06 April 2011

அறிவுஜீவிகள் அடென்ஷன் ப்ளீஸ்!

பைத்தியக் காரன் - @ ஐஸ் புரூட்,

மாமல்லனை நான் ஃபாலோ செய்வதில்லை. அவரும் என்னை பின் தொடர்வதில்லை. என்றாலும் எனது பஸ்ஸை அவர் பார்க்கவும், படிக்கவும் செய்கிறார். 

ஆனால், அவர் பஸ்ஸை நான் பார்ப்பதில்லை. எனவே அவர் எழுதியது எனக்கு தெரியாது.

இப்போது நீங்கள் அவர் பஸ்ஸில் எழுதியதை சுட்டிக் காட்டி எந்தளவுக்கு அவர் கீழ்த்தரமானவர் என்பதை அவரை ஃபாலோ செய்யாதவர்களுக்கு புரிய வைத்திருக்கிறீர்கள். 

அவரை கண்டிக்கிறேன்.2:11 pm

எனது 210 பஸ் ஃபலோயர்களுக்கும் 230 ரீடர் ஃபாலோயர்களுக்கும் எண்ணிக்கையறியவியலா ப்ளாக் ஃபாலோயர்களுக்கும் ஒரு விண்ணப்பம். 

திட்டுவதற்காகக் கூட தயவு செய்து என்னை ஃபாலோ செய்யாதீர்கள். 


என் பதிவுகளைக் கூட நானாக பஸ்ஸில் போடுவதை நிறுத்திவிட்டேன். எப்போதேனும் கிக்கிரிபிக்கிரி என ஏதேனும் பதிவோ கமெண்ட்டோ போடுவதோடு சரி. மேலும் பஸ்ஸில் நான் வெறும் 9 பேர்களை மட்டுமே ஃபாலோ செய்கிறேன் அதுவும் வேதாளம் எப்போது முறுங்கை மரம் ஏறும் எனத் தெரியாது. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அன்ஃபாலோ செய்துவிடுவேன். எழுத்தாளன் என்பதால் இது எனக்கு மட்டுமே கூகுள் கொடுத்த ஸ்பெஷல் சலுகையாக்கும். 

இலக்கியத் தேடலுடன், ’இணையத்தில் பெண் முலைப் படம் தேடிய பித்தன்’ எனப் பைத்தியக்காரனால் அம்பலப்படுத்தப் பட்டு கீழ்த்தரமானவன் என்று கண்டிக்கப்பட்ட என்னை ஆண்படம் வெறிக்கா பெண்களும் பெண்படம் வெறிக்கா ஆண்களும் தொடர்வதை உடனடியாக இக்கணமே நிறுத்தும்படி பைத்தியக்காரனின் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

பெண்ணுடல்மொழிக் கவிதைகளில் ஆண்களின் தொன்ம ஜட்டிகள் முச்சந்தியில் உருவப்படும் காலம் அல்ல போலும் இது.

’80களில் உறைந்து போன மூளை’யில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு வெட்டிக் கதை நினைவுக்கு வரவே கொஞ்சம் டிங்கரிங் பெயிண்டிங் பண்ணியிருக்கிறேன்.

ஆன்மீக போதகர்களும் ஆச்சார கம்யூனிஸ்டுகளும் மேற்கொண்டு படிக்காமல் அகன்றுவிடுவது அவர்தம் ரத்த நாளங்களுக்கு நல்லது.

பூதவுடல் நீத்து இறவாப் புகழெய்திய கலையிலக்கிய தத்துவ கம்யூனிஸ அரசியல் வாதப்பிரதிவாத அறிவுஜீவிகள் எமதர்மனிடம் வரிசையில் நின்றிருந்தனர் . அனைவர் கையிலும் ஒரு விண்ணப்பம் ஒரு பழம். விஷயம் இதுதான். 

இவர்கள் அனைவரும் கண்ணால் படித்து மூளையால் சிந்தித்து வாயால் அறுத்து கையால் எழுதி மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டமையால் எமலோகத்தில் சிறப்புச் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தனர். தாங்க முடியாத இம்சையில் தவித்துக் கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை 24 மணி நேரமும் இடைவெளியின்றி பூவுலகில் என்ன வெல்லாம் பேசி அடுத்தவர் உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்களோ அவை எல்லாம் ரகஸியமாய்ப் பதிவு செய்யப்பட்டு அவரவர் தனிமைக் கொட்டடியில் அவரவர்க்கே ஒலிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

எடுத்துக்காட்டாய் மதிப்பிற்குரிய மருதையன் அவர்களுக்கு வாசிப்பது எப்படி என்று அவர் கொடுத்த லெக்சர் மற்றும் வினவு கட்டுரைகளும் இடைவிடாது ஒலிக்கப்பட்டன. ஜெயமோகனுக்கு, அவரது இலவச கன்ஸெல்டன்ஸி உபன்யாசங்கள். சாருவுக்கு ஒலிநூலாய் தேகம் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது. மன-தேசாந்திரி எஸ்.ராவுக்கு நெகிழ்ந்தொழுகும் தானில்லையாக்கள் என்று ஒவ்வொருவருக்கும் அவரவர் எழுத்துக்களே உச்சாடணம்போல், இடைவிடாது ஒலிபரப்பப்பட்டால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இப்படியாக எமலோகத்து டார்ச்சர் தாங்காமல் தரையில் விழுந்து புரண்டு அரற்றி அழுததில் எமனாகப்பட்டவன் மனமிரங்கி கொடுத்த வாய்ப்பே ஜனநாயக முறைப்படி விண்ணப்பப் பரிசீலனை. அதற்குத்தான் அவர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அநேகமாக அனைத்து விண்ணப்பங்களின் கடைசி வாக்கியங்களும் ஒன்றுபோலவே முடிவடைந்தன. 

ஒலி உபதேசத்தை நிறுத்துங்கள். இதைப் பரிசீலிக்க முடியாதெனில் குறைந்தது ஒலி நாடாவையேனும் வாராவாரம் சுழற்சி முறையில் மாற்றி மாற்றியேனும் ஒலிபரப்புங்கள். தத்துவப் பிரச்சனை எழுப்பாமல் எவர் பேச்சையும் கேட்கத் தயாராய் இருக்கிறோம்.

தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறவனிடம் விண்ணப்பத்தோடு மட்டும் போனால் நன்றாயிருக்குமா என்று யோசித்த மாய யதார்த்த குமாஸ்தா இலக்கியவாதி, வருட முதல்நாளின் அரசு அலுவலக யதார்த்தத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தையும் எடுத்துக் கொண்டார். அவரது சமயோசிதம் கண்ட மற்ற அறிவுஜீவிகள், தங்களுக்கு இடையில் இருந்த தத்துவார்த்தக் கொள்கை  முரண்பாடுகள் அனைத்தையும் விலக்கி, அவரவர் பூவுலக பாவங்களுக்கேற்ப ஆளுக்கொரு பழத்தைக் கையில் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தனர். 

எமன் அறைக்குள், எலுமிச்சம்பழம் வைத்திருந்த முதல் அறிவுஜீவி நுழைந்த கொஞ்ச நேரத்திலேயேக் காச்சு மூச்சென்று கத்தல் கேட்டது. எல்லோர் முகத்திலும் கலவரம். அடுத்து நுழைய வேண்டியவர் கிலேசத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தார். அதை எமன் பார்த்துவிட்டான். 

”ஏய்!” 

தலையைப் பின்னுக்கிழுத்துக் கொண்ட ஆன்மீகவாதி தமக்குத் தாமே மெல்ல சிரித்துக் கொண்டார். எமன் எருமை திருஷ்டியில் தெரிந்துகொண்டு விட்டான். 

”மலைப்பழம் வைத்திருப்பவனே என்ன சிரிப்பு” என்றான்.

”மன்னிக்கவும் எமதர்மனே! என் பின்னால் ஒரு அதிதீவிர நக்ஸல்பாரி வைத்திருக்கும் பழத்தை நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்துவிட்டது.”

”அவனிடம் இருப்பது என்ன?”

”பலாப்பழம்.”