18 February 2023

உலகச் சிறுகதைகள் 6 ரேமண்ட் கார்வர்

உள்ளே இருப்பவை வெளியே கிடக்கின்றன என்றுசொல்லி வெளியில் இருக்கும் நம்மை அவனுக்கு உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார் ஆசிரியர். 

வெளிமுற்றத்தில் இறைந்து கிடக்கும் பொருட்களைப் பட்டியலிடாத குறையாய் விவரிக்கிறார். அவனுடைய படுக்கையறை உட்பட மொத்த வீடும் தெருவோடு போவோருக்கே காட்சிப் பொருளாய் இருக்கும்படியாக வெளியே கிடக்கிறது. உள்ளே இருக்கவேண்டிய படுக்கையை வெளியே கிடத்தி வைத்திருப்பதிலேயே, அவன் வாழ்வுஅப்போது எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுவது பிடிபட்டுவிடுகிறது இல்லையா.  

புனைவு என்னும் புதிர் கட்டுரை - உலகச் சிறுகதைகள் 6 நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது?