22 February 2012

கைவீசம்மா கைவீசு

National Folklore Support Centre இவாள அழுத்தினா
- Nari Kurava Archives இவா வருவா, இவாள அழுத்தினா
Digital Community Archive in Tamil Nadu இவா வருவா, இதுல 
Narikuravar Children's Games இவாள அழுத்தினா ஸ்லைட் ஷோ படம் காட்டுவா

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்களை ஆவணப்படுத்துமுகமாய் 
இப்படித்தொடங்கும் ஸ்லைட் ஷோ,
ஆவணப்படுத்தி இப்படி முடிகிறது.

இது போன்ற நல்ல காரியங்களுக்கும் அரிய ஆய்வுகளுக்கும் டாடா நிறுவன்ம் நிதி வழங்கி உதவியிருப்பது சிறந்த விஷயம் என்கிற எண்ணத்த்தால் டாடா பற்றிய நன்மதிப்பு பலமடங்கு உயருகிறது..  இம்மாதிரியான தொண்டுகளுக்கு நம்மாலான பங்களிப்பாய் டாடா நிறுவனத்தின் பொருட்களையே வாங்கவேண்டும் என்று நம் மனம் நெகிழவும்கூடும். விளம்பரங்களால் விற்கப்படும் பொருள் பற்றிக் கூவ மட்டுமே முடியும். பயன்பாடு காரணமாக மட்டுமே பொருளின் விற்பனை கூடும். நன்மதிப்பு என்பதை யாரிடமும் விற்கவும் முடியாது அல்லது அடுத்தவரை வாங்க வைக்கவும் முடியாது. பாவப்பட்டவர்களுக்கு அக்கறையுடன் கூடிய செயல்பாட்டைத் தாம் செய்வதாய் வெளிப்படையாய் சொல்லாமல் நாசூக்காய் உண்ர்த்தக்கூடியவஅரே நமது நெகிழ்வுடன் கலந்த நன்மதிப்புக்கு உரியவராகிறார். இந்த நன்மதிப்பு நீண்டகாலம் நீடித்து நிற்கவல்லது. இதன் உள்ளார்ந்த அம்சம் நன்மதிப்பிற்கு ஆட்படும் மனிதரை ஆராதிப்பதன்மூலம்  நல்ல காரியத்தின் பக்கம் நிற்பதாய் பாவனை செய்துகொண்டு குற்றவுணர்விலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதுதான்.வும்

இது போன்ற நற்காரியங்களைச் செய்த புண்ணியம் நம்மிடமும் கொசுறாய் ஒட்டிக்கொண்டு, எவரோடும் ஒட்டி உரச வேண்டிய அவசியமற்று உதட்டளவு நன்மையிலேயெ குற்றவுணர்வைக் குறைத்து ஆசுவாசப்படுத்தும். நல்ல விஷயத்தின் பக்கம் நிற்பதாய்க் காட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதென்ன அவ்வள்வு சுலபமா?

வருங்கால வரலாற்றுகாக,அற்றைக்காலத்தில் நரிக்குறவர் இனத்துக் குழந்தைகள் என்னென்ன விளையாட்டுக்களை எப்படியெப்படி விளையாடினார்கள் என்பது இற்றைக்காலத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஸ்லைட் ஷோவை, தமிழின் தனிப்பெரும் பின் நவீனத்துவ இலக்கியவாதியும் விளிம்புநிலை மற்றும் தொலைந்துகொண்டிருக்கும் கலாச்சாரங்களைக் கட்டிக் காப்பாறுவதற்காகவென்றே, தம் ஆயுளை அர்பணிப்புடன் தீவிர ஆராய்ச்சியில் கரைத்துக்கொண்டிருப்பவருமான எம்.டி.முத்துக்குமாரசுவாமியை இயக்குனராகக் கொண்ட நிறுவன்ம் தயாரித்து உள்ளது.

இதற்காகவும் இதுபோன்ற இன்னபிற தொண்டுகளுக்காகவும் டாடா நிறுவனம் 53,53,000/- ரூபாயை 2010ல் அளித்துள்ளது.

NATIONAL FOLKLORE SUPPORT CENTRE எனும் எ,.டி.எம் அவர்களின் நிறுவனம், நரிக்குறவர்களுக்காக ஆற்றும் பல்வேறு தொண்டுகளில் இந்த ஆவணப்படுத்துதலும் ஒன்று. என்னென்ன விளையாட்டுகளை நரிக்குறவர் குழந்தைகள் எப்படியெப்படி விளையாடுகிறார்கள் அதற்கான செய்முறை விளக்கங்கள் மற்றும் அவர்கள் விளையாடும் போது அல்லது விளையாடுவது போல போஸ் கொடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் விவரமாக டாடாவின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.

நிறைவாக சிறப்புடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பில் குறை என்று எதையேனும் தேடிக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டியே ஆகவேண்டும் என்று நிர்பந்தித்தால், இவற்றில் எந்த விளையாட்டு நரிக்குறவர்களின் பிரத்தியேகக் கலாச்சாரத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனக் கேட்கலாம்.

எளிஉயர் ஆங்கிலத்தில் விளக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படுத்தலில் அனைவரின் குழந்தைப் பருவத்திலும் எவருக்குமே தெரியாமல் எப்படி அனைவருமே நரிக்குறவர்களாக இருந்து இந்த விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம் என்ற கேள்வி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மெத்தப்படித்தவர்களின் வழிகாட்டலில் சுமாராய் படித்த யுவ யுவதிகள் ஐந்து நாட்கள் நரிகுறவர்களோடு நரிக்குறவர்களாய் வாழ்ந்து ஆவணப்படுத்தி நரிக்குறவர் இனத்திற்கு நல்ல தொண்டு ஆற்றியுள்ளதைக் கண்டு நெஞ்சு விம்மவில்லை எனில் அது இருப்பதற்கான கூடு இருந்துதான் என்ன பயன்?

செல்ஃபோனும் எஃபெம் ரேடியோவுமாகத் திரிந்தபடி மைய நீரோட்டத்திலிருந்து அந்நியப்பட்டு, மாநகரத்தின் வசதியான பகுதியின் நடைபாதையில் கடைபரப்பி, விலையுயர்ந்த கார்களில் வரும் நாரீமணிகளை பிளாட்பாரத்தில் குந்தவைத்து கறாராய் வியாபாரம் செய்யும் நரிக்குறவர் பெண்மணி, வியாபார நிமித்தமாகவே தன் பாரம்பரிய பிம்பத்தை, நடையுடை பாவனைகளை மாற்றாதிருக்கக்கூடுமோ என்கிற எண்ணம் எவருக்கேனும் தோன்றுமானால் அவர் மேட்டுகுடி ஜாதீய மனப்பாண்மை உடையவர்ராகவே இருப்பார் என்பதில் ஐயமென்ன?

புறநகர் மின்வண்டியின் இரண்டாம் வகுப்புப் பெண்கள் பெட்டியின் நெரிசலுக்கிடையிலும் தங்கத்தைவிடவும் வண்ன அலங்கார மணிகளில் ஆர்வம் காட்டும் தகவல் தொடர்பு இளைஞிகளுக்கு விற்பதற்காய் வேண்டி, பகல் வேளைகளில் எந்த நிறுத்தத்தின் நடைமேடையிலும் மணிகளைக் கோர்த்தபடி மும்முறமாய் காணக்கிடைக்கும் நரிக்குறவர் பெண்களை சமூகம் விலக்கி வைத்துள்ளது என்று எப்படி சொல்ல முடியும் என்று எவருக்கேனும் கேள்வி எழுந்தால் அது விஷமத்தனத்தின் வெளிபாடுதான் அல்லவா?

ஒரு இனத்தை இதுதான் அதன் கலாச்சாரம் இதுதான் அதன் பாரம்பரிய விளையாட்டு என்று இப்படி ஆவணப்படுத்த 53,53,000/- கொடுத்த டாடா நிறுவணம் நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதான். 

கடும் இன்னல்களுக்கு உட்பட்டு சமூகத் தொண்டு ஆற்றிவரும் எம்.டி.எம் என்கிற NATIONAL FOLKLORE SUPPORT CENTREஇன் எம்.டியாக இருப்பவரும் சதாசர்வகாலமும் ஒடுக்கப்பட்ட விளிம்பூநிலை மனிதர்கள் பற்றிய சிந்தனையிலேயே வாழ்பவருமான எம்.டி.முத்துக்குமாரசாமி என்றென்றும் நம் பாராட்டுக்குரியவராவார்.

தமிழ் சமூகத்தின் பெரும்பாண்மையிடமிருந்து இந்த விளையாட்டுகளை நரிக்குறவர் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக வெவ்வேறு நகரங்களில் இருந்து வடநாட்டைச் சேர்ந்த திலீப் குமார் ஷ்ரேயா சிங் சஞ்சீவ் ஷர்மா ஷஃபில் ஷர்மா நிர்மலா ஷ்ரெதர் சுநந்தா கெளர் ப்ரீதம் பெரா ஆகிய இளைஞர்கள் விழுப்புரத்தில் இருக்கும் ஆஷாகுளத்திற்கு வந்து தங்கி ஐந்து நாட்கள் டாடாவிற்காக அர்ப்பணித்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்பு.

ஸ்லைட் ஷோவின் படி நரிக்குறவர் குழந்தைகளின் விளையாட்டென ஆவணப்படுத்தப்பட்டுள்ள சில விளையாட்டுகளின் பட்டியல்,
கபடி
பாண்டி
பச்சைக்குதிரை
கோலி விளையாட்டு
ஆடுபுலி ஆட்டம்
கோகோ
தட்டாமாலை
இவைபோக இன்னமும் என்னென்னவென்று பார்க்க கீழிருக்கும் சுட்டியை அழுத்தி கண்டுகளித்து வியக்கலாம்.

எதையும் பழித்துரைக்கும் வீணர்கள் இவ்வரிய தொண்டினையும் “நரிக்குறவர்கள் பாசிமணி ஊசிமணி விற்கிறார்கள். இவ்வறிய ஆராய்ச்சியாளர்கள் நரிக்குறவர்களை விற்கிறார்கள்” என்று எளிநகையாடக்கூடும். ”நரிக்குறவர்கள் என்றும் நரிக்குறவர்களாகவே இருந்துகொண்டு இருப்பதுதான் புத்தியைப் பயன்படுத்தி ஜீவிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாயம்” என்றெல்லாம் பழித்துரைக்கக்கூடும். இதையெல்லாம் உறைத்ததைப்போல் எதிர்வினை செய்துகொண்டு இருப்பதைவிட அந்த நேரத்தில் இன்னும் இரண்டு விளிம்புநிலை மக்களை இப்படி ஆவணப்படுத்தி உய்த்து சமூகத்திற்குத் தொண்டாற்றலாம். 

நரிக்குறவர்கள் பற்றிய அறிமுகப்படத்திற்கான ஆங்கில முன்னுரை.

An Introductory documentary film on Narikuravar

Being a nomadic community, the Narikuruvas face extreme discrimination in society. They are labeled thieves and plunderers and are often not allowed to stay within villages and town or sell their wares. Being extremely disjointed as a community have further weakened their voices against oppression. Their culture, a very live and constantly changing one, lacks any kind of documentation as does Vagri boli, their language which still exists as a creole. The need to integrate the community too is of utmost importance. And so is the need to educate the common populace about the Narikuravas and their culture and tradition. These are some of the issues that are addressed in this documentary.

நரிக்குறவர் என்பவர்கள் யாரென்றே அறியாத தமிழகளுக்கு வடநாட்டவர்கள் மூலம் ஆவணப்படுத்தி அறிமுகப்படுத்தி இருக்கும் எம்டிஎம் நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்.

NFSC has been consistently continuing its core activity of documenting and building the community's cultural resources. This documentary film on the Narikuravas titled “Narikuravar” was produced by National Folklore Support Center in 2009 as part of the project of Narikuravar Digital Community Archive funded by TATA Educational Trust. The cinematography and editing for the film is done by S.Rajasekhar based on the script by Rayson K. Alex.

இப்படியாக நரிக்குறவர்களின் கலாச்சார மூலங்கள் தீவிர ஆராய்ச்சியின் விளைவாய் அகழ்ந்தெடுக்கப்பட்டு மென்பொருள் சேகரமாய் வரலாற்றில் பதியப்பட்டிருப்பது முக்கியமான வரலாற்று நிகழ்ச்சியாகும்.

Documentary Film "Narikuruvar

நரிக்குறவர்களுக்கு இதெல்லாம் புரிகிறதா இல்லையா என்பதைவிட கல்வி ஆய்வு நடத்த காசு கொடுத்த டாடாவுக்கு ஆங்கிலத்தில் தெரியப்படுத்திப் புரிய வைப்பதுதான் அத்தியாவசியமான காரியம்.

சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட நரிக்குறவர் இனத்தை உய்விப்பதற்காகவே உலகம் முழுக்க விமானத்தில் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமியின் அர்ப்பணிப்பு டாடாவுக்குத்தெரியவும் அடுத்த ஆண்டுக்கான நிதியளிப்பு கூடுதலாகக் கிடைக்கவும் இன்னமும் நிறைய ஆவணங்களைப் படுத்தி அவர் சுபிட்சமாக இருக்கவும் நமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

Sir Dorabji Tata Trust and the Allied Trusts Annual Report 2009 - 2010ன்படி  NATIONAL FOLKLORE SUPPORT CENTRE போன்ற சமூக தொண்டு நிறுவனங்களுக்கு அளித்திருக்கும் பணம் எவ்வளவு என்று தெரியவேண்டுமானால் http://dorabjitatatrust.org/about/pdf/09-10/Annual_Report_2009-2010.pdf  அழுத்தி கர்சரை கடைசிக்குக் கொண்டு செல்லவும்.

கைவீசம்மா கைவீசு 
கடைக்குப் போகலாம் கைவீசு 
மிட்டாய் வாங்கலாம் கைவீசு 
மெதுவாய் திங்கலாம் கைவீசு.