09 May 2011

அப்பா டக்கர்!

சார் சார் மொதொ பாரால அஜீதனுக்கு ட வரல ர தான்னு சொன்னீங்க சார்.

<இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.>

மூணாவது பாரால,

<‘அது என்னடா பறவை?’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்> http://www.jeyamohan.in/?p=14878

எப்பிடி சார் எப்பிடி? 

குருகு கொக்கு நாரை எல்லாம் இருக்கட்டும் சார். இங்க இங்க ஒரு கழுகு பாத்துகிட்டு இருக்குது.

பின்னாடி வர உரையாடல்ல,

‘அப்பா, சங்கப்பாட்டுகளை வாசிக்கணும்னா இயற்கையை கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அவங்கள்லாம் கற்பனையிலே எழுதி விடலை. எழுதினவங்க விவசாயி , கொல்லன் இந்தமாதிரி ஆளுங்க. அவங்க கண்ணு முன்னாடி பாத்ததைத்தான் எழுதினாங்க. பொதுவா பழங்குடிகள் எதையுமே நேரிலே பாத்து அதைத்தான் சொல்லுவாங்க. சங்க இலக்கியத்திலே உள்ள பாட்டெல்லாம் அப்டித்தான்னு தியோடர் பாஸ்கரன் சொல்றார். ஆனா பின்னாடி வந்த புலவர்களுக்கு ஒரு அனுபவமும் கெடையாது. அவங்க எழுதினதை வச்சு இவங்க இஷ்டத்துக்கு வெளையாடினாங்க. இப்ப பாதிபெபெருக்கு சங்கப்பாட்டையே புரிஞ்சுகிட முடியல்லை’’

பையன் ஏகப்பட்ட ட க்களை ர ஆக்காம டக்கரா பேசறானே! தோத்தது அப்பனா எழுத்தாளனா? 

தோற்றது தந்தை என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே!

பெத்த கொழந்தையாச்சே மழலை பேசினாலும் இனிதுதான். கிண்டலடிச்சி பதிவெழுத அது என்ன தொப்பியா? 

தோளுக்கு வளர்ந்தாலும் குழந்தை குழந்தைதான். வளர்ந்த பையனின் மழலையை ரசிப்பது, குறையை தந்தை ரசிக்க இயலுமா? இது நன்றாகப் புரிகிறது.

அதே சமயம், குண்டடிபட்ட ஒருவரின் ஊனமான குரலை எப்பிடி சார் கிண்டலடித்து ரசிக்க முடிந்தது? எதிர்ப்பு என்று வந்ததும், 

எங்க வாசக சீடைகளூக்காக பிரத்யேகமாய் பகடினு போட்டு எழுதினதைப் பெரிய பத்திரிகைக்காரன் கமர்சியலா யூஸ் பண்ணிகிட்டான் 

அய்யையோ கொல்றாங்களே கேக்க யாரும் இல்லையா?குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு உலக எழுத்தாளர்களே ஒன்று திரளுங்கள்னு ஊரைக்கூட்டி கருத்து சுதந்திரப்போரா கன்வர்ட் பண்ணி அறம் சீரிஸ் டிராமாவ எல்லாம் தூக்கி அடிச்சீங்களே சார். அதை எழுதற ஐடியா இல்லையா? எழுதினா அதுதான் சார் டாப் டக்கரா இருக்கும் சார்.