02 May 2011

ஸித்திக்குதே!

fromஸ் பெ 
toவிமலாதித்த மாமல்லன்
dateMon, May 2, 2011 at 11:39 AM
subjectPost from சிவகுமார் மா
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 11:39 AM (1 hour ago)
மச்சி சார்,உங்கள் கவனத்திற்கு  ;))
 Link to this post:
 https://profiles.google.com/masivakumar/posts/WoG7RKoeTDQ
அறைக்குள் உட்கார்ந்தபடியே ஆய்வு செய்வதில் இவர் கில்லாடி போலிருக்கிறது. ஒரு சீனத் தொழிலாளியின் தின ஊதியம் 30 ரூபாய் என்று எப்படி கணக்குப் போட்டு விட்டார் (அதுவும் 14 மணி நேரம் உழைத்து) !!!

"நாம் கடையில் வாங்கும் சீனத்தயாரிப்பான ஒரு ’சீரியல்’ பல்பு இருபது ரூபாய். அதில் நூறு பல்புகள், நூறு இணைப்புகள் உள்ளன. அதை கையால் மட்டுமே இணைக்க முடியும். அதை ஒரு மனிதர்தான் செய்திருக்க வேண்டும். அந்த விலைக்கு அதை இங்கே வாங்க முடிந்தால் அதன் சீன மதிப்பு பத்து ரூபாய்க்கு மிகாது. உற்பத்தி இடத்தில் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய். ஒரு இணைப்பின் மதிப்பு எட்டு பைசா. அதில் செலுத்தப்பட்டிருக்கும் உழைப்புக்கு மூன்றுபைசாவுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒருநாளில் ஒரு சீன அரசடிமைத் தொழிலாளர் பதினான்கு மணிநேரம் உழைத்து அந்த பல்புகளை இணைத்திருந்தால் ஒரு நாளில் அதிகபட்சம் ஆயிரம் பல்புகளை இணைத்து முப்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்!"

சிறப்புத் திறனற்ற உதவித் தொழிலாளர் தினமும் 8 மணி நேர உழைப்புக்கு மாதச் சம்பளம் 600 யுவானுக்குக் குறையாமல் (4000 ரூபாய், தினக் கூலி 160 ரூபாய், மாதம் 25 வேலை நாட்கள்) வாங்குவது பொதுவான நடைமுறை.
கவனப்படுத்தியதற்கு நன்றி. 

இந்த நன்றி ஒரு சம்பிரதாய தாட்சண்யம்தான். இப்படியெல்லாம் இனிமேல் கவனப்படுத்த வேண்டாம் என தங்களை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு சரியாகத் தெரியாத துறைகள்கள் பற்றி வாயைத் திறப்பதில்லை. பெருத்த ஆர்வமற்ற துறைகள் தொடர்பாய்ப் படிப்பதும் இல்லை. பொதுவாகப் படிப்பவனே இல்லை. இருக்கும் அனுபவத்தை எழுத்தாக்க முடிந்தாலே 

’நான் வாழ்ந்த வாழ்வு நலமாகும். இல்லையெனில் ஏன் வாழ்ந்தாய் என்றே ஈசன் எனைக் கேட்பான்’ - கண்ணதாசன். 

என்பதாய் நாளைக்கடத்திக் கொண்டிருக்கும் நாதாரி நான்.

எழுத்தாளன், எல்லாம் அறிந்தது போல காட்டிக் கொண்டால்தான் சிந்தனையாளன் என்கிற பிம்பத்தில் பொருந்திக்கொள்ள முடியும் என்பது போன்ற புழுக்க நிர்பந்தமெல்லாம் எனக்கு இல்லை. எழுத்தாளனாக இருப்பதற்கே அதிகபட்ச உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கே செலவிட எனக்குத் திராணியில்லை. 

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம். 

பண்டிதனாக மட்டுமல்ல, ஏதாவது ஒன்றாக ஆகியே தீரவேண்டும் என்கிற ஆதங்கமேதும் எனக்கு இல்லை. 

முண்டினால் மட்டுமே படைப்பவனுக்கு முண்டிக்கொண்டு முகம் காட்டவேண்டிய அவசியம் என்ன?

ஆனான குருமார்களிடமிருந்து, ஆன்மீக தரிசனம் ஸித்தித்ததால், எல்லாம் அறிந்ததாய் உளறுவதற்கெல்லாம் எதிர்வினையாற்றும் அளவிற்கு இன்னும் எனக்கு ஆன்கீக தரிசனம் ஸித்திக்கவில்லை.