07 July 2011

இருக்கும்போது...

புகழின் உச்சியில் இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில், திடீரென ஒரு கேள்வி உதித்ததது. வீட்டில் இருந்தபடியே நண்பர்களின் தொலைபேசி நம்பர்களை சுழற்றத் தொடங்கினார். வெவ்வேறு குரல்களில் எல்லோருக்கும் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். 

செய்தி: ’இவர்’ காலமாகிவிட்டார் என்பதுதான்.

செய்தி கேட்ட கொஞ்ச நேரத்திலேயே ஓடோடி வந்து ஹாலில் சிரித்தபடி உட்கார்ந்திருந்தவரைப் பார்த்துக் கதறி அணைத்துக் கொண்டவர் கேட்டார்.

என்ன விபரீத விளையாட்டு இது?

இறந்தபின்பு எனக்கு எவ்வளவு நண்பர்கள் இருப்பார்கள் என்று இருக்கும்போதே தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது, அதனால்தான் என்று கூறி, வந்தவரை அருகில் இருத்திக் கொண்டார். 

அன்று முழுக்க அந்த வீட்டிற்கு வந்த ஒரே ஆளாக அவர் மட்டுமே இருந்தார்.

விபரீதமாய் விளையாடியவர்: கண்ணதாசன்
விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தவர்: விஸ்வநாதன்

பள்ளிப்பருவத்தில், புதுச்சேரி கம்பன்விழாவில் இதைக் கண்னதாசனே சொல்லக் கேட்டது இன்னும் கவிதைபோல ஒலித்துக் கொண்டு இருக்கிறது.