07 February 2012

ரஜினிக்கு சாரு வகுப்பெடுத்தால் சாருவுக்கு வாசகர் சுளுக்கெடுக்கிறார்


ரஜினிக்கு அறிவுரை கூறும் சாருவுக்கு, எவனையாவது அடிக்க வேண்டும் என்பதற்காகக்கூட ’அடித்து’ விடுவதை எப்போதுதான் விடப்போகிறார்களோ நம் எழுத்தாளர்கள் என்று வாசகரிடமிருந்து வருத்தமொன்று வந்திருக்கிறது. ஊரறிய அதை சாருவுக்கு அனுப்பி வைப்பது நம் தலையாய கடமையல்லவா?
***

***@gmail.com
5:18 PM (2 hours ago)
to me

Dear sir,

This mail is not to provoke you i am only sharing my anguish with you. In Charu's recent post திரு ரஜினிகாந்த்திடம் சில கேள்விகள்… (2) he is writing 

"நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும். உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது. பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது."

While he is trying to educate Rajini about international literary awards, he himself is missing the simple fact that Man booker prize is awarded to "Any full-length novel, written by a citizen of the Commonwealth or the Republic of Ireland and published in the United Kingdom for the first time in the year of the prize. The novel must be an original work in English (not a translation) and must not be self-published."(copied from the FAQ's in (http://www.themanbookerprize.com/prize/about/faqs)

When are our writers going to shun factual errors.

Sir, if you want you can reproduce my mail without revealing my identity

Yours,

***
டவுன்லோட் செய்து, அரைகுறையாய் வாசித்து தன்னுடைய சொந்த அனுபவம்போல எழுதுவதுதான் தவறு. எழுதும் முன், எதைப்பற்றிய அறிவும் இலவசமாய் கிடைக்கும் இணையத்தை ஒருமுறை தேடி, எழுதப்போவதை சரிபார்த்துக்கொண்டு உளறலைக் கொஞ்சமேனும் குறைத்துக்கோள்வதில் என்ன தவறு? 

அந்த சினிமாவில் நடித்த நடிகையின் பெயரென்ன?அதைத் தவறாக சொல்லிவிடக்கூடாதே என்று,தன் அடிப்பொடியிடம் தொலைபேசித் தெரிந்துகொள்ளுவதில் காட்டும் முனைப்பில் கொஞ்சத்தையேனும் இலக்கியம் தொடர்பான தகவலைப்பற்றி அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு புக்கர் பரிசுத்தேர்வு எப்படி நடக்கிறது என்று டுடோரியல் வகுப்பெடுக்கையில் காட்டினால் குறைந்தா போய்விடும்? 

சொம்புகளை உருவாக்கிப் பெருக்கிக்கொள்வதிலேயே முழு கவனத்தையும் குவித்திருக்கும் இணைய எழுத்தாளர்களே காலம் முன்புபோல் இல்லை. கும்பலில் இருந்து தள்ளி நிற்கும் வாசகன் விழிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்படியான தீவிர வாசகனே இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி அமரத்துவத்தை ஏற்படுத்துபவன், விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல.