22 January 2012

வார்த்தையும் சாரமும்


20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது. 

எதையும் அடைவதைக் குறிக்கோளாய் வைத்துக்கொள்ளாதவனுக்கு எவனையும் அண்டி தலையாட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கையில், நேரத்திற்கு ஏற்றார்போல் புரட்டிப் பேசவேண்டிய நிர்பந்தம் என்ன? 

சுஜாதா கோஷிகளிடம் அப்படி என்னாய்யா பெரிய ஆளு அந்தாளு என்றும் சு.ரா போன்றோரிடம் அகிலன் நா.பா மாதிரி மண்டூகம் இல்லே அவருக்கு இருக்கற மவுசு நம்பாளுங்குளுக்கு மட்டும் தப்பித்தவறிக் கெடைச்சா அவனா? யாரு அவன்னு இல்ல நம்பளைப்பத்தியே கேப்பாங்க என்றும் நம்மைப் பற்றி இலக்கியப் பெருசுகள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை கிஞ்சித்துமின்றி முன்வைத்தவன். 

நீங்களெல்லாம் சுஜாதாவின் வாசகர்கள். முகம்கூடத் தெரியாமல் வெறும் எழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என் கதைக்காக வாதாடியவர் சுஜாதா. Sunday, September 5, 2010 வலி - வெளிவந்த கதை. நன்னியுண்டு அதற்காக ஒருபோதும் கூழைக்கும்பிடு போட்டதில்லை. 1982ல் கணையாழி குறுநாவல் போட்டியில் பெரியவர்கள் குறுநாவலுக்காக பரிசு வாங்கியது அவர் கையால்தான். அன்று சந்தித்ததுதான் அதற்குப் பிறகு 1994ல் குமுதத்திலும் 1995ல் அவரிடம் உயிர்த்தெழுதல் புத்தகம் கொடுக்க அவர் வீட்டிற்கும் சென்றபோதும்தான் சந்திப்பு. அதுகூட வாலாட்டவல்ல, (என்னமோ பெருசா எடிட் பண்ணச் சொன்னியே அந்தக் கதை அப்படியே வெளியாகி இருக்கு பாத்துக்கோ என அவரிடம் குத்திக்காட்டத்தான் - அந்தக் கதை அப்புறம்) 82ல் சுஜாதாவின் வாலைப்பிடித்துக்கொண்டு நம்மாத்துப் பையனாக பிரமோஷன் வாங்கி, இன்னொரு இரவிச்சந்திரனாவதா என் விதி? 

ஐந்தாண்டு இடைவெளிக்குப்பின் திரும்ப எழுதத்தொடங்கிய 94கில் குறைந்தபட்சம் சுஜாதா சொன்ன அபத்தத்தின்படி எடிட் செய்ய அனுமதித்து இருந்தால் அந்தக் கதை குமுதத்தில் வெளியாகி குப்பைக்குப் போயிருக்கும். புதிய பார்வையில் நான் எழுதியபடி அப்படியே வெளியாகி பெரிய கவனத்தைக் கவராவிட்டாலும் இன்றும் ’என் கதை’யாக இருக்கிறது. 

உலக இலக்கியத்தை உமக்கு அறிமுகம் செய்த சாரு நிவேதிதா 94கில் ட்ரைவ்-இன்னில் உட்கார்ந்தபடி கட்டை விரலை உயர்த்திக்காட்டி ”குல்லா, மேஜிக்கல் ரியலிஸம், ரியல் கம்பேக்” என்று சொல்லும்படியாக அமைந்ததற்குக் காரணம் சு.ராவாக இருந்தால் என்ன சுஜாதாவாக இருந்தால் என்ன என்று என்றும் வளையாத கட்டைவிரலுடன் வாழ்கிற முரட்டுத்தனம்தான். 

சுஜாதா என்கிற நாணயத்தின் இரண்டு புறங்களையும் பார்க்கவேண்டுமானால் ‘புரட்டி’த்தான் பார்த்தாக வேண்டும். படிப்பறிவற்ற என்போன்ற மூடனை, வயதுவாரியாய் உங்களது வாசிப்புப் பட்டியலைப் போட்டு இப்படி பயமுறுத்துவது நியாயமா? மெத்தப்படித்து மேன்மைகொண்ட நீக்கள் கொஞ்சம் கருணைகாட்டி இருக்கலாம். இவ்வளவு படித்ததில் உங்களுக்கு வார்த்தைகள் வாக்கியங்களை நன்றாகப் படிக்க வருகிறது என்பது ஐயம்திரிபற தெளிவாகிறது வாழ்த்துக்கள். சரியான எழுத்தும் அல்லாததும் ’தொனியின் மூலம்’ எதிர்காலத்தில் பிடிபடக்கூடும். 

<ஒரு வேளை இணைய இலக்கிய மும்மூர்த்திகள் மேலிருக்கும் கடுப்புதான் சுஜாதா மேல் பொசிகிறதோ, என்னவோ.>

<பள்ளிக்காலத்தில் மிகவும் பிடித்த சுஜாதா, தீவிர இலக்கிய அறிமுகத்திற்குப் பின் பிடிக்கும் பிடிக்காது என்கிற ஒற்றைப் பெயர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.> Wednesday, August 31, 2011 சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ

20.10.10க்கும் 20.01.12க்கும் இடையிலான இதை என்னவென்று சொல்வது?

விமலாதித்த மாமல்லன்
கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல், மனசாட்சியுள்ள இலக்கியவாதிகளை அல்லாடவைக்கும் இறவா தமிழ் ஆளுமைகள் கண்ணதாசன் ஜெயகாந்தன் சுஜாதா
https://twitter.com/#!/maamallan/status/2598099004428288

Paying Taxes to Caesar

13Later they sent some of the Pharisees and Herodians to Jesus to catch him in his words.14They came to him and said, “Teacher, we know you are a man of integrity. You aren’t swayed by men, because you pay no attention to who they are; but you teach the way of God in accordance with the truth. Is it right to pay taxes to Caesar or not? 15Should we pay or shouldn’t we?”

But Jesus knew their hypocrisy. “Why are you trying to trap me?” he asked. “Bring me a denarius and let me look at it.” 16They brought the coin, and he asked them, “Whose portrait is this? And whose inscription?”

“Caesar’s,” they replied.

17Then Jesus said to them, “Give to Caesar what is Caesar’s and to God what is God’s.”


அது சரி ஏசு கூறிய ’வார்த்தைகள்,’ நேரடி சாட்சிகளாய் இருந்த அப்போஸ்தலர்களின் வார்த்தைகளில், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய சுவிசேஷமாய் வெளிப்படும்போதுதான் எத்துனை வேறுபாடுகள். என்றாலும் ’சாராம்சம்’ மட்டும் எப்படி மாறவே இல்லை? 

ஞாயிறுதோறும் மண்டியிடுவதால் வாசகம் கிட்டலாம் அடுத்தவன் மூலம் அறிமுகம் கிடைப்பதுபோல. தொனி பிடிபட ’உள்ளே’தான் தேடியாகவேண்டும். 

கண்டடைதல் வாதத்தால் சாத்தியமில்லை எனும்போது விதண்டாவாதத்தில் சாராம்சம் எப்படி பிடிபடக்கூடும்? 

இனி இந்தக் கட்டுரையை முதல் வரிக்குத் திரும்பச் சென்று படிக்கவும் ( நன்றி: மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல - சுஜாதா)