21 August 2011

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும் - கடிதம்


S Ravi ****@gmail.com to me
show details 12:14 PM (27 minutes ago)
Dear Sir,

My name is S.Ravi, Engineer Chennai man and now working in Kuwait.

Through one of friend in Kuwait  i heard about you and your site.
My first work in the morning  is to open your site read your postings.
some one need 'courage' to write such an article and live with that.
 I like to meet you when i come to Chennai.

With Best Regards,

S.Ravi
KUWAIT
அன்பான நண்பருக்கு,

நன்றி. 

நேர் சந்திப்பு எல்லாம் அவசியம் இல்லை. அநாவசியமான ஏமாற்றங்களுக்கு உள்ளாக நேரலாம் - இருவரும்.

பொதுவாக எனக்குப் பொறுமை பொதுவெளி நாகரிகம் என்பவையெல்லாம் என்னவென்றே தெரியாது. பிடித்திருந்தால் அல்லது பிடிக்கும்வரை எழுத்தைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது. 

எவ்வளவுதான் ஆத்மார்த்தமான பகுதி எனினும், எழுத்து எழுத்தாளனின் ’ஒரு’ பகுதி மட்டுமே. அதுவே முழுமையான அவன் அல்ல. ஆனால் அல்லும் பகலும் எழுத்து மட்டுமே ’தான்’ என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கவே அவன் பாடுபட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை ஒரு நாளும் மறவாதீர்.

புணர்ந்துகொண்டிருந்த ஆமைகளைக் கொளுத்தும் வெயிலில் பிரித்து மல்லாக்கப்போட்டவர் ஹெமிங்வே என்கிற நிஜவாழ்வு நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டதாக பலவருடம் முன்பு விக்ரமாதித்யன் கூறியது நினைவுக்கு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியை நீங்கள் இப்போது கேள்விப்பட்டுவிட்டீர்கள். இனி இது உங்கள் நினைவில், விக்ரமாதித்யன் சொன்னது என்னில் தங்கியதுபோல் உங்கள் மனத்திலும் தங்கிவிட வாய்ப்புண்டு. அதனால், கடலும் கிழவனும் அல்லது இண்டியன் கேம்ப் படித்து முடித்ததும் பேச்சு மூச்சற்று ஸ்தம்பித்தது இல்லையென்று ஆகிவிடுமா?

இரண்டில் எது உண்மையான ஹெமிங்வே? இரண்டும்தான்.  

ஓர்மையற்று...

சித்திரங்களை
வரையாதீர்

வரைந்துவிட்டு
கலைக்காதீர்

கலைத்துவிட்டு
பின்பு
அலையாதீர்....


- விக்ரமாதித்யன்