18 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 10 கூச்சம்

ஏசி சொன்னதைப் போல அரை நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு, ஆபீஸிலேயே இருந்து ஐசிக்களை எழுதியிருந்தால், லஞ்ச்சுக்கு முன்பாகவே நிறுத்தி நிதானமாக எழுதி முடித்திருக்கலாம். மதியநேரம் எப்போதும் போல டெஸ்பாட்ச்சுக்கு போதுமானதாக இருந்திருக்கும். டாண் என்று ஐந்து ஆனதும் அன்றாடம் செய்வதைப் போல, பையைத் தூக்கிக்கொண்டு, ஆபீஸ் நினைவே இல்லாமல் கிளம்பியிருக்கலாம். ஹங்கேரி படத்தையும் தவறவிட்டிருக்கவேண்டாம். இன்னும் கூட ஆபீஸையே பற்றி எண்ணிக்கொண்டிருப்பதைப் போல இல்லாமல் வழக்கம்போல ஜாலியாய் இருந்திருக்கலாம். 

ஆனாலும் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு வேலை செய்வதென்பது ரொம்ப அநியாயம்.

பரீக்‌ஷாவில் இருந்தபோது, குழுவில் உறுப்பினராக இல்லாதிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு, கூட்டங்களில் பார்வையாளராகக் கலந்துகொள்ளும்ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில், வெலிங்டன் தியேட்டருக்கு அருகில்கோபுர கோபுரங்களாக செங்கற்களில் கட்டப்பட்ட, புராதன கட்டடத்தில் இருந்த மோட்டார் உதிரி பாகங்கள் விற்கும்  தனியார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றிய பத்மாவின் அண்ணன்  வைத்தியிடம் வேலையில் சேர்வதை பற்றி அவனுக்கு இருந்த எழுத்து பாதிக்கப்படுமோ என்கிற தயக்கத்தைச் சொன்னபோதுஅவர் பெரிய சொற்பொழிவையே நடத்திவிட்டார். 

ஆபீஸ் அத்தியாயம் 10 கூச்சம்