31 January 2012

பேராசிரியர் எஸ்.ரா

இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.

மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர்! - எஸ்.ராமகிருஷ்ணன் எல்.எல்.ஏவில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் தினமணியிலிருந்து.

அறிஞர் டால்ஸ்டாய்க்கும் காந்திக்கும் சுவாரஸ்யமான கடிதத் தொடர்புகள் நிகழ்ந்திருக்கின்றன. டால்ஸ்டாயின் கருத்துக்களைத் தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார் காந்தி.

டால்ஸ்டாய் எழுதிய சுயசரிதையைப் படித்தபின்தான் காந்தி தன்னுடைய சுயசரிதையை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். மொழியைப் பற்றிய சிந்தனைகளும் காந்திக்கு உண்டு. ஹிந்தி, வடமொழிகளில் வந்திருக்கும் பல மூல நூல்களைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே அந்த மொழிகளைக் கற்றுக் கொண்டேன் என்கிறார். நாட்டில் ஆங்கில மோகம் அதிகரிப்பதைக் காரணம் காட்டி, "ஹிந்துஸ்தான் இங்கிலீஸ்தான் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்' என்று எழுதியிருக்கிறார்.

டால்ஸ்டாயின் பல தத்துவங்களை மொழிபெயர்த்திருக்கும் காந்தி, "இந்தத் தத்துவங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நூல் எது? அது தெரிந்தால் நானும் அதைப் படித்து பயன்பெறுவேன்... அதைச் சொல்லுங்கள்'' என்று டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதற்கு டால்ஸ்டாயிடமிருந்து காந்திக்கு பதில் வந்தது. அதில் டால்ஸ்டாய், ""பல தத்துவங்களின் சாரத்தை நான் இந்த நூலிலிருந்துதான் எடுத்து எழுதுகிறேன்'' என்று பதில் அளிக்கிறார். அந்த நூல் திருக்குறள்!

(சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் "மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர்!' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சிலபகுதிகள்) 

இதை ஆதாரமற்ற தவறான தகவல் என்று கூறிவிட்டார் ஒருவர். 

விட்ட பீலாவை லட்சம்பேர் படிக்கும் பத்திரிகையில் எவனாவது எதிர் கேள்வி கேட்டுவிட்டால் வேறு வழியே இல்லாமல் இடிச்ச புளி இலக்கியப் புலியாகி இருமிக் காட்டியே ஆகவேண்டும்.

<இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கபடுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது

என்று நான் வாசித்த கட்டுரையில் இருந்து தான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலை தெரிவித்திருக்கிறேன்>


ஒன்றா to take part என்று சொல்லோணும். இல்லியா to participate என்று சொல்லணும். ராப்பிச்சையாட்டம் இதையும் அதையும் கலந்து பிசையக்கூடாது. தமில் என்றில்லை எந்த மொழியிலும் இது அரிச்சுவடி.

ஆ இல்லே literary conferenceஆ?

ஆங்கிலத்தில் பிட் அடித்துகூட பாஸாக முடியாத நானெல்லாம் பார்த்து எள்ளிநகையாடும்படியா <ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன்.> என்று சொல்லிக்கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன் ’ஆங்கிலம்’ எழுதுவது?

அடப் பிசாத்தே அது எஸ்.ரா எழுதியதல்ல.

<என்று நான் வாசித்த கட்டுரையில் இருந்து தான்> 

என்பதைக்கூட கவனிக்காமல் உன் ஊத்தை வாயை ஏன் திறக்கிறாய் என்று இணைய அரோகராக்கள் கூவக்கூடும்.

எஸ்.ரா வாசித்த கட்டுரையின் பவுசைப் பார்ப்போமா?

Languages - Thirukkural - Are you a literaturist really ?

Mahatna Gandhi was invited to take participate in a Literature conference held at Allahabhad, in 1943. Mahatma Gandhi was invited to speak. pease read his speech.

தானே புயல் மழை வெள்ளத்தில் வசமாக மாட்டிக்கொண்டால் தப்பிக்கப் புல் பூண்டு தழை செடி கொடி எது அகப்பட்டாலும் பிடித்துக்கொண்டுதானே கரையேறியாக வேண்டும்.

எப்போதிருந்தைய்யா எவரெவரோ எழுதும் யாஹூ பதில்கள் எல்லாம் இலக்கிய தத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆக ஆரம்பித்தன? ஏதோ ஒரு மொக்கை எங்கோ கேள்விப்பட்டதை தன் பட்லர் ஆங்கிலத்தில் எழுதினால், அதைப்போய் பெரிய ஆதாரக் கட்டுரை எனக்காட்டி இங்கிருந்து ரஷ்யாவுக்கு எஸ்கேப்பாகப் பார்க்கிறீரா?

<Mahatna Gandhi was invited to take participate in a Literature conference held at Allahabhad, in 1943.>

ஆனால் சரித்திரம் என்ன சொல்கிறது?

<August 8, 1942 at Gowalia Tank Maidan, Mumbai. Soon after, on August 9, Gandhi and several other members of the Congress Working Committee were arrested under Defence of India Rules. Gandhi, along with his wife Kasturba, Secretary Mahadev Desai, Miraben, Pyarelal Nayar, Sarojini Naidu and Dr. Sushila Nayar was brought to the Aga Khan Palace that served as a jail. Gandhi stayed in the Aga Khan Palace until he was released on May 6,1944.>

http://www.thehindu.com/life-and-style/kids/article2313426.ece

9 ஆகஸ்ட் 1942லிருந்து 6 மே 1944லில் வீட்டுச்சிறையில் ஆகாகான் மாளிகையில் இருந்தவர் எப்படி ஐயா 1943ல் அலகாபாத் இலக்கிய சம்மேளனத்தில் கலந்துகொண்டு பேசியிருக்க முடியும்? சால்ஜாப்பிலும் மாய யதார்த்தவாத முய்ற்சியா?

(மேற்கண்ட தேடலை மேற்கொள்ளக் காரணமாயிருந்தது, இந்தப் பதிவைப்  படித்துவிட்டு R.V. Subramanyan இடமிருந்து வந்த இந்த மின்னஞ்சல்தான் // Mahatna Gandhi was invited to take participate in a Literature conference held at Allahabhad, in 1943. Mahatma Gandhi was invited to speak. pease read his speech. // In 1943, Gandhi was in jail. Quit India movement started in 1942. Gandhi was jailed between Aug 42 and May 44. (not sure about the month he got released) R.V. Subramanyanக்கு நன்றி.

மாலையில் அலுவலக வேலையாய் செங்கை-மதுராந்தகம் சாலையில் ஜீப்பில் பயணம் செய்கையில் மலைகளுக்கிடையில் விட்டுவிட்டுக் கேட்ட கைபேசியில் எஸ்.ரா ஆங்கில ’ஆதாரமாய் காட்டிய கட்டுரை’யின் வாக்கியங்களைக் கூற, அவை இணையத்தில் புதைந்திருக்கும் இடங்களைத் தேடிக்கொடுத்த இருபத்துநாலுமணிநேர இணைய சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ட்விட்டர் கவிராஜன் அவர்களுக்கும் நன்றி)

எங்கு வாசித்தேன் யாருடைய கட்டுரை என்கிற தகவல்களைத் தருகிற குறைந்தபட்ச நேர்மையாவது வேண்டாமா? தத்துபித்தென்று பொத்தாம் பொதுவாக எழுதிக் காட்டுவதற்குப் பெயர் ஆதாரமா? அரிதாரமா?

இங்கிலீஷ் இலக்கியத்தில் டாக்டரேட்டுக்குப் படித்த எஸ்.ராவுக்குத் தெரியவந்து, மேற்குறிப்பிட்ட ”கட்டுரையிலிருந்து” திருத்தி வெளியிட்டுள்ள ஒரே ஒரு தவறு என்ன தெரிய்மா? 

என்றிருப்பதை அண்ணன் இலக்கிய சாகரம் எஸ்.ரா அவர்கள் என்று திருத்தியிருப்பதுதான். மற்றபடி அப்படியே காப்பி பேஸ்ட்.

சரி அடுத்த பகுதியின் காப்பி பேஸ்ட் எங்கிருந்து என்கிறீர்களா?

Mahatma Gandhi has said that he came to know about Thirukkuralfrom Leo TolstoyLeo Tolstoy has openly admitted that he has taken the conceptof non-violence from a German translation of the Kural.


இப்படி எங்கெங்கிருந்தோ இரண்டு பிட்டை ஒன்றாக ஜாய்ண்ட் அடித்தால் ஒரு கட்டுரையாகிவிடக்கூடிய அளவிற்கு உலக இலக்கிய வாசிப்பு உள்ள ஒரே காரணத்திற்கே சர்வதேச கானடா நாட்டின் இயல் விருது செரித்தது.

ஐயா அகில உலக விருதுகளுக்குத் தகுதியானவரே இப்படி காந்தி - டால்ஸ்டாய் கடிதங்களில் குறிப்பிடப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் குறைப்பிடப்பட்டதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாய்ப் போய்க்கொண்டே இருந்தால் அசல் கடிதத்திலேயே அப்படி இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் என் போன்ற தற்குறிகளுக்கு வந்துவிடாதா? ஒன்றும் குடிமுழுகிவிடவிலை. ஒருஜினலையே ஒருஜினலாகப்படிக்கையில் படிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் இப்போதேனும் காந்தி-டால்ஸ்டாய் கடிதங்களைத் தேடிப்பிடித்துப் படித்து இதோ இன்ன தேதியில் எழுதப்பட்ட இந்த கடிதத்தில் இன்ன இடத்தில் இப்படி டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார் என்று சுட்டிக்காட்டக்கூடாதா? அப்படி சூடம் கொளுத்தித் தம் படிப்பறிவைப் பறைசாற்ற ரஜினி - வைரமுத்து கலந்துகொண்டு வாழ்த்தும் உயிர்மையின் உலக இலக்கிய உலக சினிமா விழாவைவிட பொருத்தமான மேடை வேறு எதுவாக இருக்கும்?

குறுகிய அவகாசத்தில் அதைத் தேடிப்பிடிப்பதென்பது ஆயிரம் வேலையைத் தலைமேல் சுமந்தபடி திரிந்துகொண்டிருக்கும் தேசாந்தரிக்கு ஆயாசமாக இருக்கக்கூடும்.

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல் கட்டுரைக்காகக் குழுமக்குட்டைக்குள் குமுமிகள்விட்டு என்னை அவதூறு செய்த அன்னா ஹசாரேவின் இனிய புலி இதைத் தேடிப்பிடித்தால், இந்தக் கடிதங்களை வைத்து காந்தியும் டால்ஸ்டாயும் ஆன்மாவின் தேடல் என்று ஐநூறு பக்கங்களுக்குக் குறையாமல் ஜாங்கிரி பிழியலாமே.

திருட்டு டிவிடி கதாசிரியர்கள் அந்தக் காலத்தில் புதுமைப்பித்தனிடம் மாட்டிக்கொண்டு எப்படிப் படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா? அப்படியான அம்பலப்படுத்தும் கட்டுரைக்கு, அந்தக் காலத்துப் ’பொறுக்கி மொழி’யில் அந்த மேதை வைத்த தலைப்பு என்ன தெரியுமா? கோவணம் உருவாத குறையாக, ’இரவல் விசிறி மடிப்பு’.