18 July 2011

கவிதையும் கவிஞனும்

எதையோ தேடிப்போனவன், Ayyanar V பஸ்ஸில் இடறி ஏற, விக்ரமாதித்யனின் இந்தக் கவிதையைக் கண்டதும் துணுக்குற்றேன்.

மழை அழகானது
நான்
சமவெளியில்...

- விக்ரமாதித்யன்
விமலாதித்த மாமல்லன் - @Ayyanar V: அது மழையா? மலையா? மலைக்கும் சமவெளிக்கும்தானே தொடர்பு. மழை எல்லா நிலப்பரப்பிற்கும் பொதுவானது இல்லையா? விக்ரமாதித்யன் இப்படி எழுதி இருப்பாரா? அவரிடமே கேட்கிறேன்.Edit11:59 am 

Ayyanar V - மாமல்லன், நம்பியின் சில குறுங்கவிதைகளை உங்கள் பக்கத்தில் படித்த நினைவு. இந்த கவிதைகூட இருக்கிறது. மலையாக இருந்தாலும் பொருள் மாறாதென்றே நினைக்கிறேன். சமவெளியில் இருக்க வாய்த்துவிட்டால் எல்லாமே அழகுதானே.12:04 pm
*****

கவிதையை அணுகும் போது கவிஞனின் ’மொழி கையாளலும்’ கவிதையின் தொனியும் முக்கியம். விக்ரமாதித்யனின் அடிப்படை தொனியே வாழ்க்கை தன்னை வஞ்சிக்கிறது அல்லது தான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான். அதன் சரி தவறு பேசுவது ரசிகனாக என் வேலையில்லை. 

மலை அழகானது

நான் (ஆனால் நான் வாழ நேர்ந்திருப்பதோ அல்லது விதிக்கப்பட்டிருப்பதோ)

சமவெளியில்...

அழகான மலையில் வாழவேண்டிய - கவிஞனாய் கலாரசிகனாய் மலையில் வாழ்வதற்கான எல்லா தகுதிகளும் உடைய நான் சமவெளியில் வாழ்கிறேன்.

இன்னும் சில கவிதைகள் படிக்க http://www.maamallan.com/2011/03/blog-post.html

என் தலையெழுத்து, ரசிகனாக நான் சரியாகவே இருக்கிறேன். ஆனால் தட்டச்சுக்காரனாய் தரித்திரம் பிடித்த பிழை செய்பவனாய் இருக்கிறேன். அதனால்தான் மலையை, மழை என்று தட்டச்சி இருக்கிறேன்.

மலையா - மலையா என்பதை நம்பியிடம் கேட்டு *மலை* என்று உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் குசும்பாக ‘ஒருவேளை ஊறுங்காலம்’ தொகுதியிலேயே பிழையாய் ’மழை’ என அச்சடிக்கப்பட்டுள்ளதோ எனக்கேட்டேன்.

இல்லப்பா ஊறுங்காலத்துல மலைனுதான் இருக்கு நீதான்.... என்றார் தீர்மானமாக.