27 February 2012

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 1


<சொத்தையெல்லாம் இழந்து கண்பார்வையும் பறிபோய் அவர் ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்தபோது ‘யாரோ குருட்டுப் பிச்சைக்காரன்’ என்று அவர் மடியில் காசு போட்ட சம்பவம் பற்றி அந்த நூலில் எழுதி இருப்பேன்.>

எந்தப் பக்கத்தில் இந்த சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது?

கட்டுரையை ஓட்டிப் பார்த்ததுவரை, எம்.கே.தியாகராஜ பாகவதரின் அந்திமகாலம் பற்றி, நூலில் இருப்பது என்னவோ இவ்வளவுதான்.



ஒருவேளை எம்.கே.டியைப் பிச்சைக்காரனாக நினைத்த சம்பவத்தைப் பற்றி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா கட்டுரைகள் எதிலாவது எழுயிருக்கலாமோ என்னவோ?

சம்பவத்தை எழுதியதாக செய்துகொண்ட கற்பனைக்கே இவ்வளவு பீற்றலா?தொடர்ந்து இப்படியான ஆவியெழுப்பும் ஆவேசப்பீற்றலாய் பீய்ச்சிக்கோண்டே இருந்தால் ஜெய்பூர் இலக்கியவிழா என்ன அய்யோவா அய்யோவா என  அயோவா பல்கலைக்கழகம் கூட பரிதாபப்பட்டு அழைத்துக்கொள்ளும். 

இப்படி, எழுதாத சம்பவத்தை எழுதியதாக நினைத்துக்கொள்ளும் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்திருக்க சாத்தியம்? இப்போதைய தீராக்காதலி பிச்சைக்காரன் என்பது ஊரறிந்த விஷயம்தானே. அந்த மோக முக்குளிப்பில் பாவம் எம்.கே.டியும் பிச்சைக்காரனாகிவிட்டார் போலும். 

எல்லோரையும்போல் 59 நெருங்குவதால் நினைவு பிறழ்ந்திருக்கலாம். என்னதான் அவதார புருஷர் என்றாலும் அல்டிமேட்டுக்கும் தூங்கி எழும்போது எழுத்தாள அரிதாரம் இல்லைதானே. - அர்க் குடிக்கிறாரோ இல்லையோ சொந்த கோமியத்தை தினந்தோறும் இறக்கியாக வேண்டிய தேசியக் கடமைக்கு உட்பட்ட அற்ப மனித ஜென்மம்தானே ஆகவே மறதி பெரிய தவறில்லை. நம் உயரம் என்ன என்பதை எல்லோருமே நினைவில் நிறுத்தி மீதி நாளை ஓட்டுவது நல்லது. இந்த எளிய உண்மை HMVக்களுக்கு புரிபட்டால் சரி.

அமீபியாசிஸ் பீடிக்கப்பட்ட ரெக்டமாக, போட்டது என்னவோ எலிப்புளுக்கை போல இக்கினியூண்டு. ஆனால். தான் எழுதியதை ஒப்பிட்டுக்கொள்வதென்னவோ ஷேஸ்பியரின் கிங்லியரோடு. 

போகும் வழியெல்லாம் வெற்றுப் பெயர்களாய் உதிர்த்துக்கொண்டு போவதற்குப் பெயர் அறிமுகப்படுத்தலாம். அப்பா நீ படித்திருக்கிறாய்தான் இல்லை என்று சொல்லவில்லை. புரிந்து கொண்டதைக் கொஞ்சம் சொல்லப்பா நாங்களும் தெரிந்துகொள்கிறோம். பேர்கொத்தப் பெயர்கள் என்ன சொல்லி இருக்கின்றன, எப்படி எழுதி இருக்கின்றன என்று, விரித்து எழுதப்போனால், தப்பும்தவறுமாய் அல்லது நேர் தலைகீழாய்ப் புரிந்துகொண்டிருக்கும் லட்சணம் அம்பலப்பட்டுவிடாதோ ஆகவேதான் டெலிஃபோன் டைரக்டரி பெயர்ப் பட்டியல் கையளிப்பு.  பெயர் உதிர்ப்புக்கே துப்பட்டா நழுவலில் ரொங்கிப்போய் வட்டத்துப் புட்டஸ்தர்களுக்கு சொப்பன ஸ்கலிதம்.

இதையெல்லாம் எடுத்துச்சொன்னால், எங்காளுது . எவ்ளோ பெரிசு என்கிற ஊளையிடல். பெரிதாய் இருக்கிறது பொதபொதவென நிறையவும் இருக்கிறது என்பதற்காக யானை லத்தியை பத்மநாப சுவாமிக்குப் படைக்க முடியுமோ?

<அழுது அழுது உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன்.>

எதற்காக அழுது அழுது உருகி உயிரையே கரைத்தது? மேற்கண்ட இரண்டு வரிகளை வழித்துப் போட்டு வைத்ததைத் தவிர வேறு என்ன இழவு அங்கே இருக்கிறது?

சரி சுயதம்பட்டமாவது இணையத்தில் எழுத்தாளர்களின் கூடப்பிறந்த வியாதி. ஒழிந்து போகட்டும். எம்.கே.டியின் இறுதிக்காலம் பற்றி கட்டுரை எழுதி ஆறுவருடம் கழித்து இப்போது 2011ல் எழுதியதில் அற்பசொற்பமாவது உண்மை இருக்கிறதா?

The fall of M K T has since been highly exaggerated. People are wont to talk about his last days as one of utter destitution and poverty. Unsubstantiated accounts about his hardships and privations abound. His life has often been portrayed as a rags to riches and back to rags story. To make the contrast between his success and failure sound more pronounced and sensational, concocted stories have been spread and sweeping and insensate remarks made. And there has always been a gullible audience for it. But in his last days, his financial position and status were clearly not as bad. He fell into bad times but never came close to penury. There was a meltdown in his fortunes but not total destruction. Neither did he walk on bare foot for want of money to buy footwear nor did he travel by bus. He had his own cars, both the Pontiac and Vauxhall, until his death, although the other cars were sold. The Trichy bungalow was his own until his last breath. It was only sold in later years. Yet on a final reckoning his life is a tragedy. There is a brooding sense of incompleteness. Somewhere along the line, a terrible accident happened and destroyed great beauty. 

இதை யார் எழுதினார்கள் இதற்குப் பின்னால் உள்ள உழைப்பு எவ்வளவு மகத்தானது. ஃபோர்டு டாடாக்களிடம் லட்சங்களைப் பொட்டலமாய் வாங்கி சேவை பிலிம் காட்டி இம்புட்டுகாணப் பிழிந்துவிட்டு மீதியை சுக்கு காப்பணம் சுமைகூலி முக்காப்பணம் என்று கணக்கெழுதி சுருட்டாமல் ஆராய்ச்சியும் ஆவணப்படுத்துதலும் எவ்வளவு ஆத்மார்த்தமாய் நடந்துள்ளன, எந்த பதிப்பகத்தின் ஆதரவோ துணையோயின்றி கைக்காசில் நடந்துள்ள அதிசயத்தை அடுத்துப்பார்க்கலாம்.

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 2

பி.கு: தீராக்காதலி Pdf  கொடுத்து உதவியவர் Gopi R