17 February 2012

டேய் அண்ணன் கைல என்னடா?

டேய் அண்ணன் கைல என்னடா?


விருதுண்ணே

என்னா விருதுடா?

இயல் விருதுண்ணே

டேய் விருதே ஜூன்லதான் குடுக்கப்போறாங்களாமா. அப்பறம் எழுத்தாளர் புடிச்சிருக்கறது என்னாடா?

விருதுண்ணே?

டேய் சைபீரியா தலையா! நான் உன்னை என்னான்னு கேட்டேன்?

எழுத்தாளர் கைலை என்னான்னு கேட்டீங்க.

நீ என்னான்னு சொன்னே

விருதுண்ணேன்

டேய் விருதை றொரன்றோவுல எப்படாக் குடுக்கப்போறாங்க?

ஜூன்லண்ணே!

அப்பத்தான் அதைக் குடுக்கப்போறாங்கன்னா,இப்ப கைல புடிச்சிருக்கறதுக்குப் பேரு என்னடா?

விருதுண்ணே!

டேய் ராசா எங்கண்ணுல்ல நல்லா பாத்து சொல்லுடா? கைல புடிச்சிருக்க்றது என்ண்ம்மா?

இயல் விருதுண்ணே!

டேய் மாஸ்கோ மண்டையா, அப்ப றொரன்றொவுல குடுக்கப்போறதுக்குப் பேரு என்னடா?

இயல் வ்ருதுண்ணே

டேய் ஒரே வாழ்நாள்ல ஒரே விருதை ஒரே ஆளுக்கு ரெண்டு தடவை எப்பிட்றா குடுக்க முடியும்?

போங்கண்ணே உங்குளுக்குதான் ஒண்ணுமே தெரியலை. 

எக்சூஸ் மீ எக்ஸ்ஸிப்பிளெய்ன் ப்ளீஸ்

இது இலக்கியத்துல வாழ்நாள் சாதனை செஞ்சதுக்கான விருது வாங்கின சாதனைக்கான பாராட்டுவிழா விருதுண்ணே.

அப்ப ஜூன்ல குடுக்கப்போற அது என்னாடா?

ரஜினி கையால விருது வாங்கின சாதனையைப் பாராட்டிக் குடுக்கப்போற இலக்கிய விருதுண்ணே

அய்யோ இந்த குலோபோஸ்கி மண்டையன் ஓவராக் கொழப்பறானே. டேய் அதுக்காக இதுவா இல்லே இதுக்காக அதுவா?

விருது வாங்கறதுதாண்ணே முக்கியம். இதுலப்போயி ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது. 

டேய் விருதுன்னா என்னடா?

யாராச்சியும் யார் கைலேந்தாச்சியும் எதுக்காகவாச்சியும் வாங்கறதுண்ணே 

எங்கடா போறே?

விருது வாங்கண்ணே

என்னா விருதுடா? 

விருதே வாங்கினதே இல்லைங்கற வாழ்நாள் சாதனை செஞ்சதுக்காகக் குடுக்க்ற விருதுண்ணே.

அப்பிடியா கொஞ்சம் திரும்பி நில்லு.

சரிண்ணே 

டேய் நிக்கச்சொன்னா நீ பாட்டுக்கும் போய்கிட்டே இருக்கே

லேட்டாயிட்டா கும்பல் ஜாஸ்தியாயிடும்ணே

ஏய் அங்கின்னா பேல் பூரி பாணி பூரியா குடுக்கறாங்க. விருதுதானடா?

உங்குளுக்குக் கெடைக்கிலேன்னு வயித்தெரிச்சல்ண்ணே

அடங்... என்னாது?

கவலப்படாதீங்கண்ணே சிறந்த வயித்தெரிச்சல் விருதுன்னு ஒண்ணை ரெடி பண்ணிடச் சொல்றேண்ணே.