26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு

சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட  ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்


ஆனால், அப்பா எப்போதுமே இந்த ரள்ளேகாவைப் பல்லைக் கடித்துக்கொண்டேதான் சொல்வார். உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா என, அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று கிடந்து அடித்துக்கொள்வாள் அம்மா என்றாலும் அவ்வப்போது அவளும் இந்த ரள்ளேகாவைச் சொல்லுவாள். சமயத்தில் பாதி சலிப்பாகவும் பாதி பெருமையாகவும்அவரும் திட்டறார் நானும் திட்டறேன். என் புட்டத்துக்கு சொல்லுனு எல்லாத்தையும் தொடச்சிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கான். அப்பப்ப அவர் கண்ணுமண்ணு தெரியாம அடிச்சிடறார். நானும் அடிக்கிறேன். ஆனா அவன் எதையுமே சட்டை செய்யறதில்லேஎன்று அக்கம்பக்க வீட்டாரிடம் அம்மா சொல்வதை அவனே கேட்கவும் செய்திருக்கிறான்.


ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு