15 August 2011

ஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!

மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நக்ஸலைட் என்று மார்தட்டும், வினவு மற்றும் மகஇகவின் பிரச்சாரகர் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஏழர என்கிற முகமூடிக்கு பகிரங்க சவால்!
 ஜ்யோவ்ராம் சுந்தர் 

@ 

@ 


 ஏழர 

@ 

 Manikandan 

@ 

இணையத்திற்கு நான் வந்து முதல் பதிவாக இண்டர்வ்யூ http://www.maamallan.com/2010/08/blog-post_16.html எழுதி இன்றோடு ஓராண்டு முடிகிறது.

பதினாறு வருட இடைவெளிக்குப் பின், இவ்வளவு தீவிரமாய் இயங்குவேன் என்று எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இலக்கியச் சிற்றுலகம் என்னை முற்றாக மறந்துவிட்டிருந்தது. வருங்காலம் இவனை மறந்துவிடாதா என்று பெத்த பெயர்கள் உள்ளூர நினைத்து ஏங்குவதும் எனக்குத் தெரிகிறது.

பல முகமூடிகளில் ஒரு முகமூடிக்கு மட்டும் இப்போது சிறப்பு கவனிப்பைக் கொடுப்போம்.

மூட நக்ஸலைட் ஏழரையே! RTI போட்டு 08.03.82 முதல் இன்று வரையிலான சர்வீஸ் ரெக்கார்டைக் கேள். இடைக்காலப் பணி நீக்கம் என்கிற எண்ட்ரி இருக்கிறதா இல்லை 08.07.10 முதல் "Earned Leave" என்கிற எண்ட்ரி இருக்கிறதா எனப்பார்.

இணையத்திலேயே ஃபேஸ்புக்கில் என் அலுவலக சகாக்கள் அநேகம்பேர் உள்ளனர். Central Excise என்று குழுமமே உள்ளது. நான் இடைக்காலப் பணி நீக்கத்தில் இருக்க நேர்ந்தாதா என அவர்களைக் கேள்.

அல்லது திருச்சியில் இருக்கும் உன் ம.க.இ.க தோழரைக் கேள். 

(என்னவோ ஒரு பெண்ணின் புகைப்படம் பிரசுரித்துவிடாதிருக்க ஏதோ மெண்டலை மட்டுமே இரவு தொலைபேசியில் தொங்கிக்கொண்டு தொந்தரவு செய்தேனாம். நான் மதிக்கும் இந்த தோழரைத்தான் முதலில் தொடர்பு கொண்டேன். அவர் உடனே கிடைக்கவில்லை. அடுத்து அவரிடம் கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்துவிடுவார்களா என்ன என உறுதியளித்து, அவரும் வினவு தோழர்களைத் தொடர்புகொண்டு அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என உறுதியளித்தார். இங்கேக் குறிப்பிடப்படும் நபர் யார் என ஏழர! உனக்குத் தெரியும். ஒருவேளை தெரியாதெனில் தோழர் மருதையன் அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்)

அரமண்டையே! ஆறுமாத விடுப்பில் இருந்ததற்கு முன்பாக எனக்கு ஒரு மெமோவாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா என RTI போட்டுக் கேள்.

என் விடுப்பு ரெக்கார்டு மொத்தத்தையும் கேள்.

தேசிய ஒருமைப்பாட்டு சைக்கிள் பயணத்திற்காக 10 டிசம்பர் 1985ஐ ஒட்டிய தேதியிலிருந்து 14 ஏப்ரல் 1986ஐத் தவிர நெடுநாள் விடுப்பில் இருந்தது எப்போது? உண்மையிலேயே 07.07.2011 முதல் 26.12.2011வரைதானா என்று கேள் ஆம் என்று பதில் வரும்.

29.05.10 முதல் 07.07.10 வரை நான் எத்துனை பணி மாற்றல்களுக்கு ஆளானேன் என்று தேதிவாரியாகக் கேள். ஏழுமுறை என்று பதில் வரும்.

ஏன் என்று கேள் Transfer on Administrative Grounds என்று மட்டுமே பதில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

Service Tax, நந்தனம் அலுவலகத்தின் துப்பறியும் பிரிவில் இருந்த எத்துனை கோப்புகளின்மேல் நான் RTI போட்டு கைவசப்படுத்தினேன் என்று கேள்.

RTI போட்டு நான் போட்ட RTI அனைத்தையும் வாங்கிப்பார். அதற்குப் பின்னாலிருக்கும் என் கடுமையான உழைப்பும் திறமையும் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் என் ஆன்மபலமும் தெரியும்.

என்மீது ஏதேனும் குற்றச்சாட்டு உள்ளதா என நானே என் அலுவலகத்தில்  கேட்ட RTI விண்னப்பம் கீழே உள்ளது.

இந்த RTIக்குக் என் அலுவலகம் அளித்த பதிலைப் பார்.
அரசியல் பின்னணியின் பலத்தால் எதிரிகள் என்னை வீழ்த்த நினைக்கையில் நான் என்ன பாண்டுரங்கா பாண்டுரங்கா என்று பாரிஜாதமா பறித்துக்கொண்டு இருக்க முடியும். ஆம் கிடைத்த எந்த புல்லையும் உபயோகித்து போருக்குத் தயாராயிருந்தேன்.

போராளி கோரைப் புல்லாய் நின்றால் அழிக்கப்படுவான், தேவைப்படுகையில் தந்திரோபாயங்களை உபயோகித்து நாணல்போல் வளைந்து கொடுத்துப் போரிடவேண்டும் என்று மா-ஓ-சே-துங் என்ன உனக்கு மட்டுமா சொல்லிவைத்தார். இந்த எனதுப் பாய்ச்சலுக்கானப் பதுங்கலைத்தான் நக்கினேன் விக்கினேன் என்று மனம்பிறழ்ந்த நாய்கள் பேசின.

என்ன பு.ஜ.தொ.முவை கோஷம்போட அணுகவில்லை என்பது வேண்டுமானால் ஒரு குறையாய் இருக்கலாம். துரதிருஷ்டவசமாய் மத்திய அரசு அலுவலகத்தில் வெற்றிலைப்பாக்கு அசோசியேஷனே மிகஅதிகம் என்கிற யதார்த்தம் இளிக்கையில் நக்ஸலைட் தொழிற்சங்கம் கட்டுவது எல்லாம் கொஞ்சம் கஷ்டம்.

ஏழர என்கிற இணையத்தில் எச்சில் துப்பித் திரியும் போலி நக்ஸலைட்டே! நீ சொன்னது பொய்யான அவதூறு மட்டுமே, C.Narasimhan, Inspector of Central Excise, இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பது என் சர்வீஸ் ரெக்காட் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் என்ன செய்ய உத்தேசம்? சும்மா ஊ ஊ என ஊளையிடுவதை நிறுத்தி.....

எவனோ வேலைசெய்யும் இடத்தில் கும்பலாய்ப் போய் கோஷமிடுவது பெரிதா இல்லை தான் வேலை பார்க்கும் இடத்தில் தனித்து நின்று போராடுவ்து பெரிதா?

கலைஞனும் கலகக்காரனும் புத்தகம் படித்து உருவாவதில்லை பிறக்கிறார்கள்.

போடாங்...