07 August 2011

வினவாதே!


<ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.>

மிகச்சரியான அவதானிப்பு என்று வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். 

ஆனால் இது என்ன, முரடன்முத்துவைப் பிச்சையெடுக்க விடுவதுபோல்? அதுவும் கட்டுரையின் தொடக்கத்திலேயே. என்ன சொல்ல வருகிறோம் என்பதுகூடப் புரியாமலேயே எழுதவருவதால் வரும் பிரச்சனை.

<நிலை ஓய்வில் ஒதுங்கிய மனவேளையில், புலத்தேவைகள் சற்றே பதுங்கிய நேரத்தில், புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?> 

இப்படியே கணித சூத்திரம்போல் பாவப்பட்ட பாட்டாளிகள் பகுத்துப் பிரித்துப் படித்தாகவேண்டியதுபோல எழுதிக்கொண்டே இருந்தால் எப்படி புரட்சி பிடுங்கிக்கொண்டு அடிக்கும்.

நான்காவது ஆண்டில் இன்னும் வளமாக வாழ்த்துகள். 

எளிய விண்ணப்பம், இப்படியே, தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நமீதா ஆற்றிக்கொண்டிருக்கும் முன்னெடுப்புகளைப் பற்றியும் விரித்து எழுதினால் கண்ணற்ற தமிழனுக்குக் கலங்கரை விளக்கமாக உதவக்கூடும்.