18 February 2023

உலகச் சிறுகதைகள் 7 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இலக்கியத்திற்கு இல்லை. அதனிடம் இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு அறிந்ததினின்று அறியாததற்கு அழைத்துச்செல்கிறதா என்பது மட்டுமே. 

எழுத்து நடையில், சொல்கிற முறையில்எல்லாவற்றையும் மாதிரி இது இன்னொரு கதை என்பதைப் போல அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிற கதை. கதையின் நாயக பாத்திரத்தைப்பற்றி கதைசொல்லி சொல்வதன் மூலமாக கதை சொல்லியைப்பற்றித் தானாகவே தெரியவருகிறது.