02 April 2011

இணையம் என்கிற மாய யதார்த்தம்“ராயர் கஃபேவை மூடி பல ஆண்டுகள் ஆகி விட்டது.  இருந்தாலும் அதில் சமீபத்தில் சாப்பிட்டதாக ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதையெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது” 

*******************
கீழே இருப்பது என் ராயர் கபே பற்றிய என் பதிவு

Saturday, March 19, 2011

மயிலாப்பூர் ராயர் கபே!

ராயர் கபே நடக்கிற புது இடத்து முகவரி இருப்பவர்கள் பகிர்ந்தால் பேருதவியாய் இருக்கும். கச்சேரி ரோடு ஜெய்ன் கோயிலுக்கு எதிரில் எனச்சொல்லி மனோஜ் டபாய்ந்து விட்டார்.

தி ஒரிஜினல் ராயர் கபே இட்டலி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.

“அது வேற ஒண்ணுமில்லே ஓய்! ஓட்டல் ஆரம்பிச்ச அண்ணிக்கி, ராயர் கிட்ட மொதல் ஏடு சாப்டவன், பிரம்மாதமா இருக்குன்னு சொல்லிட்டானாம். செண்டிமெண்டலா அந்த இட்லித் துணிய இன்னும் மாத்தவே இல்லை அதான் அதே ருசி இன்னும் மெய்ண்டெய்ன் ஆயிண்டிருக்கு”

ஒரிஜினல் ராயரிடம் கச்சேரி சாலையில் க.நா.சு மட்டுமல்ல, இதயம் பேசுகிறது மணியனும் ரெகுலர் வாடிக்கையாளர். தீவிர இலக்கியமும் கமர்ஷியலும் பேதமின்றி ருசித்த இடம்.

மணியன் சிபாரிசால் கச்சேரி ரோடில், காருக்குள் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர், முதலமைச்சராய் இருக்கும் போது, என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

ராயர், கெத்தேல் சாகேப் போல தர்மவான்லாம் இல்லை. துட்டு எண்ணி வாங்கி கணக்குவழக்கே பார்க்காமல் குதிரைக் குண்டியில் கட்டிவிடுவார். இரத்தம் போலவே காசும் ஓரிடத்தில் தங்காமல் புழங்குவதுதானே பொருளாதாரத்திற்கு நல்லது என்கிற பொருளியல் சிந்தனை போலும்.எங்கப்பன் போல பெரும்பாலான ராயர்களின் உயர் ரசனை குதிரைக் குண்டி.

இப்போது கடை நடத்துபவர் ஜூனியர் ராயரா சப்-ஜூனியர் ராயரா? 

அதற்கு முன்னும் பின்னும் நான் எழுதியது இந்த பஸ்ஸில் இருக்கிறது


revathy rkrishnan - என்னை தடுக்காதீங்க... நான் சுவத்தில முட்டிக்கணும்
18 Mar 2011 (edited 18 Mar 2011)
விமலாதித்த மாமல்லன் - <ராயர் கஃபே > ராயர் கஃபே ஊத்தி மூடி எவ்ளோ வருஷம் ஆச்சு. இது பலவருடங்கள் முன் நடந்த சம்பவம் போலும். அதாவது சுமாராக.......

ஓ! சாரி. சாரம் மட்டும்தான் பார்க்க வேண்டும். மரமண்டைக்குப் புரியவே மாட்டேன் என்கிறது.
18 Mar 2011 (edited 18 Mar 2011)  •  Edit
revathy rkrishnan - ராயர் கஃபே மயிலையில் இருந்ததா சார்???
18 Mar 2011
aravind அரவிந்த் - ஏன் பதிவர்கள் மட்டும் தான் மீள் பதிவு போட வேண்டுமா மச்சி சார். வைரஸ் அட்டாக்கில் இருந்து தப்பித்த ஒரு பதிவை திரும்ப போட்டு இருக்கிறார்.
18 Mar 2011
aravind அரவிந்த் - ராஜன் சுவரா ரேவதி :-)
18 Mar 2011
திரு.Maran T - அமெரிக்க ஜனாதிபதி கூட இவ்வளவு பிஸியாக இருக்குமாட்டாரு....இலக்கியத்துக்கு வந்த வேதனை..ச்சீ சோதனை
18 Mar 2011
விமலாதித்த மாமல்லன் - @revathy rkrishnan : கச்சேரி ரோடுல சாந்தோம் சர்ச் பார்த்துப் போகும் போது உங்க வலதுகைப் பக்கத்துல ஜெய்ன் கோயில் வருது இல்லை அதையும் தாண்டி போனீங்கன்னா ரோசரி சர்ச் ரோடா அது மாறும் போது வர இடத்துல இருந்துது. ரேஸுக்குப் போற டிப்பிக்கல் ராயர். அவரோட இட்லிக்காகவே கூட்டம் மொய்க்கும் மணியன் போன்ற பல பிரபலங்கள் நாஷ்டா சாப்பிட வரும் இடம். 90-91 வாக்கில் சி.மோகன் பிரஸ் அந்த ஏரியாவில் இருந்த போது போயிருக்கிறேன்.
அது மூடி எப்படியும் 7-8 வருடமாவது இருக்க வேண்டும்.
18 Mar 2011 (edited 18 Mar 2011)  •  Edit
தண்டோரா . - இடித்தே விட்டார்கள் மச்சி சார்..சாரு லஸ் ரவுண்டானாவிற்கு வழி சொல்லியிருப்பார்...ராயர் கேஃப் என்பது லேண்ட் மார்க்குக்காக சொல்லியிருப்பார்
18 Mar 2011
எம்.எம். அப்துல்லா - // சாரு லஸ் ரவுண்டானாவிற்கு வழி சொல்லியிருப்பார். //

லஸ்சில் இருந்த ரவுண்டானாவையும் இடித்து மாமாங்கம் ஆச்சு. ராயர் கஃபேஇருந்த இடத்தின் வாசலில்தான் இப்போ பஸ்ஸ்டாப். அங்க எல்லாரும் இன்னும் பஸ்டாப்புன்னு சொல்லாம ராயர் கஃபேன்னுதான் சொல்றாங்க.

இப்படிக்கு,
இன்னோரு சாந்தோம்வாசி.

டிஸ்கி : வரவர சாந்தோம்காரன்னு சொல்லிகிடவே பயமாயிருக்கு. ஊரறிய,நெஞ்சறிய பொய் சொல்றவங்க ரொம்பப்பேரு அங்கதான் இருக்காங்க :))
18 Mar 2011
தண்டோரா . - ரவுண்டானான்னா..ரவுண்டானாவா? அது இருந்த இடம்..நான் சாந்தோமுக்கு சாருவின் வீட்டிற்கு மட்டுமே சென்றிருக்கிறேன்..
18 Mar 2011
ramji yahoo - இனிமேல் யாரும் முன்கூட்டியே சொல்லாமல் வந்து சந்திக்க வேண்டாம் என்று அடியேன் விண்ணப்பித்துக் கொள்கிறேன். எனக்கு விருந்தோம்பலை விட எழுத்து தான் முக்கியம்.

இந்த வரிகளில் புதைந்து உள்ள உண்மையை உணர முடிகிறது.


சில நேரங்களில் சாரு விடம் தொலை பேசியில் பேச நம்பரை அழுத்தும் பொழுது , தொந்தரவு செய்கிறேனோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது உண்டு

இருந்தாலும் அந்த வாசகரை நான் மதிக்கிறேன், எழுத்தாளரைப் போற்றுதல் என்பது இதுதான்.

அவர் எப்போது டில்லியில் இருந்து வருவார், உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்.
18 Mar 2011 (edited 18 Mar 2011)
aravind அரவிந்த் - வாசகர்கள் தொல்லை தாங்காமல் டில்லியில் இருக்கும் இடிந்த கோட்டை ஒன்றில் தங்க விடப் போகிறாராம் :-((((
18 Mar 2011
revathy rkrishnan - @விமலாதித்த மாமல்லன்: நான் மயிலையில்தான் படித்தேன். அங்கே இந்த பெயரில் உணவகம் ஏதும் பார்த்ததில்லை. தினமலரின் தீபாவளி மலரில் ஒருமுறை ராயர் கஃபே என்ற ஒரு முன்னாள் ஹோட்டல் என படித்த ஞாபகம். அதுதான் கேட்டேன். இல்லாத ஊருக்கு வழி சொல்லியிருப்பார் போலும்
18 Mar 2011
revathy rkrishnan - @அரவிந்த் டெல்லிக்கு எதுக்கு போகணும். மவுண்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸ்க்கு எதிரே சிவப்பு கலரில் ஒரு கோட்டை போன்ற கட்டிடம் இருக்கும். ‘இடிபாடுகளுடன் இருப்பதால் மனிதர்கள் நுழைய வேண்டாம்’ என்ற போர்டுடன். அவர் அங்கே போய் விடலாம். பப்பு, ஜாரோவிற்கும் நெறைய இடமிருக்கும்
18 Mar 2011
விமலாதித்த மாமல்லன் - @revathy rkrishnan: என் அனுமானத்துல நீங்க 5-6 படிக்கும்போதே அந்த ஓட்டல் இல்லாமல் போயிருக்கலாம்:)))

<இந்த பெயரில் உணவகம் ஏதும் பார்த்ததில்லை.>

திங்கறவன் வாய்தான் அந்த மாதிரிக் கடைகளுக்கு போர்டு:))
18 Mar 2011 (edited 18 Mar 2011)  •  Edit
Senthazal Ravi - விஜய் மகேந்திரனுக்கு இன்னும் கொஞ்ச நாளில் இதே நிலை வரும். சாரு ராக்ஸ்.
18 Mar 2011
mano varsha - மயிலாப்பூரில் ராயர் கஃபே இப்போதும் செயல்படுகிறது. அடையும் ரவா தோசையும் பிரமாதமாக இருக்கும். வெறும் கார பச்சை மிளகாயை அரைத்த சட்னி இன்னும் பிரசித்தம். முதலில் இருந்த இடத்தில் இருந்து மாறி சின்ன இடத்தில் இருக்கிறார்கள். ஜெயின் கோயில் எதிரிலேதான் வரும். ரோடு பெயர் ஞாபகத்தில் இல்லை.
19 Mar 2011
யுவ கிருஷ்ணா - மனோஜ் சார்! வி.ம. மாயச்சுழல் உங்களை பஸ்ஸுக்கு இழுத்து வந்துவிட்டது நினைத்து பெருமை கொள்கிறேன்
19 Mar 2011
mano varsha - @yuva// இதில் லைக் போடுகிற ஆப்ஷன் இல்லையா? ரொம்ப பின்தங்கிய நிலையில் இருக்கிறதே :(. செல்போன் காலத்தில் பேஜர் மாதிரி.
19 Mar 2011
யுவ கிருஷ்ணா - ஆமாம். ரொம்ப மொக்கையான டெக்னாலஜி இது. உலகம் முழுக்க ஃபெயிலியர் ஆன பஸ் தமிழர்கள் மத்தியில் மட்டும் ஹிட்.

தமிழன் எதையும் தலையாலே யோசிக்கிறதில்லை.
19 Mar 2011
திரு.Maran T - குறிப்பாக பதிவர்கள் மத்தியில் தாம் பஸ் பேமஸாக இருக்கிறது..."பின்னூட்ட மோகம்" காரணமாக இருக்கலாம் ;)
19 Mar 2011
Selvam செல்வம் - Welcome Thala 2 BUZZ
19 Mar 2011
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - மனோஜ், இந்த வார விகடன்லகூட சாரு ராயர் கபேல சமீபத்துல சோவைப் பார்த்ததா எழுதியிருந்தாரு. சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதையும் சாரு பொய் சொல்றாருன்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருந்ததால சொல்லாம விட்டேன் :)

#கும்தலக்கடி கும்மாவா, சாருன்னா சும்மாவா!
19 Mar 2011
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - அப்புறம் எங்க பஸ்ஸை யாரும் குறை சொல்ல வேணாம், இதுலயும் லைக் போட முடியும். பஸ்ஸை லைக் போடலாம், ரீ ஷேர் செய்யலாம். ஆனா தனிப்பட்ட கமெண்ட்களை லைக் போட முடியாது. அதையும் ஒரு காரணமாத்தான் வச்சிருக்கோம்.
19 Mar 2011
Pratap Kumar - ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக,,,அமெரிக்காவுல ஜார்ஜ்புஷ் கூப்பிட்டாக...
சுயதம்பட்டம் கொடுப்பதற்காக விண்ணப்பம் மாதிரி போடப்பட்ட ஒரு பதிவு. இவர்தான் கமலையும், மிஷ்கினையும் narcissist என கிண்ட பண்ணுகிறார்.... இதெல்லாம் ஒரு பொழப்பு
19 Mar 2011
கென் Ken - தவறான தகவல் தருவது தற்கொலைக்கு சமானம்னு மச்சி சார் சொன்னது ? # ராயர் கபே இருக்கா இல்லையா
19 Mar 2011 (edited 19 Mar 2011)
கென் Ken - மனோ வர்ஸா என்ற மாடர்ன் பெயரில் வந்திருப்பது எதுவும் புது பிகர் இல்லை அவர் புனைவின் நிழல் மனோஜ்என்பதை சபைக்குத் தெரிவித்துக்கொள்கிறோம் :)
19 Mar 2011
aravind அரவிந்த் - ஏன் பிரதாப் பொழைக்க வழி நீங்க சொல்லி கொடுக்கலாமே.
19 Mar 2011
ramji yahoo - கென்- மனோஜ் அவர்கள் குறித்த விளக்கத்திற்கு நன்றிகள். அவரின் புனைவின் நிழலில் வந்த யாகூ இணைய அறை அரட்டை குறித்த கதை குறித்து அவரைப் பாராட்ட அவரின் இணைய முகவரி தெரியாமல் தவித்து கொண்டு இருந்தேன்.
இந்த பஸ் மூலம் அவருக்கு அந்தக் கதை படைத்ததற்காக எனது நன்றிகள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
19 Mar 2011
கென் Ken - ராம்ஜியண்ணே உங்களுக்கு இல்லாத மெயில் ஐடியா வாழ்த்துக்களை ஆரம்பியுங்கள் manovarsha@gmail.com
19 Mar 2011
mano varsha - மயிலாப்பூர் கச்சேரி ரோடு அருண்டேல் தெருவில் ராயர் கபே இப்போது உள்ளது.
19 Mar 2011
ramji yahoo - Mano ji, that is rayar mess, I do not know rayar mess and rayar cafe - one and the same -

mylapore rayar mess
19 Mar 2011 (edited 19 Mar 2011)
revathy rkrishnan - அவர் மெஸ்ஸ தான் கஃபேன்னு சொல்லியிருப்பார் போல(சாருவை சொல்றேன்)
19 Mar 2011
mano varsha - அருண்டேல் தெருவில் இருப்பது பாரம்பரிய பெருமை பெற்ற அதே ராயர் கபேதான்.
19 Mar 2011
கென் Ken - மனோஜ் நீங்கள் சாருவின் வாரிசு ஆகவே உங்கள் சாட்சியம் செல்லாது செல்லாது :)
19 Mar 2011
ramji yahoo - The mess is managed by the brothers – Kumar Anna and Mohan Anna; the former is usually at the kitchen dishing out the menu items


http://jvenkatesh.wordpress.com/2008/11/24/rayar-mess/


undu kettan rayan.. uduthi kettan —-”. Rayars a
19 Mar 2011 (edited 19 Mar 2011)
ramji yahoo - 044 2467 0519
இப்போது தொலைபேசியில் பேசினேன். ராயர் மாமி தான் போனை எடுத்தார்.
இப்போது தோசை மட்டும் இருக்கிறது, 10.30 pm வரை கடை உண்டு.
நாளை காலை ஏழு அரை முதல் பதினொன்று வரை காலை உணவு உண்டு (இட்லி, தோசை, அடை...)

இப்போது பெயர் ராயர் மெஸ் , பழைய ராயர் கபே தான் இந்த ராயர் மெஸ் ஆம்
19 Mar 2011 (edited 19 Mar 2011)
aravind அரவிந்த் - ராம்ஜி அந்த மொபைல் நம்பருக்கு பேசுங்க. ராயர் மாமா பேசுவார்.
19 Mar 2011
ramji yahoo - அரவிந்த் ராயர் மெஸ் மொபைல் நம்பர் பகிருங்கள், நாளை காலை பேசுகிறேன்.
அதை விட வேறு என்ன முக்கிய வேலை வாழ்வில் இருக்கிறது
19 Mar 2011
எம்.எம். அப்துல்லா - நேரிலேயே போய் உறுதி செய்துவிட்டேன். இப்போது இடம்மாறி இருப்பது அதே ராயர் கஃபேதான்.
19 Mar 2011
ramji yahoo - அப்துல்லா என்ன எல்லாம் சாப்பிட்டீர்கள் , சுவை எப்படி

ஜ்யோவ் சுந்தர்- சாரு வின் தாக்கம் இப்போது தெரிகிறது /புரிகிறது
19 Mar 2011
aravind அரவிந்த் - அப்து அண்ணே ராம்ஜி கன்பார்ம் பண்ணிய பிறகு உங்க கன்பர்மேஷன் தேவையில்ல :-))
19 Mar 2011
கென் Ken - அதாகப்பட்டது நேரிலும் போனிலும் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் ராயர் மெஸ் என்கிற ராயர் கபே என்கிற ஒன்று இருக்கிறது என்கிறீர்கள்.

சுத்த வேஸ்ட் மக்களே நீங்களெல்லாம் ஒரு விக்கிப்பக்கம் டக்குன்னு உண்டாக்கி லிங்க் கொடுக்கத்தெரியாம நேராப்போனேன் , போன் பண்ணினேன்னு :)))
19 Mar 2011
அதிஷா ... - கென் அவிங்களோட சேர்ந்து நீயும் கெட்டிப்போயிட்டியே. நாம் என்ன அந்த மாதிரியா.. டகால்டி பசங்களா!
19 Mar 2011
aravind அரவிந்த் - ஏன் யாராவது திட்டு வாங்கணுமா கென்.
19 Mar 2011
கென் Ken - வட்டத்தை உண்டாக்கிட்ட அப்பறமா இது கூட செய்யாட்டி என்னத்த வட்டம் போங்கையா சுத்த வேஸ்ட் அதிஷா நீ
19 Mar 2011
அதிஷா ... - நம்முடைய இலக்கிய வட்டம் உண்மையான நேர்மையான அக்மார்க் நெய்யினால் செய்யப்பட்ட இலக்கிய வட்டம்! அதில் நஞ்சைக்கலக்காதே!

'அந்த' டுபாக்கூர்களின் சதிவலையில் வீழ்ந்திடாதே என் தங்கமே
19 Mar 2011
எம்.எம். அப்துல்லா - ருசி ருசிபோல இருக்கு :)
19 Mar 2011
அதிஷா ... - அப்துல்லா அண்ணே.. தேர்தல் நேரத்துல என்ன இது வெளயாட்டு.. உடன்பிறப்பே புயலென புறப்படு..
19 Mar 2011
எம்.எம். அப்துல்லா - இன்னைக்கு ஒரே ஒருநாள் இங்க கும்மி அடிச்சுக்குறேன்.நாளை முதல் 20 நாட்களுக்கு அலுவலகத்துக்கு விடுமுறை. சீட்டுக்கு பதிலா புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆக்கிட்டாங்க :)
19 Mar 2011
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - அப்துல்லா, சந்தோம்ல நெஞ்சறிந்து பொய் சொல்பவர்கள் நிறைய பேர் ஆகிட்டாங்கன்னு நீங்க சாருவைத்தானே சொன்னீங்க. இப்ப என்ன சொல்லப் போறீங்க?
19 Mar 2011
கென் Ken - அவர் புதுக்கோட்டை சட்ட மன்ற தேர்தல் பொறுப்பாளர் அங்கே போய் நேர்மை நீதி நியாயமா பேச / செய்யப்போறார்

# சாந்தோம் பார்ட்டிங்க எல்லாம் நெஞ்சறிந்து பொய் சொல்பவர்கள் தான் சரிதானே அப்து அண்ணே :)))))))))))
19 Mar 2011
விமலாதித்த மாமல்லன் - ராயர் கஃபே மேப் - நன்றி: நண்பர் சம்பத் ராஜகோபாலன் http://i51.tinypic.com/2igg1hl.jpg
20 Mar 2011  •  Edit

**************
“ராயர் கஃபேவை மூடி பல ஆண்டுகள் ஆகி விட்டது.  இருந்தாலும் அதில் சமீபத்தில் சாப்பிட்டதாக ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதையெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது” 

இப்படி மேற்கோளுக்குள் குறிப்பிட்டால் அதை யாரோ ஒருவர் கூறியது என்றுதானே பொருள்.

அது யாராய் இருக்கும்? எழுத்தாளர் என்று வேறு குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள்.

எனக்குத் தெரிந்து இணையத்தில் மும்மூர்த்திகளே எழுத்தாளர்கள். எழுத்தாளர்களைப் பொறுத்தவரை,மீதிபேரெல்லாம் புத்தகம் வாங்குவதற்காகவும் மும்மூர்த்திகளின் சுயபுராண உபன்யாசம் கேட்டு கிளுகிளுத்து கட்சிகட்டி விசிலடிப்பதற்காகவுமே அவரவர் தாய்தந்தையரால் நேர்த்திக்கடனாய் பெற்றுவிடப்பட்டவர்கள்.

குறைந்தபட்சம் வாசகனை இப்படி நடத்துபவன் மட்டுமே எழுத்தாளன். வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான வாசகர்களும் இதையே விரும்புகின்றனர் என்பதாக எண்ணிக்கையைக் காட்டி உருவாக்கப்படும் மாயத்த் தோற்றமே!

இணையமே ஒரு மாய யதார்த்தம்தான் இல்லையா?