29 February 2012

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 2 - ’பாபா கொடுத்த பார்வை’ கடிதம்

R @ j e s h ***@gmail.com                                                                        10:32 AM (2 hours ago)
to me 
Dear Mamallan,
I have read a book entitled 'Swami' written by Ra.Ganapathi (who passed away last week), who authored the colossal 'Dheivathin Kural' - 7 volumes. Swami gives a vivid account of the life of Saibaba. In that book, there is a mention about Saibaba meeting MKT, and MKT getting his eyesight back, for a short while. I was in touch with a few very old, staunch sai devotees at that time, and I got this news from them as well ( They have not read the book). But I don't know the authenticity of the incident, as the eye witness of the meeting, MKT's daughter has clearly given the details. 
But, is that the only meeting they had? Coz, in Swami, Ra. Ganapathy says that, MKT pleaded baba that he can't withstand the pain of the diseases, and Baba replied 'I'll give you a new body'. In Swami, there is no mention of the rings Baba gave and the subsequent incidents. It was then, Ra. Ganapathy says, that Baba blessed MKT with eyesight for a while. 
I read Swami first, before ten years. And then I spoke with the old devotees. Both incidents correlate. Hence, I personally think there is a probability that the incident has happened. 
I personally believe that Ra.Ganapathy was a man of his words, as he had written numerous books, about the Kanchi sage, Ramanar and Baba, and in all those books, he, so far up to my knowledge, has not meddled up with the facts. He still is considered as an authentic writer. But again, it depends on the reader to decide. 

PS:- 1. Of course, the incident loses it's authenticity, if the point of Saibaba - a fraud' comes in to picture. It depends on individuals to take it up, as they conceive. I read ur post today, and since the 'Swami' reference came to my mind, wanted to write to u. 
2. Swami is of 2 volumes. The referred incident occurs in the first volume. I forgot the chapter, though. The book is in English too, with the name 'Baba: Satya Sai'.
-- 
Affly,
Rajesh .

’தெய்வத்தின் குரல்’ என்று சொல்லிவிட்டபின் ஆராய்ச்சி செய்வது அநியாயம். ஆனால் வேறு வழியில்லை. தெய்வத்தின் குரலை ஆதாரமாய்க் காட்டி, சாரு சார் எழுதியதுபோல் பாபா சார் பாகவதர் சாருக்குப் பார்வையைக் கொஞ்ச நேரத்திற்கேனும் வரவழைத்தார் என்பது ஆதாரபூர்வமானதுதான் என்று நிறுவ வருகிறீர்கள். 

இதுவரை ஜெயமோக கோஷ்டிகளைத்தான் கெளபீனதாரிகளாய் சப்ளாகட்டியுடன் கற்பனை செய்துகொள்வது ’அற்புதக் காட்சியொன்று கண்டேன்’ போல ரம்மியமாய் இருந்தது. 

சாட் புரட்டிப்போட்டதில் இப்போது சாரு கோஷ்டியும் தெய்வத்தின் குரல்வளையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.

சரி. பாதகமில்லை. கோதாவில இறங்கலாம்.

பாகவதர் - பாபா சந்திப்பு இருமுறை நிகழ்ந்துள்ளது என்று பாகவதரின் மகள் சொல்வதையும் மீறி இன்னும் சில முறை நடந்திருக்கலாம் என்று நீங்கள் நினைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?வெறும் ஹேஷ்யமாய் விட்டுவிட்டீர்கள்.

இரண்டு சந்திப்பிலும் பாகவதர் கூட இருந்தவர் அவரது மகள். உண்மையிலேயே பாகவதருக்குப் பார்வை கிடைத்திருந்தால், முதலில் மகிழப்போகிறவரும் அவரது மகளாகத்தான் இருப்பார். 

<I was in touch with a few very old, staunch sai devotees at that time, and I got this news from them as well ( They have not read the book). But I don't know the authenticity of the incident, as the eye witness of the meeting, MKT's daughter has clearly given the details. >

என்று நீங்களே விளக்கமும் அளித்தபின் விவாதத்திற்கான முகாந்திரம் எங்கே? 

ஆனால் அடுத்த சில வரிகளிலேயே நீங்கள்,

I spoke with the old devotees. Both incidents correlate. Hence, I personally think there is a probability that the incident has happened. >

இப்படியும் எழுதினால் அது ப்ரூஃப் ரீடரின் மிஷ்டேக்கா? அல்லது பட்ட புடுக்கடி போதாதென்று சாருவின் தலையில் எழுதப்பட்டிருக்கிறதென்று அர்த்தமா?

சாய்பாபாவால் எம்.கே.டி அவர்களுக்குப் பார்வை வந்தது -சொற்ப நேரத்திற்கேனும் என்று ரா.கணபதி எழுதி இருப்பதற்கு ஆதாரம் என்ன?

பாகவதரின் மகள் போல ரா.கணபதி சாரும் பாகவதருக்குக் கண்பார்வை கொடுத்த சந்தர்ப்பத்தின்போது சம்பவ இடத்தில் இருந்தாராமா? சம்பவம் அவருக்குக் கேள்விஞானம்தானே. போக அவர் பக்திபூர்வமானவர்.

இந்த பக்திபூர்வமெல்லாமே புல்லரிப்பாளர்கள்தாம். சடங்குகளில் தங்கிவிடும் மத அடிப்படைவாதிகள்தாம். இவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் ஒரே மட்டைகள்தான். ஆன்மீகம் என்பது இவர்களுக்குக் கன்னத்தில் போட்டுக்கொண்டு உக்கி போடுவதைப்போன்ற சடங்கு மட்டுமே. இப்போது சாரு வாசகர் வட்டத்திலும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டக் குழுமத்திலும் நடக்கிறதே அதுபோல.

தியாகையர் முன்னால் ராமர் பிரத்தியட்சமானார் என்பதை உண்மையில்லை நடந்திருக்க வாய்ப்பில்லையென்று எப்படிச் சொல்ல முடியும் என 2001 வாக்கில் திருச்சி அலுவலகத்தில் மாறி மாறி புல்லால் தடவி அரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பரிசுத்த ஐயர்-ஐயங்கார் ஆவிகளுக்கு நானே சாட்சியாய் இருந்திருக்கிறேன். அப்போது ஓஷோ-வேப்பிலையைக் கொண்டுதான் அவர்களை அடித்தேன்.

நான் பெரிதாய்ப் படித்தவனோ படிப்பவனோ இல்லை. நீங்களோ அறிஞர் என்று அனைத்து இலக்கியவாதிகளாலும் ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம்.டி.எம் போல ஆங்கிலத்திலேயே இவ்ளாம் நீளமாய் ஆர்க்க்யூவெல்லாம் பண்ணுகிறீர்கள். எனவே ஓஷோவைக் கண்டிப்பாய்ப் படித்திருப்பீர்கள். எனக்கு ஓஷோவைப் பற்றிச் சொல்லி 94ல் படிக்கக்கொடுத்த நண்பரின் மருத்துவமனையில் படித்த ஒரு பத்தியின் நினைவில் இப்போது இணையத்தில் தேடினேன். அதே பத்தி கிடைக்கவில்லை. அது போலக் கொஞ்சம் கிடைத்தது.

கடவுளைக் கும்பிடுவதோ கும்பிடாமல் போவதோ பிரச்ச்னையே இல்லை. கடவுளின் பெயரால் கும்பல் சேர்ந்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபடும்போதுதான் பிரச்சனையே உருவாருகிறது.

படித்துப் பாருங்கள் பேசுவது ரஜினீஷா பெரியாரா என்று குழப்பமே வந்துவிடும்.

Osho – I am destroying God and spreading godliness to every human being
in OSHO ON GOD, OSHO ON RELIGION DOGMAS

Question – Why does Man need God?

Osho – It is out of fear. God is not needed at all. Man has lived in so much fear that he has needed some protection. There was fear of disease, there was fear of death — mostly it is death that makes man so afraid. He needs somebody who is beyond death to protect him.

God is not a discovery, it is an invention. Priests found it very convenient to exploit in the name of God. The Vedas say that they are written by God, and there are such stupid things in the old Vedas that if God has written them, then God is condemned along with the Vedas.

Christians say The Bible is written by God, and if The Bible is written by God — there are at least five hundred pages of sheer pornography in The Bible — then God is the greatest pornographer in the whole existence. If you look in the Hindu PURANAS you will find just pornography. Hindus have even made shivalinga a god. It is good that Sigmund Freud never came to know about shivalinga — that there are people who are worshipping phallic symbols in their temples without any idea what they are worshipping.

There is no God. All the arguments for God are refuted. Those who have really reached to the highest point of consciousness have never accepted the idea of God. Patanjali, the man who single-handedly created the whole science of Yoga, does not believe in God. Buddha, perhaps the greatest man who has ever walked on the earth was, as H.G Wells wrote about him, “the most godless person yet the most godly.”

There is not a single argument in favor of God. It is an absolutely useless hypothesis, and it will be good if we drop that hypothesis completely, because with that dropping, Mohammedanism, Hinduism, Judaism, Christianity — all simply disappear. And their churches and their thousands of cardinals and bishops and popes, who are simply nothing but parasites on humanity, also disappear.

God is the greatest calamity. Yes, people should be godly — that means they should be truthful, they should be sincere, they should be loving, they should be conscious. That makes them godly, but that does not make them God.

I am destroying God and spreading godliness to every human being. It is better that it is spread far and wide as a quality, as a fragrance, rather than being confined to a statue in a temple and worshiped. When you can be it, why worship it?

Come back again. And try to see that journalism in India comes to the same level as it is in the rest of the world. It should not lag behind. It can be a great protector of freedom, of individuals against the vast machinery of bureaucracy. A single individual cannot do anything.

Source – Osho Book “The Last Testament Vol 4″

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.

- திருவாசகம்

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே - இவ்வரிகளிலிருந்தே தம் ’பொய்த்தேவு’நாவலுக்கான தலைப்பைத் தேர்வு செய்தது பற்றி முன்னுரையில் விளக்கமாய் குறிப்பிட்டிருப்பார் க.நா.சு.

வட்ட குழும மகாஜனக்களுக்கு நினைவுறுத்தலாய் இந்தத் திருக்குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

- திருக்குறள்