25 August 2011

நான் சில விஷயங்களை விளக்குகிறேன் - பாப்லோ நெரூதா

ஆகஸ்ட் 1983
Pablo Neruda 
(July 12, 1904 – September 23, 1973 / Parral / Chile)

நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
பாப்லோ நெரூதா

நீங்கள் கேட்கப்போகிறீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே போயின?
மேலும் அன்பின் இதழ்களின் மாயாவாதம்?
மற்றும் மழை மறுபடியும் தன் சொற்களால் அறைந்து வீசி
அவற்றைத் துளைகளாலும் பறவைகளாலும் அகழ்ந்தது பற்றி?

சொல்கிறேன் எல்லாச் செய்திகளையும் உங்களுக்கு.
ஒரு புறநகரில் நான் வசித்தேன்
மேட்ரிட்டின் ஒரு புறநகரில்
கடிகாரங்களுடன், மணிகளுடன், மரங்களுடன்.

அங்கிருந்து நீங்கள் பார்க்க முடியும்
காஸ்டைலின் உலர்ந்த முகத்தை;
ஒரு தோல் சமுத்திரம்
                                                                      என் வீடு

மலர்களின் வீடென்றும் அழைக்கப்பட்டது, ஏன் எனில்
ஒவ்வொரு பிளவிலும் ஜெரேனிய மலர்கள் விரிந்தன;
அதன் நாய்கள் மற்றும் குழந்தைகளுடன்
அது ஒரு அழகிய வீடாயிருந்தது.     
                                                                     நினைவிருக்கிறதா ராவுல்?
ரஃபேல்?
                                                                    ஃபெடரிக்கோ உனக்கு நினைவிருக்கிறதா?
பூமிக்கடியிலிருந்து
என் பால்கனியின் மீது ஜூன்மாத வெளிச்சம் உன் வாயில்
பூக்களை மூழ்கடித்ததே?
                                                                    சகோதரனே என் சகோதரனே!

எல்லாமும் ஆர்ப்பரிக்கும் பெருங்குரல்களுடன், வியாபாரங்களின் உப்பு,
குவிக்கப்பட்ட துடிக்கும் ரொட்டிகள்
ஆர்குவின் புறநகரில் அதன் சிலையுடன்
என் கடைகள்
மீன்களின் சுழிப்பில் இறைத்து ஊற்றப்பட்ட மைக்கிணறு போலிருந்தது.

கரண்டிகளுக்குள் எண்ணெய் வழிந்தது.
தெருக்களை நிரப்பி வீங்கிற்று
கைகளின், கால்களின் ஆழ்ந்த பேரோசை
மீட்டர்கள், லிட்டர்கள், வாழ்வின்
துல்லியமான அளவை.
                                                                             அடுக்கப்பட்ட மீன்கள்,
காற்றின் திசைகாட்டி தடுமாறும் ஒரு சில்லிட்ட சூரியனுடன்
கூரைகளின் திண்மை
நெகிழ்வாய், அலைவுறும் தந்தத்தன்மையுடன் உருளைக் கிழங்குகள்
அலைக்குமேல் அலையாய் தக்காளிகள் கடலுக்குள் உருண்டபடி.

ஒருநாள் காலை எல்லாம் பற்றி எரிந்தது
ஒரு விடியலில் பெரும் தீ
நிலத்திலிருந்து தாவிற்று
வாழும் மனிதர்களை விழுங்கியபடி -
மேலும் அப்போதிருந்து தீ
வெடிமருந்து அப்போதிருந்து,
அதன் பிறகெல்லாம் ரத்தம்.
கொள்ளைக்காரர்கள் விமானங்களுடன் கறுப்பர்களுடன்
கொள்ளைக்காரர்கள் விரல் மோதிரங்களுடன் மற்றும் இளவரசிகளுடன்
ஆசீர்வாதங்களை இறைத்தபடி கறுப்புப் பாதிரிமார்களுடன்
கொள்ளைக்காரர்கள்
வானின் வழியாய் வந்தனர் குழந்தைகளைக் கொல்ல.
பின் குழந்தைகளின் குருதி தெருக்களில் ஓடியது
அலட்டல் சிறிதுமின்றி, குழந்தைகளின் குருதியைப்போல.

ஓநாய்கள் வெறுக்கும் ஓநாய்கள்
காய்ந்த முட்புதர்கள் கடித்துக் காறி உமிழும் கற்கள்
வீரியன்களே வெறுக்கும் வீரியன்கள்!

முகத்துக்கு முன் உன்னுடன் நான்
ஸ்பெயினின் குருதி ஒரு அலையென உயர்ந்து
உன்னை கர்வங்களின், கத்திகளின் ஒரு அலையில்
மூழ்கடித்ததைப் பார்த்தேன்!

துரோகமிக்க 
ராணுவ அதிகாரிகளே:
வந்து பாருங்கள் என் உடைந்த வீட்டை
நொறுங்கிய ஸ்பெயினைப் பாருங்கள்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எரியும் உலோகம் வழிகிறது.
மலர்களுக்குப் பதிலாக,
ஸ்பெயினின் ஒவ்வொரு மூட்டிலிருந்தும் 
ஸ்பெயின் வெளிவருகிறது.
ஒவ்வொரு இறந்த குழந்தைகளிலிருந்தும் கண்களுடன் ஒரு துப்பாக்கி.
குண்டுகள் உருவாகின்றன ஒவ்வொரு குற்றத்திலிருந்தும்
அவை ஒரு நாள்
உம் இதயத்தின் மையத்தைத் தேடும்.

மேலும் நீங்கள் கேட்பீர்கள்: ஏன் அவனின் கவிதை
மலர்களைப் ப்ற்றியும் கனவுகளைப் பற்றியும்
அவன் சொந்த தேசத்தின் பெரும் எரிமலைகளைப் பற்றியும் பேசவில்லை என்று,
வந்து பாருங்கள் தெருக்களில் குருதியை

வந்து பாருங்கள்
குருதியை தெருக்களில்
வந்து பாருங்கள் குருதியை
தெருக்களில்.

***
ஸ்பானிய மூலம். ஆங்கிலம் வழி தமிழில்: பிரம்மராஜன்
இக்கவிதை Nathaniel தொகுத்த Tarn Pablo Neruda-Selected Poems என்ற பெங்குவின் விளியீட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.

I'm Explaining a Few Things
Pablo Neruda

You are going to ask: and where are the lilacs?
and the poppy-petalled metaphysics?
and the rain repeatedly spattering
its words and drilling them full
of apertures and birds?

I'll tell you all the news.
I lived in a suburb,
a suburb of Madrid, with bells,
and clocks, and trees.

From there you could look out
over Castille's dry face:
a leather ocean.
My house was called
the house of flowers, because in every cranny
geraniums burst: it was
a good-looking house
with its dogs and children.
Remember, Raul?
Eh, Rafel? Federico, do you remember
from under the ground
my balconies on which
the light of June drowned flowers in your mouth?
Brother, my brother!
Everything
loud with big voices, the salt of merchandises,
pile-ups of palpitating bread,
the stalls of my suburb of Arguelles with its statue
like a drained inkwell in a swirl of hake:
oil flowed into spoons,
a deep baying
of feet and hands swelled in the streets,
metres, litres, the sharp
measure of life,
stacked-up fish,
the texture of roofs with a cold sun in which
the weather vane falters,
the fine, frenzied ivory of potatoes,
wave on wave of tomatoes rolling down the sea.

And one morning all that was burning,
one morning the bonfires
leapt out of the earth
devouring human beings --
and from then on fire,
gunpowder from then on,
and from then on blood.
Bandits with planes and Moors,
bandits with finger-rings and duchesses,
bandits with black friars spattering blessings
came through the sky to kill children
and the blood of children ran through the streets
without fuss, like children's blood.

Jackals that the jackals would despise,
stones that the dry thistle would bite on and spit out,
vipers that the vipers would abominate!

Face to face with you I have seen the blood
of Spain tower like a tide
to drown you in one wave
of pride and knives!

Treacherous
generals:
see my dead house,
look at broken Spain :
from every house burning metal flows
instead of flowers,
from every socket of Spain
Spain emerges
and from every dead child a rifle with eyes,
and from every crime bullets are born
which will one day find
the bull's eye of your hearts.

And you'll ask: why doesn't his poetry
speak of dreams and leaves
and the great volcanoes of his native land?

Come and see the blood in the streets.
Come and see
The blood in the streets.
Come and see the blood
In the streets!

***

பிகு: கறுப்பு ஜூலை 1983 நடந்து முடிந்திருந்த பின்னணியில் இக்கவிதையைப் படிக்க நேர்ந்தவர்களின் மனநிலையைக் கற்பனை செய்துகொள்ளவும்.