16 February 2023

உலகச் சிறுகதைகள் 3 காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

படிப்பதுதுரதிருஷ்டவசமாக பலருக்கு கிரகித்துக்கொள்வதாக இருப்பதில்லை.

இதனால்தான் மெத்த படித்தவர்களாகக் காட்டிக்கொள்கிற பெயர் உதிர்ப்பாளர்களின் எழுத்துகள், யார்யாரோ எழுதிவைத்ததை எடுத்துவைத்த வாந்திகளாக எஞ்சிவிடுகின்றன. வாசிப்பதன் முதல் நோக்கம் ரசிப்பதாக, ஆழ்ந்து துய்ப்பதாக இருக்கவேண்டும். அதனால்தான், ஆய்வுக் கட்டுரைகள் அசைன்மெட்டுகளாக ஆகிவிடுகின்றன

கதை என்று பார்த்தால்வெளியூரில்சில நாள்களுக்கு முன் திருடப் போகையில் சுட்டுக் கொல்லப்பட்ட பையனின் கல்லறைக்குமலர்க்கொத்து வைக்கஅம்மாவும் பெண்ணும் வருகிறார்கள் என்பதுதானே. 

கதைச்சுருக்கமாகப் பார்த்தால், நெகிழ்த்தித் தள்ளுவதற்காகவே பிறவி எடுத்திருக்கும் மெலோ டிராமா எழுத்தாளர்களுக்கு அளப்பரிய வாய்ப்பளிக்கும் கதைதான். ஆனால்அதை எதிர்பார்க்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் எழுதிவைத்திருப்பதுதான் மார்க்கேஸின் இலக்கியத் தரம்.