10 July 2011

அவதூறு - கதை சொல்லவா

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - அவதூறு

நூறுசதம் மாமி உள்நாட்டில் இருக்கும்போதே பிழிந்த வடாம்: 

“நண்பனை ஓரினச்சேர்க்க்கையாளன் என்று அவதூறு சொல்லித் திருந்தவன் ”. 

அப்போதே அளித்த பதில், முதுமையின் மறதியில் கழண்டு விட்டது போலும். வயோதிக வாலிப நெடுமுடிவேணு முக்காட்டை விலக்கி புதிய நண்டு பிடிப்பாய் இப்போது வாய்மலர்ந்தருளுகிறது. ஐம்பது பர்ஸெண்ட் மாமாவின் வெளிப்பாட்டில் வார்த்தை வித்தியாசப்பட்டாலும் விஷயம் அதேதான்.

பிரஸ்தாபிக்கப்படும் ’நண்பர்’, இணையத்திற்கு வந்த புதிதில், ‘உறவு தொடர்பாக’ தம்மை ஓரினச்சேர்க்கையாளன் என ஃபேஸ்புக்கில் அறிவித்துக் கொண்டது அறியா அறிவிலியே சரித்திரம் படி! புரிந்துகொள்! பிறகு போராடு! எவனோ எழுதிக் கொடுத்த போஸ்டரைத் தூக்கிக் கொண்டு துள்ளுவதைப் புரட்சி எனப் புரட்டாதே!

பெண் அரசியவாதிக்கும் அவரது சிநேகிதிக்குமான நட்பை, பாலியல் ரீதியில் இணைத்து விமர்சகர் எழுதப்போக, நீயே தன்பால் சேர்க்கையாளனாக இருந்துகொண்டு ’அதே’ காரணத்திற்காக அடுத்தவரை எப்படி விமர்சிக்கப் போயிற்று என்று இணையம் விழி உருட்டியதில், ஃபேஸ்புக்கில் இருந்து, முகக் காப்பாற்றலாய் ‘தன்பால் சேர்க்கை’ நீக்கப்பட்டது என்பதைக்கூட அறியா மெளடீகத்திற்கு ஏன் இத்துனை ஒப்பனைமுடி? 

தரவாக ஏதும் தந்து நிரூபிக்க முடியாத, என்றோ சொன்ன ’என் வார்த்தை’ சத்தியமும் ஜீவனுமுள்ளது என்பது, பல்லாண்டுகள் கழித்து எப்படி தன்னால் நிரூபணமாகியது? என்னிடம் பொய்யில்லை என்பதை நீ அறிவாய்! ஒருநாள் உன் பிணமும் அறியும்.

அறுத்துக் கட்டும் ஸ்பெஷல் அட்வைஸருக்கு பதில் சொல்லியே நம் தாலி அறுந்துவிடும் போல இருக்கிறதே!

நண்பனின் மனைவிக்கு இடம் வாங்கி அழைத்ததல்ல ’காரிய மறதி’ மண்டூகமே! மறதி, பாடை எடுக்கப்பட்ட நடுவீடாய் உன் வாழ்வின் பல்லாண்டுகளையும் கழுவித் துடைத்துவிட்டதா அல்லது எதிரியை வீழ்த்த எண்ணி வயோதிக நாணில் இருந்து விடுபட்ட அம்பு ஒழுகி, எய்தவன் காலையே காயப் படுத்துவதுகூடத் தெரியாத அளவிற்கு கும்பல் கலாச்சாரக் குளவிக் கூச்சலில் மெய் மரத்துவிட்டதா?

”அந்த முகத்தில் இன்னும் கொஞ்சம் கவிதை மிச்சமிருக்கிறது” இந்த வாசகம் நினைவிருக்கிறதா? 

‘அவளைக்’ குறித்து இதை எவனோ சொன்னான் என நான் சொன்னதை, சந்திக்க நேரும்போதெல்லாம், திரும்பத் திரும்ப சொல்லு சொல்லு என, கிழ ஜாடியும் இள மூடியும் எத்துனை முறை கேட்டுச் சிரித்திருக்கும் என்பதற்குக் கணக்கு உண்டா? இன்று ’அதுவே’ புறம் பேசுதலாகிறது. ’புறம் பேசுதலை’ அகமகிழ்ந்து அனுபவித்து ரசித்தல் மக்கள் கலை இலக்கியம் சார்ந்த மார்க்ஸீய லெனினீய நக்ஸலீய அறம் போலும்.

எவன் வேண்டுமானாலும் இவன் வாயில் விழுந்து எழும் வாய்ப்பு உண்டு - நாம் உட்பட, என்பது எனது அத்துனை நண்பர்களும் அறிந்ததே. இதில் ஒளிவு மறைவில்லை, இருந்தும் என்னை எப்படி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது எனக்கேப் புதிர்! புல்தடுக்கி பயில்வான்தான் இதை விடுவிக்கப்போகிறா?

அடுத்த ‘அவதூறு’

மணவாழ்க்கையில் இருந்த காலத்திலும், சந்திக்க நேரும்போதெல்லாம், அப்போது யாருடன் ‘உறவில்’ இருக்கிறாள் என்று பட்டியலிடும் பல்லாண்டுகளாய் சிநேகிதியாக இருந்த ’அவளிடம்’, பல வருடங்கள் முன்பாக ஒரு நாள் நான் கூறியது.

யார் யாருடனெல்லாம் படுத்தேன் என்கிற பட்டியலை வாசிப்பதற்கான மன்மத லீலை ஈஸ்வர ஐயராகவே என்னை வைத்திருக்கிறாயே, எனக்கு ஜூனியர் சப்-ஜூனியர் எல்லாம் உன் பட்டியலில் இருக்கையில் நான் மட்டும் என்ன பாவம் செய்தேன். இதை கேட்டு ‘அவளே’ சிரித்துவிட்டாள்.

என்பதைச் சொல்லக் கேட்டு, அப்போதும் அதற்குப் பின் பலமுறையும் சொல்லச் சொல்லிக் கேட்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு புரண்டு சிரித்த ஆசனவாய் அதே இடத்தில்தானே இருக்கிறது? குனிந்து அந்த வாய்க்குள் சொருகிக் கொண்டிருப்பது போன்ற, விசேஷ கூட்டத்தார் போடும் படத்தில் இருப்பது உன் சொந்தத் தலையா? அல்லது, அவளிடம் கேட்டதை ’அறமா?’ என்று இப்போது கேட்கிற வாயில் இருப்பது என்ன அரை பாட்டில் ரம்மா?