17 February 2012

சாரு பிழிந்த சாறு


<சரி, புத்தகம்தான் விற்கவில்லை. அதற்கு ஏதாவது மதிப்புரையாவது வந்ததா என்றால் அதுவும் இல்லை. இப்போது ரஜினியைக் கொண்டாடும் அளவை விட மிகப் பெரிய அளவில் தமிழ்நாடே கொண்டாடிய எம்.கே.டி.யைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அந்தமான் சிறைக்குச் சென்று திரும்பி, சொத்தையெல்லாம் இழந்து, கண் பார்வையும் பறிபோய் அவர் ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்த போது ‘யாரோ குருட்டுப் பிச்சைக்காரன்’ என்று அவர் மடியில் காசு போட்ட சம்பவம் பற்றி அந்த நூலில் எழுதியிருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இங்கே தமிழக வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் அது. அழுது அழுது, உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன். ஒரு காலத்தில் தமிழக மக்களின் கடவுளாக இருந்தவர் எம்.கே.டி. அப்படிப்பட்டவருக்கு அந்த நிலை! >

இது பற்றி ராண்டார் கை என்ன சொல்கிறார்?

Lakshmikanthan's Background

Film historian and author Randor Guy writes that Lakshmikanthan had a dark past with a criminal record. As a young man, Lakshmikanthan desired to become a lawyer but could not afford it as his family was not well-off. However, Lakshmikanthan, with his sufficient knowledge of law, managed to establish himself as a "tout". A tout was someone who brought a case to a lawyer for money, but at times, even forged documents or signatures for a particular sum. Lakshmikanthan was successful for sometime, but was eventually caught and convicted for forgery. Lakshmikanthan tried to escape but was captured and imprisoned on a 7-year term at Rajahmundry jail. He tried to escape once again, but was caught and deported to the Andamans. Lakshmikanthan was eventually released when the islands came under Japanese occupation during the Second World War. He returned to India and established himself as a journalist.[2]

கொலை செய்யப்பட்ட லக்ஷ்மிகாந்தன், தமது குற்றங்களுக்காக  அந்தமானுக்கு அனுப்பட்டார் என்று படித்திருக்கிறார் ஆராய்ச்சியாளர். ஆனால் பலகால ஆராய்ச்சியின் முடிவில், லக்ஷ்மிகாந்தனைக் கொலை செய்ததாய்க் குற்றம் சட்டப்பட்டு தியாகராஜ பாகவதர் அந்தமான் சிறைக்கு சென்று திரும்பியதாய் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியிருக்கிறாராம். 

இப்பேர்ப்பட்ட ஆராய்ச்சியை செய்ய அவர் எவ்வளவு தியாகங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது பாருங்கள். இன்றைக்கு ஆறுவருடம் முன்பே 150 ரூபாய் செலவழித்து ஆட்டோ பிடித்து ரோஜா முத்தையா நூலகத்துக்கருகில் உணவகமின்றி பட்டிணி கிடந்து அட அட அடா பாவன்னா வரிசை சிவாஜி படங்கள் போல தமிழ் எழுத்தாளனைச் சுற்றித்தான் எவ்வளவு துயரங்கள்?

தமிழில் படித்ததே இந்த லட்சணத்தில்தான் உல்டாவாய் புரிகிறது எனில், ஃப்ரெஞ்சு ஸ்பானிஷ் அரபியெல்லாம் எப்படிப் புரிந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்துப் புன்முறுவல் கொள்ளாதீர்கள். எழுத்தாள சாபம் லேசானதில்லை. 

ஆணியே புடுங்காமல் அமைதியாய் இருந்தாலே போதாதா?

படிக்கையிலேயே இதெப்படி சாத்தியம்? அது அப்படி நிகழ சாத்தியமுண்டா? என்று சிந்தனையலையடிப்புடன் படிப்பவனுக்குப் பெயர் வாசகன். எந்தக் கேள்வியும் எழும்பாமல் பளிச்சென்று அட்டைபோட்டுக் கொடுத்தால்போதும் எதைப்போட்டாலும் தின்னத்தயார் என்று ரசிகர்களாய் இருப்பதிலேயே முக்தியைக் காணும் மூட கும்பல் இருக்கும்போது எழுத்தாளர்களுக்கு என்ன கவலை? வெந்ததோ வேகாததோ எதைவேண்டுமானாலும் எழுதிக்கழித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாமில்லையா?

இப்பேர்க்கொத்த ஆராய்ச்சிசெய்து, சீதைக்கு ராமன் சித்தப்பா என்று எழுதப்பட்ட காவியபுத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்கவில்லை என்பது ஒன்றுதான் குறை.