14 July 2011

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ



fromanbu.chezian saravanan saro_anbu@yahoo.co.in
tomadrasdada@gmail.com
dateThu, Jul 14, 2011 at 4:27 PM
subjectஅன்புள்ள மாமல்லன்,
signed-byyahoo.co.in

அன்புள்ள மாமல்லன்,

உங்களின் இணையதளத்தை தினமும் படித்து வருகிறேன். எள்ளலும் நையாண்டியுமாய் பதிவுகள் அருமை. அதுவும் என்னைப்போல மேநாட்டு மென்பொறியியல்(MNC ) நிறுவனங்களில் வேலை செய்யும் பிழைப்புவாதிகளுக்கு உங்களைப்போன்றவர்களின் இலகுவான எழுத்துக்கள் ஒரு ஆறுதல் இடைவேளை.

ழார் பத்தாயின் குதிரை - கதையை படித்தேன்.
நல்ல முயற்சி.என் வாழ்த்துக்களை எழுதியவருக்கு சொல்லிவிடுங்கள். மேலும் உங்கள் எழுத்துக்கள் அதிகமும் ஜெயமோகனை மட்டம் தட்டுவதிலேயே குறிக்கோளாய் இருக்கின்றன. இது உங்களின் நேர விரயம் அன்றி வேறென்ன?

உங்களிடமிருந்து இன்னமும் அதிகம் வீரியமுள்ள படைப்புகளை எதிர்பார்க்கிறோம். சர்ச்சைகளை அல்ல.

இது நிச்சயமாய் அறிவுரை அல்ல.உங்களை வாசிப்பவனின் வேண்டுகோள்.

நன்றி.

பேரன்பு,
சரவணன்,

அன்புள்ள சரவணன். சரவணன் என்ற பெயரில் கடிதம் எழுதும் நபர் உண்மையிலேயே இருக்கிறார் என்பதை என்னை நம்ப வைத்ததற்கு நன்றியாக உங்களுக்கு இந்தப் பாடல்.
Gnana pazhathai, pazham neeyappa - ஞானப் பழத்தை, பழம் நீயப்பா 
Movie - thiruvilaiyadal திரைப்படம்: திருவிளையாடல்
Singers: K.B. Sundarambal பாடியவர்: K.B. சுந்தராம்பாள்
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan, B. Ramamoorthu இசை: K.V. மஹாதேவன்
Year:

ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் 
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான் 
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த 
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ 
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால் 
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா 
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரன் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு 
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் 
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

நன்றி: http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/thiruvilaiyadal/gnana-pazhathai.php