29 August 2011

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?
சுஜாதா இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ்ல பெயர்க்காரணம் சொன்னதை நான் எழுதி நீங்கள் பஸ் விட்டதாகக்கூட நினைவு.

<‘அதுக்கென்ன செய்வது, எல்லாருமேதான் ஊழல்னு’ சொல்வதன் மூலம் ஊத்தி மூட நினைத்தால், அப்படியே ஆகட்டும் :-)>

சிறு சிறு சமரசங்கள் இல்லாமல் எவனாலும் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது என்பது எப்படி ஊழலுக்கு ஆதரவாய்ப் போய்விடக்கூடாதோ அதே போல ஊழலுக்கு எதிரான பொங்கலில் - ஊழல் ஏதோ மற்றவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்று நம் முந்திரிப் பருப்புகளையும் மறைத்துவிடலாகாது. ஸ்மைலி.

@ஜ்யோவ்ராம் சுந்தர்:

<இம்மாதிரியான தகவல்களை எல்லா அரசு அலுவலக வாசலிலும் வைத்திருக்கிறார்கள்.>

அதைத்தான் நானும் கேட்கிறேன். எங்கே புகார் கொடுக்க வேண்டும் என்று வைத்திருப்பது எதற்கு பூப்போட்டு பூஜை செய்யவா?

உண்ணாவிரதம் மூலம் அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் ஒன்றுதான் இந்தப் புகார் கொடுக்கும் தகவலையும் உள்ளடக்கிய சிடிசன்’ஸ் சார்ட்டர். 

சாதனையாய் சதிராடும் ஜெயமோனுக்கு இந்தக் கோரிக்கைன் பற்றியே தெரியாமல் 60 கட்டுரைகள் எழுதிக் கொண்டாடுகிறார். இந்த சிடிசன்’ஸ் சார்ட்டர் எல்லா அலுவலகங்களிலும் கனகாலமாக வைத்திருப்பது புகார் கொடுக்கத்தான். இது ஏதோ அன்னா உண்னாவிரதமிருந்து அடைந்த வெற்றியெல்லாம் இல்லை.

பார்வைக்குப் படும்படியாய் போர்டு வைத்தும் ஏன் பெரும்பாலோர் புகார் கொடுப்பதில்லை. அதிகாரி கொலை செய்துவிடுவார் என்கிற பயத்தினாலா? இல்லை உடனடியாக வேலை முடிய வேண்டும். அல்லது ஐயோ பாவம் ஒழிஞ்சி போரான் செண்டிமெண்ட். இது ஏன் வருகிறது இவனைப்போலவேதான் ’தான்’ இன்னொரு இடத்தில் இருக்கிறோம் வேரொரு ரூபத்தில் தவறு செய்கிறோம் என்கிற மத்தியதரவவர்க்க பூவாதலையா வாழ்க்கையின் குறுகுறுப்பு.

<இதைத்தான் பேராசை என்கிறேன்.>

அதையேதான் நானும் எவனுக்குத்தான் பேராசை இல்லை என்று கேட்கிறேன்.

அரசு ஏற்கெனவே ஊழலைக் கட்டுப்படுத்த நிறைய வழிகளை வைத்திருக்கிறது. அதை எடுத்து செயலாற்றுவது பாதிக்கப்பட்டவனிடம்தான் இருக்கிறது.

ஜன்லோக்பால் வந்தாலும் ஊழலை அதுவே மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிடமுடியுமா என்ன? DVAC CBI CVC போல அது இன்னொரு அமைப்பு. ஒரே வித்தியாசம் அதுவும் அரசின் கையில் இல்லாமல் வேறொரு தனியார் குழுவிடம் இருக்கப்போகிறது. பாதிக்கப்படுபவர்தான் அங்கும் சென்று புகார் கொடுத்தாக வேண்டும். 

ஜன்லோக்பால் தனிக்குழுவில் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த ஊரில் யார் யார் இருக்கப்போகிறார்கள் என்று சொல்லுங்கள். அவர்களிடம் சிபாரிசிற்கு யார் மூலம் அணுகவேண்டும் என்று சொல்ல எத்துனைப் பேர் கிளம்பிவருகிறார்கள் என்று பாருங்கள்.

எல்லாப் பொருளும் விலை குறித்தனவே
கலைப்படம் காரைக்குடிக்கு
கமர்சியல்படன் கான்ஸ்டாண்ட்டிநோபிளுக்கு
- வண்ண நிலவன்