04 August 2011

அக்கினிக்குஞ்சாக அறிவுரை

அடுத்த ஒரு வருஷத்துக்கு, ப்ளாக் எழுதறதைக் கொஞ்சம் தள்ளி வெய்ங்க. யூ கேன் டூ வொண்டர்ஸ். உங்களால செய்ய முடியாதுன்னு இல்லை. வேரீட் இண்ட்ரஸ்ட்ஸ்ல உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகுது. நிறைய விஷயங்கள் ப்ரி-ஆக்குப்பை பண்றதால வொர்க்குல உங்களால கான்ஸண்ட்ரேட் பண்ன முடியலை. ட்ரெய்ன்ல வரும்போது போகும்போதும் உங்க லேப்டாப்பை அஃபீஷியல் ஒர்க்குக்காக யூஸ் பண்ணலாம். கிட்டத்தட்ட ஒன்ற ஒன்ற மூணுமணி நேரம் எவ்ளோ ப்ரொடக்டிவா யூஸ் ஆகும். சர்வீஸ் டேக்ஸ்ஸுல டிக் அவுட் பண்ணி எத்தனைப்பேரை அல்லாட வெச்சீங்க. அதையே பாஸிடிவா பண்றதுக்கு சான்ஸ் கெடைச்சிருக்கு. பட் உங்க மனசு இங்கயே இல்லை. எல்லா இஷ்யூஸையும் அங்க அங்கையே டக்கு டக்குன்னு முடிச்சிட்டு உங்க விஷயத்துக்குப் போகப்பாக்கறீங்க. ஒரே சமயத்துல இன்வெஸ்டிகேட்டராவும் ஆடிட்டராவும் ஃபங்ஷன்பண்ற அளவுக்குப் பொடன்ஷியல் உள்ள எடம் இது.  அதுக்கான திறமையும் உங்குளுக்கு இருக்கு.கெடச்சிருக்குற சான்ஸை முழுசா யூஸ் பண்ணினா எத்தனை இஷ்யூஸைத் தோண்டி எடுக்கலாம். எல்லாரையும் உட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டலாம். அதுக்கு ஒரே வழி யூ திங்க் எபவ்ட் ஒர்க் அண்ட் ஃபர்கெட் எபவுட் ரைட்டிங். அட்லீஸ்ட் ஃபார் ஒன் இயர்.

தவறவிட்ட பதினாறு வருஷங்களை இன்னும் ஆறே மாத்தில் பிடித்துவிட வேண்டும் என்கிற வெறியை இதைவிடவும் சிறப்பாக வேறு எப்படிச் சொல்லியும் தூண்டிவிட முடியாது. நன்றி சார்.