28 August 2011

சொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.


தமிழினி வசந்தகுமார் போன்றவர்கள் சொல்வதுபோல் அல்லது நம்புவதுபோல் நிஜமாகவே ஜெயமோகனுக்கு ஏராளமான துறைகளில் ஆழ்ந்த அறிவு உண்டா அல்லது குறைந்தப்ட்சமான மேலோட்டமான புரிதலாவது உண்டா?

அல்லது, தனக்குத்தெரியாத விஷயம் என்றாலும் பத்துப்பதினைந்து நாட்களில் அது தொடர்பான புத்தங்களைப் படித்து, நிபுணத்துவத்துடன் விவாதிக்கும் அளவிற்குத் திறமையை வளர்த்துக்கொள்ளும் திறமை கொண்டவர் என்பது பெரியவிஷயம் இல்லையா என்றான் தமிழினி வசந்தகுமார். 

(அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்) <அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது.>

அடுத்த சட்ட திருத்தத்திற்கு அவசியமேற்படுகையில் இந்திய அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அணுகவேண்டிய அல்லாடி சந்தேகமே இல்லாமல் ஜெயமோகன்தான்.

ஒரேடியாக அப்படியும் சொல்லிவிட முடியாது. எதிர்கட்சி பற்றி யாரேனும் கேள்விகேட்டுவிட்டால் உடனே

<இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

இன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் தேசத்தை அழிக்கும் மாபெரும் ஊழல்களை மௌனமாகப் புதைக்க நினைக்கிறார்கள்.>


இதைப்படித்தால், வசைபாடி கனபாடிகளாய், இலக்கியத்தில் கால் பதிக்கத் துடிக்கும் வினவு மகஇக ஏழர போன்ற நக்ஸலைட்டுகள்போல் ஜெயமோகனும் சிலிர்த்தெழுந்து, இந்தியாவில் இருப்பது போலி பாராளுமன்ற ஜனநாயகம் என்று சொல்லிவிடுவாரோ என்று பதைக்கத் தொடங்கிவிடும். 

நல்லவேளையாக அவர் நக்ஸலைட் ஆகிவிடவில்லை. பரவாயில்லை இன்னும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றித்தான் அதை உய்வித்து ஒழுங்காக நடத்திச்செல்வது எப்படி என்பதைப் பற்றித்தான் தமது பிஸி சின்மா ஷெட்யூலுக்கு நடுவிலும் சிந்தித்தவண்னம் இருக்கிறார் என்பதற்கு இந்த லோக்பால் பற்றிய விளக்கம் நிம்மதி தருகிறது.

<அதைத் தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் ஒரு நேரடி மக்கள் பங்கேற்பு மட்டுமே. லோக்பால் அதையே கோருகிறது..>

அந்த சினிமாவில் அவர் வில்லன் இந்த சினிமாவில் இவர் வில்லன் அவருக்கு சூட்டாகற டயலாக் அங்கே இவருக்கு சூட்டாக சீன் டயலாக் இங்கே என்பதாக  முன்முடிவுகட்டிக்கொண்டு எழுதப்படும் அறைகுறை கட்டுரைகளை சிந்தனைப் பேரெழுச்சியாய் பாராட்ட ஒரு பாலைவனப் பெருவெளி. 

இதற்குள், அருந்ததி அன்னா ஹசாரேவை விமர்சித்துக் கட்டுரை எழுதினால் அதற்கு சேறடிப்பு.

<அருந்ததி வெளிவராமல் இருக்கமுடியாதென நான் அறிவேன், ஆகவேதான் சொன்னேன். அந்தப் பெண்மணியின் இலக்கு விளம்பரம் மட்டுமே.>


கிடைத்தது சான்ஸ் என்று ஹசார் பதிவு எழுதி ஹசாரே உண்ணாவிரதம் முடிக்கும் முன்பாக புக்கு போட்டால் அருந்ததிக்கு நாம் அடித்த சேறு நம்மேலும் விழுவது எவன் கண்ணிலும் படாது ஏனென்றால் சுற்றி இருப்பவை மக்கு முண்டங்கள்தானே என்கிற தன்னம்பிக்கை.

ஊழல் என்பது பற்றிய சமகாலப் பல்துறை சிந்தனை மேதையின் அடிப்படைப் புரிதல்தான் என்ன?

பொதுமக்கள் அன்றாடம் படும் லஞ்ச அலைக்கழிப்பை சங்கர் படங்கள் பார்த்து எழும் அறச்சீற்றத்தைத் தாண்டி அல்லது ஆட்டோக்காரன் மீட்டர் போடாமல் ஊழல் பண்ணறான் என்பதைத்தாண்டி ஏதேனும் தெரியுமா என்பதே தினப்படிப் பொங்கல்களை மேய்ந்ததற்கே சந்தேகமாக இருக்கிறது.

ஊழலில் ஈடுபடுவோர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டுமே என்பது எவ்வளவு எளிமையான புரிதல். சுடுவதற்கு இலக்காய் திருப்பிச்சுடாத அட்டையொன்றை தூர நிறுத்தி சுட்டுப்பார்த்துக் கொள்வதில்தான் எத்துனை சந்தோஷம். வாழ்வு, பயிற்சியல்ல சமர்.

சமீபத்தில் பரபரப்புக்கு உள்ளான சரவணா ஸ்டோர்ஸ் வருமானவரி ரெய்டைப் படித்தவர்களில் ‘பாத்தியா என்னமாக் கொள்ள அடிச்சிருக்கான்’ என்று சொல்லிப்போனவர்கள் ஏராளமானோர். ஆனால் பில்லில்லாமல் துண்டுச்சீட்டில் வாங்க முண்டியோர் அடுத்த கிரகத்தில் இருந்து வந்தவர்களா என்ன?

எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகம் வாங்க முண்டுகிற கூட்டத்தில் 14 பர்செண்ட் VAT  வரும் என்றபின்னும் கட்டாயமாக பில் வேண்டும் என்று கேட்டு வாங்குபவர்கள் எத்துனை பேர்? இவர்களென்ன அன்றையக் கூலியில் மளிகை வாங்கிப் பொங்கியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான கீழ்த்தட்டு மக்களா?

இதே அறச்சீற்ற மேல்தட்டு மத்தியதர கும்பல்தான் விவசாயிக்கு இலவச மின்சாரம், சேரிக்கு இலவசங்கள் என எல்லாமே நம்ம வரிப்பணத்திலிருந்தே போகிறதே! ஓட்டுக்காக ஓஸி கொடுத்து ஜனங்களை சோம்பேரியாய் பிச்சைக்காரர்களாய் ஆக்குகிறார்களே என்று வாய்கிழியத் தூற்றிவிட்டு, எல்லோருக்கும் கலர் டிவி என்றதும் ஏற்கெனவே இரண்டு இருந்தால் என்ன மூன்றாவதாய் ஒன்று இருந்துவிட்டுப்போகட்டுமே எனக் கூச்சமே இல்லாமல் யாசகம் ஏற்றது.

மக்களின் வரிப்பணத்தைத் திட்டங்கள் என்கிற பெயரில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தின்று கொழுக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் அது நம் ஊழலை நம்மிடமிருந்து மறைக்க, நாமே அணிந்துகொள்ளும் முகமூடி ஆகிவிடக்கூடாது.

ஒன்றுக்கு மேல் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருந்தும் இன்கம்டாக்ஸ் ரிடனில் ஒன்றை மட்டுமே அறிவிப்போர்தானே அநேகம்? செக்கில் கொடுப்பதாய் இருந்தால் இந்த பெயரில் கொடுக்கவும் என சொல்லாதோர் எத்துனைபேர்?

சினிமாவில் வாங்கும் பணம் எல்லாமே செக்கில் கொடுக்கபட்டவையா? பலசமயம் சினிமா செக்குகள் பவுன்ஸாகிவிடும் என்றாலும், பக்காவானச் செக்காகவேக் கொடுக்கும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் அவ்வளவும் வருமான வரித்துறைக்கு முறையாக அறிவிக்கப்பட்டவைதானா?

சினிமாத்துறையில் வெற்று வெள்ளைத்தாள்களில் வாங்கப்படும் கையெழுத்துகளில் தொடர்புடைய பணம் எவ்வளவு கோடி எனத் தெரியுமா? உதவி இயக்குநர்களிடமும் கன்னி இயக்குநர்களிடம் வாங்கப்படும் கையெழுத்துகள் கொடுக்கப்பட்ட சம்பளத்தைவிடக் கூடுதலாகவே ஏன் இருக்கின்றன?

மம்முட்டியும் மோகன்லாலும் எப்போதிலிருந்து அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ ஆனார்கள்?

கோட்டா ஸிஸ்டம் என்கிற குறுக்குவழிதான் நாட்டைக்கெடுக்கிறது, கல்வியின் தரத்தைக் கெடுக்கிறது இத்துனூண்டு மார்க்கெடுத்த இவன்லாம்  டாக்டராவும் இன்ஜினியராவும் ஆனா நாடு உருப்டா மாதிரிதான் என்று முக்கிமுனகுவோர், மெரிட்டில் நுழைய முடியாத மதிப்பெண்ணை லட்சங்களில் ஈடுகட்டும்போது அது ஏன் குறுக்குவழியாய், தரம் குறைந்த கல்வித் தகுதியாய் தோன்றுவதில்லை. ஆனால் கல்வி, லாபம் ஈட்டும் தொழிலாக ஆகிவிட்டதாய் கூசாமல் வாய்கிழியப் பேசமட்டும் முடிவது எப்படி?

அன்னாவின் பின்னால் இருப்போரில் இந்த அறச்சீற்ற குறுக்குவழிக் கும்பலைச்சேர்ந்தோர் எத்துனைபேர்?

தொழிலதிபர்கள் எந்த ஆட்சிக்கும் ஏன் கப்பம் கட்டத்தயாராய் இருக்கிறார்கள்?காரணம் வெறும் வற்புறுத்தலா? இல்லை காபந்தா?

சத்தியத்தின் சத்தியம் சோதனைக்கு உள்ளாகும்வரை அதன் அதிபர் சத்தியத்தின் ஆந்திர மாடலாக அல்லவா பவனி வந்தார்.

வெள்ளைக்காலரின் லட்சணமே இதுதான் என்றால் கரிபோட்டு உருக்கித் தயாரிக்கும் கனரக இரும்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வண்டிவண்டியாய் கொண்டுசெல்லப்படும் விலைமிகுந்த இரும்போ அல்லது அதை உருவாக்கத்தேவையான கச்சாப்பொருளான இரும்புக் கழிவுகளோ எதுவானாலும் பொருளுக்கான இன்வாய்ஸ் வண்டியுடன் போகவேண்டும் என்பது சட்டம் - இனி உதயமாகப்போகும் ஜன்லோக்பால் அல்ல - ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்டம். வண்டியோடு இன்வாய்ஸும் போகும். சேருமிடம் சேர்ந்தபின் சென்ற தடையமே இல்லாமல் மாயமாய் மறைந்தும் போய்விடும். இரும்பின் ஒன்றுவிட்ட சகோதர்களாய் பிளாஸ்டிக் முதலாக நிறைய பொருட்கள் உள்ளன.

”பிஸினஸ்னா சும்மாவா? கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும்”. மைக்கும் கேமிராவும் எதிர்படாதவரை, இந்த வாக்கியம் சர்வசாதாரணமாக எல்லா இந்தியர்களுக்கும் ஏற்புடையதுதான்.

அன்னாவுக்கு பேராதரவைப் பேப்பரில் அளித்து தங்களை பிம்ப சுத்தி செய்துள்ளும் தொழில் நிறுவனங்களில் உண்மையான பேலன்ஸ் ஷீட்டை சமர்ப்பிப்பவை எத்துனை?

பேப்பரில் சரியாய் இருப்பவர் பெரிய காந்தி.

உள்ள லாபத்தை வங்கியில் கடன் பெறுவதற்காய்க் கூட்டிக்காட்டுவது நடைமுறையில் எப்படி சகஜமாய் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகிவிட்டது? பிம்பத்தைத்தூக்கிக் காட்டி விளம்பரப்படுத்துவது வியாபாரம். முதலீட்டை, நிறுவனத்தின் சொத்தை, பொருளின் கையிருப்பை பூதாகாரப்படுத்திக் காட்டி வங்கியில் கடன் பெற்று தொழில் செய்து லாபம் பார்ப்பது வெள்ளை ஊழலோ? தொழில் தடுமாறும்போது வங்கிக் கடன் மோசடியாய் ஒரே இரவில் மாறிவிடுகிறதோ?

தோழர்களின் நிரந்தர சந்தாக் கூவல், தொழிலாளியைச் சுரண்டி முதலாளி கொழுக்கிறான் என்பதுதான். காலம் முன்னேறிவிட்டது. இன்று சகல தில்லுமுல்லும் செய்வதால்தான் தொழிலில் பிழைக்க முடிகிறது என்பதுதான் அதிபர்களின் சால்ஜாப்பு. 

ஒருவேளை நிறுவனங்கள்தான் இப்படியோ? மற்றபடி எல்லோரும் புண்ணிய ஆத்மாக்களோ?

மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தனிநபர்களில் வக்கீல் ஆடிட்டர் மருத்துவர் என்று அடுக்கிக்கொண்டே போகக்கூடிய தொழில்களில் எத்துனைபேர் வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுக்கிறார்கள். கணக்குவழக்கெல்லாம் காற்றில்தான். கம்ப்யூட்டர் வைத்து நவீனமயமானவர் எனில் வாங்கியதில் பேர்பாதிக்கு மட்டுமே ரசீது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பாராளுமன்றத்தால்  அங்கீகரிக்கப்பட்ட மூன்று அம்சங்கள்.

1 சிடிசன்’ஸ் சார்ட்டர் (அரசு நிறுவனம் குடிமகனுக்கு ஆற்றவேண்டிய கடப்பாடுகள்)

(இது ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலும் கட்டாயமாக அலுவலகத்தின் நுழைவிலேயே பிரதானமாய் பார்வைக்கு நன்கு படும்விதமாய் வைத்திருக்கப்படல் வேண்டும் என்பது ஏற்கெனவே அமலில் இருந்துவருவது.) 
A Citizens' Charter represents the commitment of the Organisation towards standard, quality and time frame of service delivery, grievance redress mechanism, transparency and accountability. Department of Administrative Reforms and Public Grievances, in the Ministry of Personnel, Public Grievances and Pensions, Government of India, in its efforts to provide more responsive and citizen-friendly governance coordinates the efforts to formulate and operationalise Citizens' Charters. Various Central Government Ministries/ Departments/ Organisations have brought out their Citizens' Charters. With a view to ensure effective implementation of Citizens' Charter, Nodal Officers have been appointed in the concerned Central Government Ministries/ Departments/ Organisations.

2.அரசின் கீழ்மட்ட அதிகாரிகளை ஜன்லோக்பாலின் கீழும் கொண்டுவருதற்கான தோதான வழிமுறை.

கீழ்மட்ட அதிகாரி, வாங்குகிற சம்பளத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இழுத்தடித்து இவ்வளவு கொடுத்தால்தான் கையெழுத்து என்று இம்சிப்பது மட்டுமே ஊழல் என்பது சட்டெனப் பிரபலமாய் எடுபடும் விஷயம். அதைத் தடுக்க ஒரு சட்டம் என்றதும் ஆரவார ஆமோதிப்பு வருவதில் என்ன ஆச்சரியம்?

சிலவருடங்களாகவே, மத்திய / மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளுக்குக் குறுஞ்செய்தியில் புகார் கொடுத்தே,இம்சிக்கும் அரசு அதிகாரியைக் கொட்டடியில் தள்ள முடியும். சோம்பேரிகளின் / திருடர்களின் சுரக்கிற குணமும் போய்த்தொலைகிறது அவன் செய்கிற தப்பிற்குப் புள்ளைக்குட்டிகள் கஷ்டப்படும். அந்தப் பாவம் நமக்கெதுக்கு என்கிற இரக்ககுணமுமே புகார்களைப் பரவலாய்க் குறைக்கின்றன.


லோக்அயுக்தா ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் மாநிலங்களின் பட்டியல். Lokayukta, Andhra Pradesh
Lokayukta, Assam
Lokayukta, Bihar
Lok Aayog Adhyadesh(ordinance), Chattisgarh
Lokayukta, Delhi
Lokayukta, Gujarat
[Lokayukta, Jharkhand - untraced/unavailable online]
Lokayukta, Haryana
Lokayukta, Himachal Pradesh
Lokayukta, Karnataka
Lokayukta, Kerala
Lokayukta, Madhya Pradesh
Lokayukta, Maharashtra
Lokpal, Orissa
Lokpal, Punjab
Lokayukta, Rajasthan
Lokayukta, Uttarakhand - adopted from Uttar Pradesh
Lokayukta, Uttar Pradesh

அண்ணா கடைசி நிமிடம் வரை உறுதியாக இருந்த மூன்று கோரிக்கைகளும் பாராளுமன்றத்தால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளன. ஒன்று, கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பாலுக்குள் கொண்டுவருவது, இரண்டு, ஊழலை தண்டிப்பதற்கான சட்ட வரையறை, மூன்று, மாநிலங்கள் முழுக்க லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது. மூன்றையுமே இந்தியப்பாராளுமன்றம் கொள்கையளவில் அங்கீகரித்து வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு வரலாற்றுத்தருணம்

ஆனால் பாராளுமன்றம் அங்கீகரித்ததென்னவோ

This House agrees in principle on the following issues:
(a) Citizens Charter,
(b) Lower bureaucracy also to be under Lokpal through appropriate mechanism,
(c) Establishment of a Lokayukta in the States;
And further resolves to transmit the proceedings to the Department-related Standing Committee for its perusal while formulating its recommendations for a Lokpal Bill.”

ரஜினி ரசிகனின் மனநிலையில், வெற்றிபெற்ற உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சகட்டக் கொண்டாட்டத்தில் தீர்மானம் என்னவென்பதுகூட சரியாகத் தெரியவில்லையா? 

முதலாவதான சிடிசன்’ஸ் சார்டர் எங்கே போயிற்று? அடுத்து,

<ஒன்று, கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பாலுக்குள் கொண்டுவருவது, இரண்டு, ஊழலை தண்டிப்பதற்கான சட்ட வரையறை,>

ஒன்றையே அல்லது ஒன்றின் நீட்சியையே இரண்டாவதா எழுதிவிட்டால் இரண்டாவது தீர்மானமாகிவிடுமா?

பதிப்பகத்தின் எடிட்டர் மீதி பாதியை இட்டுகட்டி எழுதி சரிசெய்வார் என்று நம்புவோமாக.

ஒரு காலத்தில் நாத்திகம் சர்வரோக நிவாரணி, அப்புறம் சமத்துவம் சர்வரோக நிவாரணி, லேட்டஸ்டு ஊழலொழிப்பு சர்வரோக நிவாரணி.

சொறி சிரங்கு அரிப்பு படை  மட்டும் மனிதகுலத்திற்கு நிரந்தரம்.