண்டி வந்தது.

தாக்குதலை தன்னிலை விளக்கம் காப்பாற்றுமென்று பார்த்தால், மூடக் கொசுக்களின் காதடைக்கும் ஙொய். தலைவர் தன்னிகரற்றவர் எதையும் எதிர் நின்று சந்திப்பவர். காலைச் சுற்றிய சூனியம்.

இந்தக் கதையில் வருபவரின் சாமான் 40 வருடம் முன்பாக எழுதப்பட்ட கதையில் போய் எப்படி உட்கார்ந்தது? அந்த சாமானை அவர் கடனுக்கு வாங்கி வைத்திருந்தாரா? அல்லது வாடகைக்கா? ஒரிஜினலாக அந்த சாமானத்தின் ஓனர் யார் எனப் புரிந்து கொண்டால் மட்டுமே நம் வாழ்க்கையை நாம் நன்றாகப் விளங்கிக் கொள்ள முடியும். அந்தப் புரிதலே, அதன் மீது பீய்ச்சப்படும் ஒளியே, நமது சொந்த சாமான்களையும் சாமானங்களையும் காப்பாற்றிக் கொள்ள நமக்கு வழிகாட்டி உதவக்கூடும்.

அய்யகோ! தலைமையின் சாமானமே சாமான்யமாகத் தவிடுபொடி ஆகிக் கொண்டு இருக்கிறது. இடையில் கூட்டு லாவணிக் கூச்சல். கும்பலுக்கு பழைய வரலாறு தெரியாது. கட்சியின் ஆரம்பத் தூண்களில் ஒன்றான அரவிந்தமே விஷ வாசம் அடிக்கத் தொடங்கி விட்டது. பெருந்தலைமையின் நிழலாய் மரத்தடி செடியாய் வளர் முக பருவத்திலேயே எதிர்பட்டவர்தான் எதிர்த்தவர்தான் இன்று எதிர்கட்சித் தலைவர்.

முந்தைய காலகட்டங்களில் கழகம் எதிர்கொண்ட எதிரிகளைப்போல் அல்ல, இடையில் தூங்கிக் கிடந்த, எலி தொடர் ஊதலாளன். கட்சி வளரத் தொடங்கிய கால கட்டங்களில் தெருத்தெருவாய் எதிர்ப் பிரச்சாரம் போல் பேசிக்கொண்டு திரிந்தவன். ஏசிக்கொண்டு திரிந்தவன் என்பது இன்னும் பொருந்தும். எப்போதேனும் மனிதர்கள் போல தவறிப் போய் நாகரீக மொழியில் பேசிவிடக்கூடிவன். எழுதவே முடியாமல் கை இழுத்துக் கொண்டு வலிப்பில் கிடந்தவன். குணமானது போல் குறுகிய காலத்திற்கு ஒரு ஷோ காட்டி திரும்ப வாதத்தில் மாண்டவன். அவனை மறந்துத் தொலைக்கலாம் என்றிருந்தால், மீண்டு வந்து எழுதத்தொடங்கி இருக்கிறான். சரி ஏதோ கதை எழுதப் போகிறது கழுதை, எழுதிவிட்டுப் போகட்டும் என இடது கையால் அட்சதை போட்டது தப்பாகப் போயிற்று. நிஜமாகவே தலைமையின் காவியில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறதுதான் போலும். தரித்திரம் இரவு பகலாக எழுதத் தொடங்கி விட்டது. கழகத்தைப் பற்றி எழுதுவதே கழுதைக்கு வேலையாகப் போய்விட்டது. ஆரம்பம் தொட்டுக் கழக வரலாற்றின் முக்கிய மைல் கற்களை அவற்றின் அஸ்திவாரத்தில் இருந்து தோண்டத் தொடங்கி விட்டது. நேரில் சாத்வீக சமாதானக் கொடி காட்டியும் பிரபலங்கள் மூலம் அறிவுரை கூறியும், உன் கதையை எழுதப்பார் என்றால் கழகத்தின் கதையை நோண்டுவதை ஏதோ நோண்பு போல செய்து கொண்டு இருக்கிறது, நரசிம்மன் எனப் பெயர் வைத்திருக்கும் வராஹ அவதாரம். 

கட்சியின் முக்கியமான பழைய ஆவணங்களைத் தேடித்தேடி பார்த்து  அசைபோட்டு துப்பிக் கொண்டு இருக்கிறது. காழ்ப்பு வன்மம் எல்லாம் இதனிடம் செல்லாது போலத் தோன்றுகிறது. தொட்டதற்கெல்லாம் நொள்ளை நொட்டை சொல்லி அதைக் கேட்கவும் கூட்டம் சேரத்தொடங்கி விட்டது. முதல் பார்வையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டம்தானே என உதாசீனப்படுத்தியது, தவறான கணிப்போ? அது கேட்கும் கேள்விகளுக்கு எதிர்கேள்வி கேட்டு தலைமை சார்பாய் மல்லுக் கட்டுபவனும், அதனுடனான உரசலில் கொஞ்சம் சுயமாக சிந்திக்கத்தொடங்கி விட்டான்.

தலைமையிடமே தாறுமாறான கேள்விகள் தொண்டர்களாலேயேக் கேட்கப் படத் தொடங்கிவிட்டன. அலம்பிக்கறது பிராமணாள் கழுவிக்கறது அப்பிராமனாள் என்ற பகுப்பெல்லாம் இல்லை, தலைமை எழுதிய பின்னும் உன் வீட்டில் திருத்திப் பேசிக்கொள்ள இன்னும் தொடங்கவில்லையா? சீக்கிரம் திருத்திக்கொள், அன்றேல் கட்டம் கட்டப் படுவாய் என கலாச்சார பயமுறுத்தல் செய்தாயிற்று. நீ இன்னும் வளர வேண்டும், இப்போதுதான் எழுத்து கூட்டத் தொடங்கி இருக்கிறாய் என ஷெல்ஃபுகளைத் தற்காலிகமாகத் தலையில் தட்டி வைத்தாயிற்று. தட்டலை எத்துனைக் காலத்திற்குதான் நீட்டிக்க முடியும்? தலைமையிடமும் கூட தைரியமாகக் கேள்வி எழுப்பலாம் என்பதே கலகத்தின் முளைகட்டல் அல்லவா? கேள்விகள் இன்னும் பழைய பவ்வியத்துடன்தான் கேட்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இருக்கின்றனவா? என்கிற சந்தேகம் தட்டத்தொடங்கி இருப்பதே தலைமைக்கு அபாயச் சங்கு அல்லவா? வீசப்பட்ட கட்சிப் பேச்சாளர்களோ கவைக்குதவாத மக்கு மூடர்கள். அதனால் தான் இன்னும் கட்சியில் நீடிக்கிறர்கள் என்பது வேறு விஷயம்.

ஆனால் வரி வரியாய் பிரித்தால் எவ்வளவு அடர்த்தியாய் நெய்ததும் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்? எல்லாமே கெட்டிச்சாயம் எனவும் சொல்ல முடியாது. வேலைப்பாடுகளின் ஜிலுஜிலுப்பில் நடந்துகொண்டு இருக்கிறது வியாபாரம். ஜரிகையில் இருப்பது நிஜமான வெள்ளியா என கொளுத்திப் பார்ப்பேன் என்று முட்டிக் காலிட்டபடி முனைந்திருப்பவனை எப்படி சமாளிப்பது?

இப்போதைக்கு அதை ஒரு கெட்ட வார்த்தைப் பைத்தியம் எனச் சொல்லி வைக்கலாம். லாஜிக் பார்க்கும் பைத்தியம். அட இந்த கோஷம் நன்றாக இருக்கிறதே! நமக்கு வாய்த்த புத்திசாலி அடிமைகளை வைத்து முயற்சிப்போம். கெட்ட வார்த்தை என்பதும் நிறைய நாள் தாக்குப் பிடிக்கும்  எனத் தோன்றவில்லை. அதற்குத் திக்கு வாய், எனவே பிறவிக் குறையால் திட்டுகிறது என்பது போல அல்லவா கரிசனத்துடன் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதை இழித்து பேசி இளாக்காரமாக்கிவிடலாம் என்று பார்த்தால் எடுபடாது போலிருக்கிறதே. ஆனால் அது தன்பாட்டிற்கு இழிக்கிறது, அதைக் கேட்டு ஒரு கூட்டம் தட்டும் கைதட்டல் காதைக் கிழிக்கிறது.

தலைமை செய்த பூஜாபலன்! அது அதிகம் படிக்காது. அதற்குப் பொறுமை கிடையாது. எட்டுகண் பார்வை. தெருப்புழுதி இறைப்பில் திளைப்பு. நல்ல கதை எழுதியவன் நீ எனச் சொல்லிப் பார்த்தும் மசியவில்லை. விட்டுப் பிடிக்க வேண்டியதுதான். கட்சியின் செல்வாக்கு, பழைய வார்த்தை சூனியத்தின் கட்டடிலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டுடைப்பில் முழுதாய்த் தெளியும் முன் மக்களை புதிய விசையின் அழுத்தத்தில் கட்டிப் போடும் யத்தனமாய்த்தான் அழுக்காச்சியைக் கையில் எடுத்தது. அழுக்காச்சி வண்டி நன்றாகச் சென்று கொண்டிருக்கையில், இப்படி ஒரு வீக்கி, பெரும் பிரச்சனையாய் முளைத்து விட்டது. சுக்கானை அவசரமாய்த் திருப்பியாக வேண்டும். 

அது ஒரு புறம் காள்காள் எனக் கத்திக் கொண்டிருந்தாலும், நாடகத்தில் நன்றாக வசப்பட்டிருந்தனர் நரர்கள். எல்லாம் இந்த கு.ரங்கனால் வந்த வினை. ஒரு முறை உளறினால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையுமா உளருவார்கள். அதுவும் ராடியா கேடியா என எதற்கும் எதற்குமோ முடிச்சுகள் சிக்காகிக் கிடக்கும் காலம். பொதுவாகவே ஜனங்களுக்கு மந்திரக் கட்டு விட்டுப் போய் எதன் மீதும் அவநம்பிக்கை அரளியாய் மண்ட ஆரம்பித்து இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மனிதத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கும்படியாக எழுதப்படும் நாடகீயக் கதைகளுக்கு நல்ல மெளசு இருக்கும் எனப் போட்ட அறக் கணக்கு மத்துரு தயிராய்த் திரண்டு வருகையில் வணங்கானென தோற்ற மயக்கத்தை யானை டாக்டர் தோன்ற வைக்கையில் மயில் கழுத்தில் விழுந்த ஒரு தப்பு அடியில் தாயார் பாதம் பற்றிய தைரியத்தில் உட்கார்ந்த நூறுநாற்காலிகளில் ஒன்றுகூட மிஞ்சாது போல இருக்கிறதே.

எல்லாம் இந்தப் பயலின் ஆர்வக் கோளாரால் வந்தது. இவன் மட்டும் மிகை செய்யாமல் இருந்திருந்தால், இவ்வளவு மான நஷ்டம் உண்டாயிருக்காது. தலைவர் கதையில் மிகை செய்கிறார். நாம் ஏன் வாழ்க்கையில் செய்யக் கூடாது? கதைக்கு ஒத்தாய்த்தானே ஊதுகிறோம் என நினத்திருப்பான் போலும். இலக்கியம் வாழக்கை இரண்டும் அறியா இரண்டுங்கெட்டான்! கூப்பிட்டு கூப்பிட்டு இது அவர் அது இவர் எனச் சொல்லி அரசு முத்திரை குத்தாமல் இருந்திருந்தால் குறைந்தது கட்சித் தலைமையின் பெயராவது காப்பாற்றப் பட்டிருக்கும்.

கைமீறிப் போய்க் கொண்டு இருக்கிறது. எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும். அவதூறு காழ்ப்பு வன்மம் என எல்லாச் சொற்களும் வலுவற்றுப் போகத் தொடங்கி விட்டன. தர்மம் அழியத்தொடங்குவதன் அறிகுறி என்று சொல்லிப் பார்க்கலாம்.  அட ஆமாம் அறம் எனத்தொடங்கி தர்மம் என முடிந்தால் அற்புதமாக அல்லவா இருக்கும். கதை வீக்கி இரண்டையும் ஒன்றாக எழுதுவதால்தானே பிரச்சனை. வீக்கியை முதலில் எழுதத் தொடங்கலாம். ஒரு வாரம் கழித்துக் கதை எழுதிக் கொள்ளலாம். செட்டியை வைத்து எழுதினால் சேமம். முதலில் அந்த செட்டியாருக்கு வீக்கிப்பீடியா இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும். ஒரு செட்டியாரை நல்லவராகக் காட்டியதாகவும் ஆகக் கூடும். அப்படியே சாருவுக்கும் ஆப்பு வைத்ததாய் ஆகக்கூடும். உனக்கு வெறும் ஜவுளி என்னது பெருந்தொழில். கதை நாயகனின் பெயரை என்னவென வைக்கலாம்?

லிங்கம் - தர்மலிங்கம்.