09 May 2011

தெய்வீக எழுத்து தவறாக முடியுமா?

உரைநடை இலக்கியம் தொடங்கி நாவல்கள் எழுதப்பட்டதுமே மீண்டும் மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம்.வி.வெங்கட் ராமின் ‘நித்யகன்னி’ புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்றவை உதாரணம். 
http://www.solputhithu.net/?cat=17&paged=6

தெய்வீக எழுத்து தவறாக முடியுமா? தவறிப்போய் தவறாக ஆனாலும் அடித்துத் திருத்தி எழுதுவது தெய்வகுத்தம் அல்லவா! தன்னை மறந்த பரவசத்தில் வெளியே வந்த வேதம், அதற்குத் திருத்தமா?

மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டதாக ஒரு கருத்தாக்கம் தோன்றி எழுத்திலும் பீறிட்டுவிட்டது. ஒற்றைக்கு ரெட்டையாய் எடுத்துக்காட்டு இருந்தால்தானே ஒரு கெத்து? இதிகாசத்தைப் இண்டர்ப்ரேட் செய்தது என்கிற விதத்தில் இரண்டாவது உதாரணம் பீறிட்டு வந்து விட்டது. தட்டச்சியபின் பார்த்தால் அது புதுமைப்பித்தனின் சாப விமோசனம். அடடா இராமாயணத்தைப் புரட்டி, பொதுப் புத்திக்கு சூடு போட்ட கதை அல்லவா? 

சூடு போடும் வேகத்தில் தவறிப்போய் தன் கையையும் சுட்டுக் கொண்டிருப்பார் புதுமைப்பித்தன் ( "அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக. "அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது.) http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_08.html


இராமாயண காலத்தில் கண்ணகி வெறியா? கால வழுவை சுட்டிக்காட்டியதற்கு பித்தனின் பதில்,

“எனக்குத் தோன்றியது எழுதினேன். கட்சிகட்ட நான் ஆளில்லை.” (மீ.ப. சோமு கடிதம் என்று நினைவு)

சாப விமோசனம் மகாபாரத மறு ஆக்கத்திற்கு சரியான உதாரணம் ஆகுமா?

இளைய மடாதியிடம் சரஸ்வதியாய்ப் பீறிட்டதைக் கேள்விகேட்க யாருக்குண்டு தகுதி? 

தானே, கேள்வியைக் காற்றிலே கேட்டார் பதிலினை அடைப்பிலே போட்டார். 

<[விரிவான நோக்கில் ராமாயணத்தையும் மகாபாரதத்தின் பகுதியாகக் கொள்வது மரபு]>

எப்படியும் ராமாவதாரத்திற்குப் பின்னாடிதானே கிருஷ்ணாவதாரம்! பழைய சுவிசேஷம் புதிய சுவிசேஷம் என்று இல்லையா?

கோழி கழுத்து கூட ஒரு பயன் கருதியே,குழம்பு வைக்கவோ கறிக்காகவோதான் திருகப்படுகிறது.

பொழுது போகாமல் உளறிக் கொட்டுவதும் அதைக் கிளறி மொழுகுவதும் முழு நேர இலக்கிய சேவை.

தான் ஆற்றிக் கொண்டிருக்கும் இலக்கியத் திருப்பணியிலேயே தெய்வமாகிக் கொண்டிருப்பதாய்க் கிறங்கி, விருது கொடுக்கும் தகுதியில் தான் இருப்பதாய் கர்வித்துக் கொள்ளும் ஒருவருக்கு புத்தி புகட்டுவது எப்படி? வேறெப்படி விருது கொடுத்துத்தான்!

பார்த்தவனிடம் எல்லாம் இந்த இலைக்குப் பாயசம் என்கிற ரீதியில் நோபல் பரிசை சிபாரிசு செய்யும் பரந்த மனம் கொண்ட சாரு கையால் ஜெமோவுக்கு நோபல் பரிசு ஒண்ணு பார்ஸேல்.