24 February 2012

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்


23 ஜூலைல ஒரே அடிதடி, ரகளை எழுதறத்துக்கு முன்னால யானையா காட்டிகிட்டு எப்பிடி இருந்த நான்... இப்ப இப்படி கொசுக்களையெல்லாம்  மோந்து பாக்க வேண்டியதா ஆயிடுச்சே!

தெரியாத்தனமா சும்மாக் கெடந்த ஒரு கொசுவ நோண்டப்போய் குண்டில வந்த கொப்புளத்துக்கு பிளாட்பாரம் பிளாட்பாரமா எந்தக் களிம்பு கெடைச்சாலும் பரவாயில்லேன்னு அலைஞ்சி திரியிறாப்புல என் நெலமை ஆயிடுச்சே!

அம்மா! இறைவி! என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி! எப்பிடியாச்சும் இதுலேந்து என்னையக் காப்பாத்தும்மா!

அடேய் மூடப்பதரே! நீ துணைக்கு அழைத்து, காப்பி பேஸ்ட் பண்ணியிருப்பது, நடமாடும் பகுத்தறிவாய்த் தன்னைக் காட்டிக்கொண்டு என்னை தூஷிப்பவன் என்பதாவது உன் மரமண்டைக்குப் புரிகிறதா?

அம்மா நானெல்லாம் சார்த்தரையே ஜெரிச்சி ஏப்பம் விட்டவன் எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா?இணையத்துல ரெகுலராக ஆட்டோ ஓட்டிங்களான இவுங்குளுக்கு இதெல்லாம் சல்பேட்டாவ ஸ்ட்ராவெச்சி ஸ்டைலா உறிஞ்சுறாப்புல சகஜம் அம்மா! கோவிச்சுக்காத தாயே! எதுனா பாத்துப் போட்டு என்னைக் காப்பாத்தம்மா!

ஏனடா இப்படிப் பிச்சைக்காரனைப்போல் அலப்பறை செய்கிறாய்?எழுத்தாளனாய் கொஞ்சம் கெளரவமாய்க் கேட்கக்கூடவா உனக்குத் துப்பில்லை?

துப்பெல்லாம் இருந்துதும்மா. குமாஸ்தாவா இருந்துகிட்டு கம்பு சுத்தின காலமம்மா அது. இப்போ சகவாச தோஷம். தலையில தகர டப்பாவைக் கவுத்துத் தாண்ட்றா ராமான்னு பிச்சைக்காரனைத்தான் என் பெல்ட்டுலையே கட்டிகிட்டுத் திரியிறனே! அடுத்து எம்கேடி பாகவதர் கட்டுரையவேற ஸ்கேன் காப்பி கெடைக்குமான்னு கேட்டுருக்கான் முதுகை எப்பிடி உரிக்கப்போறானோ தெரியலியே!

பிகைபி மூலமாய் ஏற்கெனவே செய்தி கொடுத்தேன் நீ செவிமடுத்தால்தானே!

சாட்ல மெசேஜ் ஒண்ணியும் வரலியே அப்ம்மா! தள்ளாத வயசா, கண்ணுவேற சரியாத் தெரியில. பெரிய மனசு பண்ணி, மெசேஜக் கொஞ்சம் போல்டா ரிப்பீட் பண்ணு பகவதி!

மூடிக்கொண்டு சும்மா இரு!