01 July 2011

சும்மா இருக்கக் கத்துக்கணும்

காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவாகத்தானிருக்கும் என்று ஆருடமாய் உளறுவேன். பிறகொருநாள் எச்சிலாய்த் துப்பியதை ஹிஹிஹி என்றபடி வழித்து நக்குவேன்.

<ஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக்காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக்காலகட்டத்தின் இலக்கியமதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் மறக்கப்படும். இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும். அதன்பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும்>


*****

8:31 PM என்ன கொடுமை சார் இது :(
me: முத்திடுச்சா:)))
8:32 PM *****: ஆமாம் போலத்தான் தெரியுது :)
me: இந்தாள் கெடந்துக் கூவக் கூவ அந்தாள் கவித்துவமே இல்லாமக் கட்டுரை கட்டுரையா எழுதிகிட்டு இருக்கார்.
*****: அதே அதேதான் :)

*****

பீம்சிங் படங்கள் போல கதைகள் எழுதும் ஜெயமோகனால் எதையுமே அசட்டு மிகையுணர்ச்சி இல்லாமல் சொல்ல முடியாது போல. அது உளறலாய் நமக்குத் தோன்றினால் பாவம் அவர் என்ன செய்ய முடியும்?

*****

மேற்படி 29-05-2011 அன்று தூத்துக்குடி இலக்கிய ஆவி எழுப்பும் கூட்ட உளறலுக்கு நான்கு நாள் முன்பாக திருப்பரப்பு June 26th, 2011 என்று தேவதேவன் ஒரு பாராட்டுக் கட்டுரையைக் கவிதை வடிவத்தில் எழுதிருந்தார். 

SATURDAY, JUNE 25, 2011

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய் 
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து

போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார் 
யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?

அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?

சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும்
பெருங்கருணை 

இந்த ஸ்தல புராணக் கவிட்டுரை எதற்காக எழுதப்பட்டது? 

தேவதேவனுக்கு ஜெயமோகன் நடத்திய திற்பரப்பு March 1st, 2011 கவிக்கூட்டத்திற்கு தேவதேவன் செய்து அருளிய பதில் மரியாதை. 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு காணாக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரும் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஜெயமோகப் பேராளுமையின் வாசகப் பேராளுமைகள்.

முதல் மரியாதையும் பதில் மரியாதையும் மாறி மாறி செய்து கொள்ளப்படுவதைப் பார்த்தால் திமுகவின் ஆரம்ப நாட்களை நினைவு படுத்துகின்றன. பட்டங்கள் இல்லாமல் ஒருவரும் பிறந்ததே இல்லையோ என வியப்பளிக்க வைத்த காலகட்டம்.

சொல்புதிது இது ஜெயமோகனின் இன்னொரு தளம் போலும். அதன் தலையில் இருக்கும் தோரண வாசகம். 

சொல்லிற் பயனில சொல்லற்க

இதை உலகிற்குச் சொல்வதைவிட சுயத்திற்குச் சொல்லிக் கொண்டால் எல்லோருக்கும் நல்லதாக இருக்கும்.

ஜென் கதை சீனக்கதை குட்டிக்கதை என்று ஆன்மீக இலக்கியக் காலட்சேபம் நடத்துபவர் அவையாவும் அடிப்படையில் போதிப்பது ஆர்ப்பாட்டமின்றி ’சும்மா இருக்கும் சுகம்’ என்பதை அறியத் தவறிவிடுகிறார். 

சும்மா இருக்கக் கத்துக்கணும் - இந்த 
உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்