25 April 2011

கேள்வியும் நானே பதிலும் நானே

பின் நவீனத்துவ எழுத்தாளர் இணையத்தில் இலவச நாளிதழ் தொடங்கினால் என்ன பெயர் வைப்பார்?

தினப் புட்டு




தீப்பொறி ஆறுமுகம் ட்விட் எழுத முடிவெடுத்தால் என்ன பெயர் வைத்துக் கொள்வார்?

லைட்டர் தீயோன்


புதுமைப்பித்தன் வலைப்பூ தொடங்கினால்?

ரைட்டர்யார்ரா.காம்


காமாந்தக ட்விட்டர் அராத்து அரசியல் ட்விட்டினால்...

கோட்டைக்கு அதிபதி என்பதற்காக உள்ளாடைகளை எல்லாம் கொடிமரத்திலா உலர்த்த முடியும்?


செக்ஸ் கல்வியை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்து நல்லதா கெட்டதா? 

கண் திறந்து பாருங்கள் செக்ஸ் கலவியே நடந்துகொண்டு இருக்கிறது.


மதவாதிகளின் விருப்பமான போதனை?

'ஒழுக்க' வாதம்


கவாஸ்கரும் சச்சினுமே வணங்குகிறார்களே?

கிரிக்கெட் கடவுள் மேஜிக் கடவுளை வணங்குவதில் லாஜிக் பார்ப்பது மடத்தனம் # ஏமாறுபவன் மன்னிப்பிற்குறியவன் ஏமாற்றுபவன் தண்டிப்பிற்குறியவன்


விழிப்பு என்றால் என்ன?

எழுதப்பட்டுவிட்டதாலேயே ஒன்றைத் ’திரு-திரு’ வென முழித்தபடிக் கொண்டாடாமல் இருக்க முடிவது.


படைப்பூக்கம்?

துவளாத கொடிக்கம்பம் தன்னுடையது மட்டுமே என்று காட்டிக்கொள்ள, காற்றே இல்லாவிட்டாலும் கொடி பறப்பதான பாவனையில், இடைவிடாமல் உளறிக்கொண்டே இருப்பது.


காழ்ப்பு என்றால் என்ன?

வெறும் ஓழ்ப்பு என்று பகிரங்கப்படுத்துபவன் மீது வீசப்படும் மாலை.


வட்டார வழக்கு ஜாதியை நிலைநிறுத்துகிறதா?

வாழ்க்கையிலிருந்து கழற்ற முடியாத ஜாதி உணர்வை பேச்சு வழக்கிலிருந்து கழற்றிவிட்டுக் கொள்வது குற்றவுணர்விலிருந்து தப்பும் முயற்சி. அரசியல் சரிக்காகப் போடும் அற்ப வேஷம். கல்லறைக்கு வெள்ளையடிப்பு.