23 August 2011

அன்னா ஹசாரேவும் ஜெயமோகனும் - பார்வைகளும் போர்வைகளும்

அகிம்சாவாதி அன்னா ஹஸாரே பற்றி யாராவது தப்பாகப் பேசினால் கொன்றே போட்டுவிடுவேன்! - ’ஜெயமோகன்’

அன்னா மூன்றுவாரத்திற்கு உண்ணாநோன்பு இருக்கிறார் என்பதற்காக, பேசாநோன்பு எழுதாநோன்பு என்று ஜெயமோகனிடம் எதிபார்ப்பது என்ன நியாயம்?

அன்னாவுக்காக கொடி அசைத்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் அன்னாவுக்காகக் கொடி அசைந்ததா ஜெயமோகன்?

ஜெயமோகன் கதையெழுதி இந்திய ஆன்மாவை உலுக்கிவிட்டதாய்க் காட்டிக்கொள்கிறார். அன்னா இந்திய ஆன்மாவை உலுக்கிவிட்டதாய்க் கதை எழுதிக்கொள்கிறார்.

அண்ணா அண்ணா அண்ணா - எங்கள் 
அண்ணா அண்ணா அண்ணா
-ஒரு காலத்தில் சாதித்த திராவிடக்குரல்

அன்னா அன்னா அன்னா - உங்கள்
அன்ன அன்னா அன்னா
- சம காலத்தில் போதிக்கும் ஞானக்குரல்

ஒரு உண்ணா விரதம் அன்னா! எல்லாக் கெடுதலும் கதம் கதம் - ரஜினி (உய் உய் உய்)

ஏந்துரு இந்தியா ஏந்துரு!- மூச்சுவிடாமல் முப்பது வருடங்களாய் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹசாரே

அன்னா ஒரு எளிமையான மனிதர்! அவர் கூறும் தீர்வுகள் மட்டும் சிக்கலை ஆராய்ந்ததாகவும் சிந்தனாபூர்வமாகவும் ஆழமாகவும் எப்படி இருக்கக்கூடும்? 

அன்னா பின்னால் போகிறவர்களால்கூட அதை நடைமுறைப்படுத்தி நடக்க முடியாது என்பதால்தான் அட்லீஸ்ட் அவர் கூடவாவது போகலாம் என்று வாக் போகிறார்கள் போலும்.

சாமான்ய இந்தியனின் ஆன்மாவைக் கிளறிவிட்ட அன்னா எப்படி சாமான்யராக இருக்க முடியும்? எதையாவது யாராவது கிண்டிக் கொடுக்க மாட்டார்களா என்று காத்திருப்பதே மந்தை இந்தியனின் மகத்தான அடையாளம்.

பிறந்தநாளை விமரிசையாய்க் கொண்டாட ட்ரஸ்டு பணத்தைக் கைமாற்றாய் எடுத்து செலவழித்தது பெரிய குற்றமில்லை. எளிய வாழ்வில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏது இடம்?

நாளைக்கே ஒரு முன்னா வந்து ”அன்னா சொன்னதையெல்லாம் அழி!” இல்லையேல் சாகும்வரை மூன்றுவார உண்ணாவிரதம் என்றால் அதறகும் ஆயிரம்பேர் வண்டி ஏறி வரக்கூடும்.

இவருக்கும் ஒரு வாய்ப்பளித்துப் பார்த்தால் என்ன? யாராவது ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற இந்திய ஜனநாயக நித்திரை மனமே ஏகப்பட்ட கட்சிகளையும் தலைவர்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. 

வெள்ளையுடை அணிந்தவன் கொள்ளையடிக்கமாட்டான் என்று எளிய இந்தியன் நம்புவதாக நம்புவதால்தான் பொதுவாழ்வுக்கு வரும் எல்லோரும் செருப்பைக்கூட வெள்ளைநிறத்திலேயே அணிகின்றனர்.