11 July 2011

பிராமணார்த்த எண்டர்தட்டி ரெண்டு கவிதைகள் பார்ஸேல்

காமாட்சியை வரைந்தாலும் 
ஏன் பாப்பாத்தி சாயலிலேயே 
வ ரு கிறது?
பார்த்து ஜொள்விட பாப்பாத்தியும் 
ச்சும்மா பப்ளிசிட்டிக்கு அடிக்கப் பாப்பானும் 
அத்யாவசியம் 
கற்பனை என்றாலும் கற்சில என்றாலும் 
பிராமணா உனை மறவேன்!

*****

இந்து ஞான மரபில், 
முக்கியமான கோவில்களில், 
சட்டை கழற்றலை 
இன்றும் கட்டாயமாக்கி 
வைத்து இருப்பதன் 
தாத்பரியம் என்ன? 

இப்படிக்கு 
அக்னிஹோத்ரம் ராமமூர்த்தி ஷர்மா
என்பது போன்ற பெயரில்
ஜெயமோக காலட்சேபியிடம் கேட்டு 
புரட்சி பீஷ்மருக்கு விளக்கக் கூடாதா? 

உன்னை அவமானப்படுத்த 
உண்டாக்கிய சடங்கைக் கர்மசிரத்தையாய்ப் 
பின்பற்றுவதில் உனக்கென்ன
அப்படியொரு 
சந்தோஷ சாஷ்டாங்கம்?

சட்டத்தை மாற்ற முயல்வதை விட்டு
சட்டநாதனிடமும் சட்டை கழற்றியதைப்
பெருமையாய்க் 
குடும்பத்தோடு கோஷிக்கிறாயே
தர்மா!
ஜட்டி மட்டும்
என்ன பாவம் செய்தது?

முதலில் யோசி பின் கோஷி!