10 January 2012

படத்தையும் படிக்கலாம்

Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
Description
Screening starts after 5.45 pm - more info at :
http://konangalfilmsociety.blogspot.com/
இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸியின் பிரம்மாதமான படம்.

படத்தைப் பொருத்தவரை ஒரே பிரச்சனை என்னவென்றால் ஏமாற்றும் எளிமை. மேற்கோள் காட்ட வசதியாய் ஒற்றைவரிகள் இல்லாமல் போகிற போக்கில் இருக்கும் இயல்பான காட்சிகள். அடிக்கோடிட்டு ஜாக்கி வைத்துத் தூக்கி நிறுத்தினால்தான் புரியக்கூடிய மேலோட்ட ரசனையுள்ள கலை இலக்கியக் காவலர்களுக்கு சவச்சவ என்று இருப்பதாகத் தோன்ற வாய்ப்புள்ள படம். உஷார்.

எதுவுமே ‘சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும்’ சுயசரிதைக் கதை.

அம்பித்தன பாதுகாப்புடன், பாதிப்பு வரவே சாத்தியமற்ற பாதுகாப்பான இடமாய்ப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பத்திரிகையின் ஆசிரியர் கடிதத்தில் மட்டும் அறச்சீற்றம் காட்டாமல் பாசிச ஆட்சிக்கு எதிராய் குரல்கொடுத்த எழுத்தாளன், 40களில், ஒரு வருட தண்டனையாய், ஏசு கிறிஸ்து வராமல் நின்றுவிட்டதுபோல் சபிக்கப்பட்ட இடமாய், அறியாமையும் வறுமையும் பீடித்த இடத்தில் தண்டனையாய் வாழ விதிக்கப்பட்ட அனுபவத்தை, எந்த விசேஷ அழுத்தங்களும் கொடுக்காமல் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் படம்.

எங்கள் சென்னை ஃபிலிம் சொசைட்டியில் மத்திய 80களில் திரையிடப்பட்ட படம். மவுண்ட் ரோடு எல் ஐ சி நடைபாதையில் இந்தத் தலைப்பைப் பார்க்க நேர்ந்ததும், பரவசத்துடன் வாங்கிய புத்தகம் படிக்கப்படாமல் பத்திரமாய் இருக்கிறது.

படத்தைத்தான் படித்துவிட்டேனே!