30 July 2011

கலி முத்திடுத்து

<ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.>

<இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.>

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!
அவாவாளுக்குத் தெரிஞ்ச மந்தரத்த வெச்சுண்டு காரியத்தை ஆரம்பிச்சுட்டா அப்பறம் ஐயர்னு ஒருத்தர் இருக்கறது எதுக்கு?அப்படியில்லே, அர்க்கையாமின்னு இப்படிச் சொல்லுங்கோன்னு சம்மனில்லாம ஆஜரானாராம் கிரெடிட்கார்ட் புரோகிதர். அரெஸ்ட் பண்ணிட்டா, என்ன அநியாயம்!

அம்பிகள் மட்டுமே படிச்சிண்டு இருந்த கல்கி குமுதம் விகடன்லாம் கூட எல்லாரண்டையும் ரீச்சாறத்துக்கு என்ன பண்றது, சர்குலேஷனை எப்படி இன்ப்ரூவ் பண்றதுன்னு கார்த்தாலை சாயங்காலம் மீட்டிங் மீட்டிங்னே போட்டுண்ட்ருக்கா. ஆனா பாருங்கோ அவாளொடதெல்லாம் கமர்ஷியல் இண்டரஸ்ட்.

ஸ்ரார்த்தம்னு வாத்யாருக்கு சொல்லி அனுப்பிண்ட்ருந்தது அந்தக்காலம். அக்ரெஸிவ் மார்க்கெட்டிங் யுகம்னா இது. அசமஞ்சமா இருந்தா முடியுமோ? அதுலையும் இந்த ஜூவிக்காரன் இருக்கான் பாருங்கோ செத்த நேரம் குண்டிய ஒரு எடமா ஒக்காரவிட மாட்டேன்றான். அவனும்தான் என்ன பண்ணுவான்? மூணுநாளைக்கு ஒருக்கா ரொப்பிண்டே இருக்க வேண்டிருக்கே.

நாள் நட்சத்திரத்தை செல்ஃபோன்ல கீ பண்ணி வெச்சுண்டூட்டா கரெக்டா ஒரு நா மின்னாடியே அலர்ட் கொடுத்துடறது. என்ன ஒரு அபிமானம்னு ஆத்துக்காராளே ஆச்சரியப்படறாப்ல டாண்ணு காரியத்துக்கு ஆஜராயிட முடியறது. சேச்சுவண்ட சொல்லி, அடுத்த தடவை வரப்போ ஐபேட் கொண்டாரச்சொல்லணும். எல்லாக் காரியமும் அதுவே பண்ணிடறதாமே! 

கலி முத்திடுத்து. 

சீனாமேல திருஷ்டி வெச்ச கம்யூனிஸ பகவான் இண்டியாவை எப்போ டேக்கோவர் பண்ணப்போறாரோ அவருக்கே வெளிச்சம். அதுவரைக்கும், சர்வபரித்தியாகத்தோட இருக்கறவா நாம்ப மட்டும்தான், பகவானை ஏளப்பண்ண ஏத்தது நம்ப கட்சி மட்டும்தான்னு ஓதிண்டே இருக்கணும். தட்டுல போடற தட்சணை அதுக்குத்தான். தாராளமா போடுங்கோ.